நிற்கவைத்து தலைக்கு பின்னால் சுடும் மரண தண்டனைக்கு முதல் நாளிரவு சீனப்பெண் கைதிகளின் வாழ்க்கை! (படங்களுடன்) |
சீனாவின்
சிறைச்சாலை ஒன்றில் கடந்த 2003ம் வருடம், ஜூலை 24ம் திகதி
படம்பிடிக்கப்பட்ட இப்புகைப்படங்கள், மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பெண்
சிறை கைதிகளை பற்றியது.
போதைவஸ்துக்கள் கடத்திய குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இப்பெண்களுக்கு, குறித்த நாளின் மறுதினம் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக அவர்களது இறுதி இரவை எப்படி கழித்தார்கள் என இப்புகைப்படங்கள் காண்பிக்கின்றன. காவற்துறையினருடன் சிரித்து உரையாடுதல், காட்ஸ் விளையாடுதல், இறுதி உணவு அருந்தல், தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக தமக்கு விருப்பமான ஆடையை தெரிவு செய்தல், மறுநாள் அதிகாலை தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுதல் என இப்புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மரணதண்டனை பற்றிய உணர்வுகளை கண் முன் நிறுத்துகின்றன. டாக்குமெண்டரி ஒன்றுக்காக பொதுமகன் ஒருவரால் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்புகைப்படங்கள், சீனாவில் பெண் சிறைகைதிகள் நடத்டப்படும் விதம் குறித்து அனுதாப அலைகள் எழுந்து விடும் என்ற காரணத்தினால், இதுவரை வெளியிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் கடந்த வாரம், ஹாங்காங்கின் ஒளிபரப்பு சேவையான Phonix தொலைக்காட்சி இப்புகங்களை வெளியிட்டது. பின்னர் மெயில் ஆன்லைன் இணையத்தளமும் பிரசுரித்திருந்தது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை விஷ ஊசி ஏற்றி கொல்வதோ, தூக்குத்தண்டனை மூலம் நிறைவேற்றப்படுதலோ அல்ல. நிற்கவைத்து, பின்னாலிருந்து தலைக்கு பின்புறமாக சுடுதல். ஒருவர் பின் ஒருவராக இவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகின் அதிகமாக மரணதண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளில் ஒன்றான சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் முறைக்கும் கடுமையான எதிர்ப்பிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. |
Tuesday, December 6, 2011
நிற்கவைத்து தலைக்கு பின்னால் சுடும் மரண தண்டனைக்கு முதல் நாளிரவு சீனப்பெண் கைதிகளின் வாழ்க்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment