முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் தீவிர போக்கை கண்டித்து தமிழக
இளைஞர் ஒருவர் கூடலூரில் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக தீக்காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட செல்வ பாண்டியன் எனும் குறித்த நபர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவர் தீக்குளிக்கவில்லை எனவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மை எரிக்க முற்பட்ட போது தீக்காயம் அடைந்தார் எனவும் காவற்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உருவபொம்மை எரிக்க முற்பட்ட சம்பவத்தின் போது அதை தடுக்க முயன்ற காவற்துறை அதிகாரி ஒருவரும், மேலும் மூன்று பேரும் தீக்காயம் அடைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை கேரள இளைஞர்கள் சிலர் எரிக்க முற்பட்ட சம்பவத்திற்கு கேரள அரசு மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று நண்பகல், கம்பம் நகரில், கேரள அரசை கண்டித்து அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏலத்தோட்டங்களில் வேலை செய்ய்டும் கூலித்தொழிலாளர்கள் 500 பேர் கேரள பகுதியில் உள்ள சேத்துக்குளி எனும் இடத்தில் சிறைபிடிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேனி மாவட்ட எல்லை பகுதிகளான கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமளி மெட்டு ஆகிய மூன்று சோதனை சாவடிகளில் காவற்துறையனர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த இடங்களுக்கு அயல் பிரதேசங்களில் வன்முறை, கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment