Friday, January 13, 2012

அனுஷ்காவும் ஹன்சிகாவும் என்னைத் தேடி வருவாங்க!



'ஆனந்தத் தொல்லை,’ 'இந்திரசேனா’, 'மன்ன வன்’, 'மூலக்கடை முருகன்’, 'சுரங்கப்பாதை’, 'நீதானா அவன்’, 'தேசிய நெடுஞ்சாலை’, 'படைத் தலைவன்’, 'சீனு எம்.ஏ.பி.எல்’.... இதெல்லாம் 'விகடன் வரவேற்பறை’க்கு வந்த குறும்படங்கள் பட்டியல் அல்ல... பவர் ஸ்டாரின் ஒன்பது மிரட்டல் அஸ்திரங்கள். கொல வெறியுடன் இருந்தவரைச் சந்தித்து மீண்டதில் இருந்து...
''பொங்கல் ரிலீஸில் 'நண்பனுக்குப் போட்டி ஆனந்தத் தொல்லை’னு நீங்களே கிளப்பிவிடுறீங்களே... இது உங்களுக்கே ஓவராத் தெரியலையா?''
''அம்மா மேல சத்தியமா என் ரசிகர்களோட அன்புத் தொல்லை காரணமாகத் தான் ஆனந்தத் தொல்லையை ரிலீஸ் செய்றேன். பவர் ஸ்டார் பாசறைப் பசங்களோட பாசத்துக்குக் கட்டுப்பட்டவன் நான். 'விஜய்க்கு சவால் விட்டு ரிலீஸ் பண்ணு தலைவா’னு அவங்க வற்புறுத்துனாங்க. நம்புங்க... இதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு! ஆனா, விஜய் தம்பி என்னை போட்டியா நினைக்க மாட்டாருனு நினைக்குறேன்!''
''ஆக்ச்சுவலா என்னதான் உங்க பிளான்... ஏன் இப்படி பேப்பர்கூடப் படிக்கவிடாம டார்ச்சர் கொடுக் குறீங்க?''
''என் படத்தோட பேப்பர் விளம்பரங்களை வெச்சு நீங்க என்னைக் கலாய்க்கிறீங்கனு நினைக்கிறேன். ஆனாலும் பரவாயில்லை! இப்போ நான் நடிக்கிற படங்களை நீங்க பார்த்தா மனசை மாத்திக்குவீங்க. 'சீனு எம்.ஏ.பி.எல்.’ படத்துல வக்கீலா வந்து அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறேன். 'ஆனந்தத் தொல்லை’யில் கொடூரமான வில்லனா வர்றேன். (கொடூரமான வில்லனா... வில்லத்தனமான கொடூரனா?) 'மன்னவன்’ படத்துல ரொமான்டிக் ஹீரோ ரோல்ல மிரட்டி இருக்கேன். 'சுரங்கப்பாதை’யில என் ரோல் என்னன்னு கண்டு பிடிக்கிறவங்களுக்கு கால் பவுன் தங்கச் செயின் கொடுக்கலாமானு யோசிச்சுட்டு இருக்கேன்!''
''திட்டம்லாம் ஓ.கே. ஆனா, 'லத்திகா’ பட போஸ்டரை மாடுகூடத் திங்கலை... ஆனா, படத்துக்கு 200-வது நாள் கொண்டாட்டம்னு போஸ்டர் அடிக் கிறீங்க... ஏன் சார் இப்படி?''
''கலாய்க்கிறீங்க... சென்னை மகாலட்சுமி தியேட்டர்ல லத்திகா 150 நாள் ஓடுச்சு. அத்தனை நாளுக்கும் அந்தத் தியேட்டருக்கு வாடகையும் கரன்ட் பில்லும் நான் கொடுத்த ஆதாரம் இருக்கு. சொந்தக் காசு போட்டு டிக்கெட் வாங்கினது எல்லாமே ரசிக செல்லங்கள்தான். நம்புங்க... ப்ளீஸ்! இந்த வருஷம் என் ரசிகர்களைவெச்சு பெரிய மாநாடு நடத்தப்போறேன். அப்போ நிறைய அதிரடி காத்திருக்கு!''
''ட்விட்டர்ல இருக்கும் ActorPOWERSTAR  நீங்கதானா?''
''நானேதான் சார். ரசிகர்களுடன் நெருக்கமா இருக்கணும்னு ஆசை. அதான் கத்துக்கிட்டு களம் இறங்கிட்டேன். ட்விட்டர் அக்கவுன்ட் மூலமா ரசிகர்கள் என்னைப் பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க முடியுது. 'மயக்கம் என்ன’ பார்த்துட்டு நம்ம செல்வராகவன் தம்பிக்கு 'நாம சேர்ந்து யூத்தா ஒரு படம் பண்ணலாம்’னு ட்வீட் பண்ணியிருந்தேன். தம்பிக்கு என்ன வேலையோ? இதுவரை பதில் சொல்லலை! இதை நான் சீரியஸாவே சொல்றேன்னு போட்டுக்கங்க.''
''மிஸ் பண்ணிட்டோமே... நாம நடிச்சிருக்கலாமே’னு நீங்க நினைச்ச படம் எது?''
''எந்திரன்!''
''சார்... சரியாத்தான் பேசுறீங்களா... ரஜினி நடிச்ச 'எந்திரனா’?''
''ஆமா.... ரஜினியோட எந்திரனேதான் சார்... இப்போ தனுஷோட 'மயக்கம் என்ன’ மாதிரி ஒரு ரோலுக்காக வெயிட் பண்றேன். யாராச்சும் அப்படி ஒரு கதையோட வந்தா, காலவரையற்ற கால்ஷீட் தர நான் ரெடி!''
''த்ரிஷா, ஹன்சிகா, ரிச்சா, அனுஷ்கா, அமலா பால் மாதிரியான ஹீரோயின்களோட எப்போ நடிக்கப்போறீங்க?''
''ஒய் திஸ் கொலை வெறி சார்... சங்கவியை ஃபிக்ஸ் பண்றதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு. அனுஷ்கா, ஹன்சிகாவுக்கெல்லாம் எங்கே போவேன்? ஆனா, என் ஒன்பது படங்களும் ரிலீஸ் ஆனதும் நான் மாஸ் ஹீரோ ஆகிடுவேன்... இதே கேள்வியை அவங்ககிட்ட கேட்பீங்க... அப்போ இது நடக்கும்... நடக்க வைப்பேன்!''

