Wednesday, January 25, 2012

விஜய் இனி நன்பேண்டா!



விஜய் வாழ்கையில் செய்த மிகப்பெரிய சாதனை, 3 Idiotsன் remakeஆன நண்பன் படத்தில் நடித்ததே. இதுவரை விஜய் நடித்ததில் இதுவே சிறந்த படம். இது போன்ற characterல் விஜயை பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  என்னடா ஒரே விஜய் புராணம் பாடுரான், இதுல எதோ உள் குத்து இருக்கோன்னு யோசிக்கிறீங்களா?  அப்டியெல்லாம் எதுவும் இல்ல, நல்ல படம் யார் நடிச்சாலும் அதை வாழ்த்துறது தானே தமிழ் பண்பாடு. சரி படத்துக்கு வருவோம். Original Scriptன் சிறப்பும், தன்மையும் மாறாமல் அப்படியே கன கச்சிதமாக எடுத்திருப்பதில் ஷங்கரின் அனுபவம் வெளிப்படுகிறது. இருந்தாலும், ஜெயம் ராஜா செய்யும் வேலையை ஏன் ஷங்கர் செய்தார் என்பது தான் தெரியவில்லை.  

பாடல் காட்சிகளில் ஷங்கரின் touch தெரிகிறது. ஸ்ரீகாந்த், ஜீவா இருவரும் அருமையான தேர்வு. தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சத்யராஜ், அனுபவம் பேசுகிறது. கிடைத்த Gapல் கெடா வெட்டி போங்கல் வைத்துள்ளார்  சத்யன். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிபதிவும், ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசையும் சிறப்பு. பாடல்கள் நன்று. இலியானவிர்க்கு வாய்ப்பு கம்மி. மொத்தத்தில்,  இது போன்ற சிறந்த படங்களையே தேர்வு செய்து நடித்தால், இதுவரை விஜயை பிடிக்காதவர்களுக்கும் இனி விஜய் நன்பேண்டா தான்.
கவுண்டர் Touch :
கவுண்டர் :
I am very Happy! படம் ரொம்ப நல்லாருக்கு. 
சூர்யா:
Actually, இந்த படம் நான் நடிக்க வேண்டியது, ஜோ கூட டைம் ஸ்பென்ட் பண்றதுக்காக இந்த படத்தை விட்டு குடுத்துட்டேன்.
கவுண்டர்:
வாடா ஓட்ட வாய் நாராயணா. நான் அப்பவே நெனச்சேன், Silencer குசும்பன் characterla நீ  நடிச்சிருந்தா naturalaa இருந்திருக்குமேன்னு,  சத்யன் உன்னவிட நல்லா நடிச்சி பேர் வாங்கிட்டான். இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா
சூர்யா:
No No! Actually Vijay Characterக்கு ஷங்கர் என்னதான் first approach பன்னார்.
கவுண்டர்:
சரி நாயே, கல்கண்டு தட்டெல்லாம்  இருக்குது எச்சி ஊத்தாத, டூ ஸ்டேப் தள்ளி நில்லு. அப்புடியே ஆத்தோரமா போனீனா உங்கப்பன் நண்டு வறுத்து தின்னுகிட்டே கம்பராமாயணம் கதை சொல்லுவான், அதையே ரீமேக் பன்னி ஹரி direction நடிச்சிரு.
சூர்யா:
Actually  ஜோ .....
கவுண்டர்:
படுவா ஜோ ஜோன்னே SJ சூர்யா கிட்ட புடிச்சி குடுதிருவேன். Half டவுசர, Full Phanta போட்டுக்கிட்டு நாய்க்கு லவுச பாரு.

my blog recent