Thursday, January 12, 2012

Nanban Irukkana illaiyana Full Video Song from CineRain.com



posted by ctech52.blogspot.com

ந‌ண்ப‌ன் -‍ எல்லோருக்கும்(karki)


 அலுவ‌‌ல‌க‌த்திலே அவ‌ன் தான் சுமாரான‌வ‌ன். க‌ட்ட‌ம் போட்ட‌ ச‌ட்டை, ப‌ச்சை க‌லர் பேன்ட் எல்லாம் போடுவான். ஒரு நாள் டீம் அவுட் சென்றிருந்த‌ போது பாம்பு ஒன்று வ‌ந்துவிட்ட‌து. ரோமியோக்க‌ள் எல்லாம் குருவி விஜ‌ய் போல‌ ஜ‌ம்ப் ப‌ண்ணி ப‌ற‌ந்துவிட்டார்க‌ள். ப‌ச்சை பேன்ட்தான் குச்சியால் அதை ஓர‌ங்க‌ட்டி சில‌ பெண் க‌லீக்ஸை காப்பாற்றினான். அன்று முத‌ம் அவ‌ன் தான் ஹீரோ எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில். ஹீரோயிச‌ம் என்ப‌து ஒற்றை ப‌ரிணாம‌ம் கொண்ட‌த‌ல்ல‌.அதை இன்னொரு கோண‌த்தில் காட்டிய‌ ப‌ட‌ம்தான் 3 இடிய‌ட்ஸ். இதை த‌மிழில் விஜ‌ய் செய்கிறார்‌ என்ற‌ போதே நான் சொன்ன‌து,இது ஒண்ணும் ஆஃப் பீட் ப‌ட‌ம‌ல்ல‌. இன்னொரு ஹீரோயிச‌ ப‌ட‌ம் தான், மாறுப்ப‌ட்ட‌ கோண‌த்தில்.

ஃப்ளைட் கிள‌ம்புகிற‌து. உள்ளே இருக்கும் ஸ்ரீகாந்திற்கு பாரி கிடைத்துவிட்டான் என‌ ஃபோன் வருகிற‌து. மார‌டைப்பு போல் நாட‌கமாடி இற‌ங்குகிறார். பேன்ட் போடாத‌து கூட‌ தெரியாம‌ல் ஜீவாவும் இணைகிறார். "இவ‌ன் தூர‌த்தில் பூத்திட்ட‌ அன்னை ம‌டி" என்ற‌ பிண்ண‌னி பாட‌லோடு பாரியை தேடி கிள‌ம்புகிறார்க‌ள்.பாரிதான் விஜ‌ய். இதை விடவா ஒரு மாஸ் ஓப்ப‌னிங் விஜ‌ய்க்கு அமைந்திருக்கிற‌து?
ப‌ட‌ம் முழுக்க‌வே எல்லோருக்கும் காட்ஃபாத‌ர் போல‌ இருக்கிறான் நாய‌க‌ன். "டேய் அவ‌ர் யாரு தெரியுமாடா" என்ற‌ கூச்ச‌ல் எதை செய்ய‌ வேண்டுமோ, அதை ச‌த்த‌மில்லாம‌ல் இன்னும் வீரிய‌த்தோடு செய்திருக்கிறார்க‌ள். கூட‌வே விஜ‌யின் ப்ள‌ஸ் ஆன‌ காமெடி, குறும்புக‌ள் க‌தையோடே அமைந்த‌து கொடுப்பினைதான்.
க‌தை ம‌ண்ணாங்க‌ட்டி எல்லாம் தெரிந்திருக்கும். நாம் த‌மிழில் எப்ப‌டி செய்திருக்கிறார்க‌ள் என்று ம‌ட்டும் பார்ப்போம். ஏனெனில் ந‌ண்ப‌ன் 3 இடிய‌ட்ஸின் க்ரிஸ்ட‌ல் க்ளிய‌ர் ஃபோட்டோக்காப்பி. ஆங்காங்கே லேசான‌ க‌ரும்புள்ளிக‌ள். ஆனால் அவை க‌ண்க‌ளுக்கு தெரியாம‌ல் பார்த்துக் கொண்ட‌து ஷ‌ங்க‌ரின் சாமர்த்திய‌ம். இது போன்ற‌ ஒரு ப‌ட‌த்திற்கு ஷ‌ங்க‌ர் தேவையா என்று யோசித்தேன். ஆனால் 3 இடிய‌ட்ஸ் ஷ‌ங‌க்ருக்கு ஏற்ப‌டுத்திய‌ பாதிப்பு அவ‌ரை ச‌ரியான‌ தேர்வாக‌ ஆக்கியிருக்கிற‌து. த‌மிழுக்கு ஏற்ற‌து போல் மாற்றியிருக்கிறேன் என்ற‌ ஜ‌ல்லிய‌டித்து திரைக்க‌தையில் த‌ங்க‌ள் பெய‌ர் போட்டுக் கொண்ட‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் வெறும் இய‌க்க‌ம் ம‌ட்டுமே என‌ சொல்லியிருப்ப‌து பார‌ட்ட‌த்த‌க்க‌து.
அடுத்து ச‌த்ய‌ராஜ். வேறு யாரையும் யோசிக்க‌ முடியாத‌ தோற்ற‌ம். எல்லோரும் எதிர்பார்த்த‌ தேர்வுதான். குழைத்து குழைத்து பேசி அம‌ர்க்க‌ள‌ப்ப‌டுத்தியிருக்கிறார். ப‌ட‌த்தின் ப‌ல‌ம‌ல்ல‌, ப‌ல‌வீன‌முமல்ல‌. கொடுத்து வேலையை ச‌ரியாக‌ செய்திருக்கிறார்.
ஜீவா. இந்த‌ த‌லைமுறை ந‌டிக‌ர்க‌ளில் த‌னுஷிற்கு அடுத்து என‌க்கு மிக‌வும் பிடித்த‌ ந‌டிக‌ர். விஜ‌யோடு ஒன்றாக‌ பார்த்த‌போது துள்ளினேன் நான். குறைந்த‌ ப‌ந்துக‌ளே எதிர்கொண்ட‌தால் ச‌த‌ம் ந‌ழுவிய‌ வீர‌ர் என‌லாம். என்னைப் பொறுத்த‌வ‌ரை பெர்ஃபெக்ட் காஸ்டிங் என்றால் அது இவ‌ர‌து கேர‌க்ட‌ர்தான். ஹேட்ஸ் ஆஃப் ஜீவா.
ஸ்ரீகாந்த் சிற‌ப்பாக‌ செய்திருக்கிறார். மாண‌வ‌ன் ரோலுக்கு மீசையெடுத்து, உட‌ம்பை குறைந்துக் கொண்டு ஓர‌ள‌வு  வெற்றியும் பெற்றிருக்கிறார். என்னைக் கேட்டால் ஜெய‌ம் ர‌வி போன்ற‌ யாரையாவ‌து போட்டிருக்க‌லாம்.
இலியானா. முனிம்மா க‌ல‌க்கியிருக்கிறார். இவ‌ர‌து எந்த‌ ப‌ட‌த்தையும் நான் பார்த்த‌து இல்லை. பொண்ணு சும்மா சுர்ருன்னு ந‌டிச்சிருக்கு. பாட‌ல்க‌ளில் ம‌ட்டும் ந‌ம்முட‌ன் சேர்ந்து விஜ‌யை ர‌சிக்குது.
ஹாரீஸ். பாட‌ல்க‌ள் ஹிட் என்ப‌தை தாண்டி ப‌ட‌த்தில் இருக்கிறார் ஹாரீஸ். என் க‌ண் முன்னே & ந‌ல்ல‌ ந‌ண்ப‌ன் பாட‌ல்க‌ள் காட்சிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம் தான். எங்கேயும்  உன்னாலே உன்னாலே மெட்டுக‌ளை கேட்க‌ முடியாம‌ல் இருந்த‌தே பெரிய‌ விஷ‌ய‌ம்.
கார்க்கி. பாட‌ல்க‌ளோடு வ‌ச‌ன‌மும் எழுதியிருக்கிறார். இந்தியில் ச‌க்கை போடு போட்ட‌ ச‌மாத்கார் / ப‌லாத்கார் காட்சியை அழ‌காக‌ த‌மிழ்ப்ப‌டுத்தியிருக்கிறார். என்ன‌ன்னு கேட்காம‌ நீங்க‌ளே பாருங்க‌. 2 வ‌ரியில் ஒரு சிறுவ‌ன் ஃப்ளாஷ்பேக்கை சொன்ன‌வுட‌ன் "என்ன‌டா திருக்கிற‌ள் சைசுல‌ ஃப்ளாஷ்பேக்கை முடிச்சிட்ட" என்று ர‌சிக்க‌ வைக்கிறார். “ரெண்டு காலு உடைஞ்ச‌பிற‌குதான் சார் நான் சொந்த‌க்காலிலே நிற்கிறேன்"” இன்னும் ப‌ல‌ வ‌ச‌ன‌ங்க‌ள். இன்று மாலை பார்க்கும்போது நோட் ப‌ண்ணிட்டு வ‌றேன். ஆமாங்க‌. மாலை காட்சியும் போறேன்.

விஜ‌ய். வெல். ஹ‌வ் டூ சே????? என‌க்கு விஜ‌யை பிடிக்கும்தான். ஆனால் எப்போதும் அவ‌ரை சிற‌ந்த‌ ந‌டிக‌ர் என‌ வாதிட்ட‌தில்லை. அதே ச‌ம‌ய‌ம் வ‌யித்தெரிச்ச‌ல் எஸ்.எம்.எஸ் ஆசாமிக‌ள் சொல்வ‌து போல‌ ஒரேய‌டியாக‌ நிராக‌ரிக்க‌வும் முடியாது. வேலாயுதித்தில்‌ வ‌ந்த‌ அதே விஜ‌ய். ச‌ட்டையை ம‌ட்டுமே மாற்றியிருக்கிறார். த‌லைமுடி கூட‌ மாற‌வில்லை. ஆனால் ப‌ட‌த்தில் விஜ‌ய் எவ்வ‌ள‌வு க‌ச்சித‌மாக‌ ரோலை ந‌டித்திருக்கிறார் என்று பாருங்க‌ள். அதுதான் விஜ‌ய். அவ‌ருக்கே உரிய‌ குறும்பும், காமெடியும் குஷி, ச‌ச்சினுக்கு பிற‌கு ச‌ரியாக‌ அமைந்திருக்கிற‌து. ஒரு சில‌ காட்சிக‌ளில் ம‌ட்டும் அமிர்கான் த‌ந்த‌ ரியாக்ஷ‌ன்க‌ளை த‌ர‌ முய‌ற்சி செய்திருக்கிறார். ம‌ற்ற‌ப‌டி, த‌ன‌க்கு என்ன‌ வ‌ருமோ அதை செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். நேற்று ட்விட்ட‌ரில் "சத்யன்,ஜுவா, விஜய்,சத்யராஜ், ஸ்ரீகாந்த். இந்த வரிசையில் நடிப்பு இருக்குமென யூகிக்கிறேன்" என்று சொல்லியிருந்தேன். அதை பொய்யாக்கி விஜ‌ய் வென்றுவிட்டார். கில்லி ஒரு ஆக்ஷ‌ன் ப‌ட‌ம். அதோடு இதை ஒப்பிட‌ முடியாது. ஆனால் கில்லிதான் என‌க்கு விஜ‌யின் சிற‌ந்த‌ ப‌ட‌மாக‌ இருந்த‌து. ஆம், இருந்த‌து.
ப‌ட‌த்தில் விஜ‌ய் யாரையும் அடிக்க‌வில்லை. ஆனால் ச‌த்ய‌ராஜ்,ஜீவா,ஸ்ரீகாந்த், இலியானா.. அட‌ அவங்க‌ அக்கா கூட‌ விஜ‌யை அடிக்கிறார்.அர‌ங்கில், இருக்கும் எல்லா கெட்ட‌ வார்த்தைக‌ளும் கொட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒரு வெற்றிக்காக‌ இத்த‌னை பேரிட‌மா அடி வாங்குவ‌து என‌ வ‌ழ‌க்க‌ம் போல் வ‌க்க‌னையா குறுஞ்செய்தி அனுப்ப‌லாம். ஆனால் த‌ன‌க்கென‌ இமேஜ் எதுவும் எல்லாம் இல்லையென்ப‌தை திட்ட‌வ‌ட்ட‌மாக‌ நிரூபிக்கிறார் விஜ‌ய்.
ப‌ட‌த்தின் குறைக‌ளாக‌ பார்த்தால் நீள‌த்தை சொல்ல‌லாம். அது எல்லா ஷ‌ங்க‌ர் ப‌ட‌த்திலும் இருக்கும் ஒரு குறை. ஆனால் எல்லா காட்சிக‌ளையும் க‌தையோடு பிண்ணிய‌து திரைக்க‌தை ஆசிரிய‌ரின் சாம‌ர்த்திய‌ம். ப‌ட‌ம் முடிந்த‌ பின் வரும் 5,10 நிமிட‌ காட்சிக‌ள் சில‌ருக்கு பிடிக்காம‌ல் போக‌லாம்.

நண்பன்


பொதுவாவே ரீமேக்கும் படங்கள் அதீத எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும். பெரும்பாலான ரீமேக்கிய படங்கள் ஒரிஜினல் படங்களின் நல்ல பெயரைக் கெடுத்த ஹிஸ்டரியே தமிழில் அதிகம். அதையும் மீறி, ஒரு ரீமேக்கிய படம் ஒரிஜினல் படத்தை விட நல்ல பெயர் வாங்குகிறது என்றால், ஒரே ஒரு காரணம்ஒரிஜினல் படம் அல்ட்ரா பிளாப் ஆக இருக்க வேண்டும். இந்த விதி எல்லாவற்றையும் மீறும் வரிசையும் ஒன்று இருக்கிறது. தரமான டைரக்டர் மற்றும் நடிகர் உடன் சிறந்த ஸ்க்ரீன் ப்ளே கலந்து செய்யும் படங்களுக்கான வரிசை. அதில் சமீபமாக வந்த அல்லது வர இருக்கின்ற படம், "நண்பன்".

நான் "விஜய்" ரசிகனோ அல்லது ஹால்மார்க் குத்திய விமர்சகனோ கிடையாது. எப்போதாவது மூடு மற்றும் நேரம் இருந்தால் தியேட்டருக்குப் போய் அடித்துப் புடித்தேனும் டிக்கட் வாங்கி வேறு வழியே இல்லாமல் முன் வரிசையில் எழுபது டிகிரி கோணத்தில் தலையை நிமிர்த்தி படம் பார்க்கும் அக்மார்க் அப்பாவி. ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னால் கொஞ்சம் விரிவாக (??! மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கு பந்திக்கு மேல் போகாது என நினைக்கிறேன்) எழுதப்படும் ஒரு விமர்சனம் இது. காரணம், என்னுள் எழும்பி இருந்த ஒரு நெகடிவ் தோட்'ஐ உடைத்தெறிந்த மற்றொரு படம், இந்த நண்பன்.

படத்தின் கதையை பற்றி நான் விளக்கத் தேவையில்லை. ஏற்கனவே நாம் நூறு முறை டி.வி.டி.யில் பார்த்து விட்ட அதே "த்ரீ இடியட்ஸ்" கதைதான். ஏற்கனவே ஹிட் ஆகிவிட்ட கதையை மீண்டும் எடுப்பதால் "ஷங்கர்" சொதப்பிவிடுவாரோ என்ற பயம் ஒரு பக்கம், சிங்கிள் ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் குடுத்து அடுத்தடுத்து படங்கள் விஜய் பண்ணுவதால் அவருக்காக கதையை மாற்றி சொதப்பிவிடுவார்களோ என்ற பயம் மற்றப் பக்கம் இருக்க வந்தே விட்டது, "நண்பன்". வி.ஐ.பி. ப்ரிவியூ என்ற பெயரில் படம் ஆபீசியலாகரிலீஸ் ஆவதற்கு முன்பே ரெண்டு நாளைக்கு முதல் ஒரு ஷோ போட்டு, அதற்கு சாதாரண டிக்கட் விலையை விட ஐந்து மடங்கு விலை வைத்து பணம் பறிப்பார்கள். அதில் ஒரு ஷோ'க்கு இரவு போய்த் தொலைத்தேன். டிக்கட் ஓசி தான்.

ம்ம்ம்... படம் பற்றி சொல்வதென்றால். முதலாவது விஜய். வெளிப்படையாக சொல்லப் போனால் இதுவரை விஜய் நடித்த படங்களில் மெச்சக்கூடியது இதுதான் எனலாம். நீண்ட நாளைக்கப்புறம், பூக்கள் சொரியாமல், தார தப்பட்டைகள் இல்லாமல் ஒரு இன்ட்ரோ. படம் தொடங்கியதில் இருந்து விஜய் வரும் சீன்கள் எல்லாமே அமைதியான, தன்புகழ் பாடாத, பன்ச் டயலாக் பேசாத நடிப்பில் அருமையாக கவர்கிறார். நிச்சயமாக வழக்கமான விஜய் படங்களில் அவரது நடிப்பில் கூடுதலாக இருக்கும் ஏதோ ஒன்று இந்தப் படத்தில் இல்லை. அதுவே அவரை அழகாகக் காட்டுகிறது.
அடுத்தது ஷங்கர். ஹட்ஸ் ஆப் டு ஹிம். ஒரிஜினல் படத்தின் பிரேம் பை பிரேம் காப்பியை எடுத்திட்ட போதிலும் தனது டச்சை வைத்துப் படம் இயக்கி இருப்பது கூடுதல் தைரியம். மதன் கார்க்கியின் உதவியுடன் ஷங்கரின் ஸ்க்ரீன்ப்ளே புகுந்து விளையாடுகிறது. ஜீவா'வும் ஸ்ரீகாந்தும் நடிப்பில் பின்னுகிறார்கள். இலியானா, நோ வேர்ட்ஸ். நிஜமாவே அழகினால் கொள்ளை அடிக்கிறார். சத்யராஜ், சத்யன் என எல்லாருமே அழகாக நடித்திருக்கிறார்கள்.

குறிப்பிடத்தக்க சீன்கள் நிறையவே இருக்கின்றன. ஸ்ரீகாந்த் தன் அப்பாவிடம் மனசு விட்டுப் பேசும் அந்தக் காட்சியில் கண்ணீர் வந்துவிட்டது. அதே போல செம டச்சிங் ஜீவா ஹாஸ்பிட்டலில் இருக்கும் காட்சி. "த்ரீ இடியட்ஸ்"இல் சைலன்சர் பேசும் அந்த புகழ் பெற்ற ஸ்பீச் இதில் இன்னும் சூப்பர்ப். தியேட்டரே வயிறு குலுங்க சிரித்தது. இலியானா விஜய்க்கு லிப் கிஸ் குடுக்கும் காட்சி, விஜய் "வைரஸ்'ஐ வெளியே எடு" என சொல்ல (வைரஸ் எனப் பெயரிடப்பட்ட 'கார் பேட்டரியில் இருந்து ஏ.சி கரண்ட் தயாரிக்கும் இன்வேர்ட்டர்) 'மில்லிமீட்டர்' சத்யராஜை "கெட் அவுட் சார்" எனத் தள்ளிக்கொண்டு போகும் காட்சி என டச்சிங் சீன்ஸ் ஏராளம்.

முடிவு: படம் ஓடும். ஹார்ட்கோர் விஜய் ரசிகர்கள் இல்லாதவர்களும் ரசிப்பார்கள். நீண்ட நாளைக்கப்புறம் விஜய் இடமிருந்து ஒரு அல்டிமேட் பெர்போர்மன்ஸ்.

நண்பன் – ஆல் இஸ் வெல் – ஆல்வேஸ் வெல்.


  நண்பன் பார்த்தாகி விட்டது. மனதுக்குள் ரம்மியமாக இருக்கிறது. வழக்கமான நல்ல கரம் மசாலா விஜய் படம் பார்த்து விட்டு வந்தால் இருக்கும் ஆராவாரமான ஆர்ப்பாட்ட மனநிலை அல்ல இது. இரண்டு வாரமாக கனவிலும் நினைவிலும் ஹார்ட்டிலே பேட்டரி போட்டு வைத்த எதிர்பார்ப்புகளை எல்லா வகையிலும் பூர்த்தி செய்திருக்கிறான் நண்பன். சமீப காலங்களில் யாராவது ஒரு நண்பரின் மூலமாக இன்னொரு புதிய நண்பரையோ நபரையோ சந்திக்கும் ஒவ்வொரு விஜய் ரசிகனுக்கும் இது நடந்திருக்கும். சில வேளைகளில் “இவரு விஜய் ரசிகர் தெரியுமா?” என்று போகும் பேச்சுகளின் பொழுதுகளில் “நீங்களா !!!! விஜய் பேனா… ? ஏங்க போயும் போயும் விஜய்க்கா?” என்பது போன்ற இளக்காரப் பேச்சுக்களைக் கேட்க நேர்ந்திருக்கும். விஜயைப் பிடிக்கும் என்று கூறினால் Bad Taste என்பதோ, விஜயைப் பிடிக்காது என்று கூறுவது, முகப்புத்தகத்தில் விஜயைப் பற்றி தேவையே இல்லாத அவதூறு செய்திகளைப் பரப்புவது, மார்பிங்க் செய்யப்பட்ட தவறான புகைப்படங்களைப் பதிவிடுவதுதான் ஒரு Intellectual மனோபாவம் என்று நினைக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும் “இனிமேல் யாரும் அப்படில்லாம் சொல்லவோ செய்யவோ கூடாதுடா கண்ணா” என்று சேது படத்தில் வரும் வைத்தியரைப் போல மயிலிறகால் வருடி ஒத்தடம் கொடுத்திருக்கிறான் நண்பன்
மொத்தத்தில் என் நண்பன் எப்படித்தான் இருந்தான் என்று வகைவகையாய் பார்ப்பதற்கு முன்னால் சில விஷயங்கள் பேசி விடுவோம்.
1997 – 2000 இந்த காலகட்டங்களில் பள்ளி இறுதியோ கல்லூரியோ படித்துக் கொண்டிருந்தவர்களில் தமிழ் சினிமாக்களை விரும்பிப் பார்க்கும் பழக்கம் கொண்டிருந்த எவரிடத்தில் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள், கண்டிப்பாக ஆழ்மனதின் அடி ஆழத்தில் இருந்து சொல்லுவார்கள் உண்மையிலேயே விஜய் பிடிக்குமென்று. காரணம் மூன்று முக்கிய படங்கள் 1) காதலுக்கு மரியாதை 2) துள்ளாத மனமும் துள்ளும் 3) குஷி. எனக்கு 8 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பதின்பருவத்தின் துவக்கம் அது. டைரக்டர், அப்பாடக்கர், கதை, லைட்டிங்க், வெயிட்டிங் – இந்த சங்கதிகளெல்லாம் என்னவென்றே அறியாத அந்த ஞானசூன்ய வயதில் “சுண்டு விரலால கூட தொடல பாத்தியா… ஆனா செம லவ் ஸ்டோரில்லா… விஜய்-ஷாலினி சூப்பர்ல்லா” இதுதான் நாங்கள் காதலுக்கு மரியாதை படத்துக்கு கொடுத்துக் கொண்ட “TagLine”. அந்தப் படத்தின் பாதிப்பில் நெல்லையின் ஒவ்வொரு புத்தகக் கடையிலும் போய் “அண்ணாச்சி… ‘Love and Love Only’ புக் இருக்கா” என்று கேட்டு பல அண்ணாச்சிகளின் முறைப்புக்கும் ” ஏலே… செத்த மூதி… டவுசரே ஒனக்கு இன்னும் ஒழுங்கா இடுப்புல நிக்கல.. ஒனக்கு லவ்வு புக்கு கேக்கோ லவ்வு புக்கு… சவட்டிப் புடுவேன் சவட்டி… ஓடுல… ” என்று சில அண்ணாச்சிகளின் நாக்கைத் துறுத்திய மிரட்டலுக்கு ஆளானதும் அக்காலம்தான். உண்மையைச் சொன்னால் “Amazon” முதல் “Flipkart” வரை எங்கெங்கிலும் தேடிப்பார்த்தாகி விட்டது. இன்று வரை அந்தப் புத்தகம் மட்டும் எனக்கு கிடைக்கவே இல்லை.
Nanban Movie
“என்னைத் தாலாட்ட வருவாளோ, மேகமாய் வந்து போகிறேன், மேக்கரீனா, பாப்பூ பாப்பூ” என்று சில பல கேசட்டுகளால் ரீவைண்ட்-பார்வார்டு என்று எனது Philips 2 in 1 டேப்ரிக்கார்டரை கதறக் கதறக் கற்பழித்துக் (நண்பன் எபக்ட்) கொண்டிருந்ததும் அதே காலகட்டம்தான். எனக்கு விஜய் மிக மிக அதிகமாய்ப் பிடித்துப் போனதும் இந்தக் காலகட்டத்தில்தான். அதற்குப் பிறகு ஏற்றங்கள், இரக்கங்கள் வந்து வந்து போனாலும் விஜயைப் பிடிக்கும், விஜய் படங்கள் ரொம்பப் பிடிக்கும் என்ற தன்னிலை மட்டும் மாறவே இல்லை. சுறா, குருவி, பகவதி போல் ஒரு சில படங்களைப் பார்த்த சில வேலைகளில் விஜய் கதைகளைக் கொஞ்சம் பார்த்துத் தேர்ந்தெடுக்கலாமே என்ற வருத்தம் மட்டும் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட சில நேர வருத்தங்களுக்கு ஒட்டுமொத்த வடிகாலாய் அமைந்திருக்கிறான் நண்பன்.
“நண்பனா.. அது 3 இடியட்ஸோட ரீமேக்தான?”
“ஆமா, 3 இடியட்ஸோட ரீமேக்தான். ஆனா 3 இடியட்ஸே 5 Point Someone ஓட ரீமேக் தான.”
“என்னதான் இருந்தாலும் அமீர்கான் நடிச்ச ரோல்ல விஜயா..? அதெல்லாம் சரிப்படாது… அமீர்கான்ல்லாம் யாரு”
“ம்.. மொதல்ல சொல்லு… அமீர்கான்ல்லாம் யாரு? என்னய்யா இது பெரிய அநியாயமா இருக்கு… அமீர்கான் மட்டும் பொறக்கேலயே full costume போட்டுகிட்டு மூஞ்சீல எக்ஸ்பிரஷன் காட்டிகிட்டே பொறந்தாரா… அவரும் பாத்து பழகி வந்துதான நடிச்சாரு. அப்படியே பாத்தாலும் இந்தப் படம் எப்படி இருக்கு. விஜய் எப்படி நடிச்சிருக்கார்ன்றதுதான முக்கியம்” (பாலிவுட்டிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அமீர் மட்டுமே. அமீருக்காக மட்டுமே Taare zameen par, Rang de Basanthi, 3 Idiots, Faana ஆகிய திரைப்படங்கள் ஒவொன்றையும் 4,5 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்,)
“படம் நல்லாருக்கா?”
“ஆமா. படம் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்கு. இப்ப என்ன சொல்ற”
“அப்டியா… ம்ம்ம்… ஷங்கர் படம்னால நல்லாதான் இருக்கும்….”
“ஒலக அநியாயம்டா சாமி… அப்படின்னா சுறா படம் நல்லா இல்லாம இருந்ததுக்கு எஸ்.பி.ராஜ்குமார்தான காரணம். எதுக்கு விஜய்ய சொன்னீங்க?”
“ம்ம்ம்… அது எப்படி சொல்ல முடியும்… அந்தப் படம்லாம் ஒரு படமா… தமன்னா நாய்க்குட்டிக்காக தற்கொலை பண்ண போவாளாம்… இவுரு காப்பாத்துவாராம். …”
“யேய்.. நான் சொகப்பிரசவம், கொறப்பிரசவம்னாடா கேட்டேன்… ஏன்ப்பா சம்பந்த சம்பந்தமில்லாம பேசுறீங்க. சரி விடுங்க….எந்தக் காலகட்டத்துல்லயும் உங்ககிட்ட பேசி பிரயோஜனமே இல்ல… நண்பன் படம் பாருங்கப்பா… கண்டிப்பா மாறுவீங்க”
தமிழ் சினிமாவை பிரமாண்டங்கள் மூலம் மற்றொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் பிதாமகன் பொறுப்பை தலையில் சுமந்து கொண்டிருக்கும் ஷங்கர் போன்ற ஒரு இயக்குநர், மிக எதார்த்தமான ஒரு கதை, தமிழ் சினிமாவின் ஆக்ஷன் மாஸ் திரைப்படங்களின் மூலம் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் இளைய தளபதி விஜய், இது தவிர ஜீவா, சத்யராஜ், இலியானா, சத்யன் என்று நல்ல திறமையான சகநடிகர் பட்டாளம், எடிட்டிங் – இசை – கேமரா -ஒலிக்கலவைக்கு ரசூல் பூக்குட்டி – பாடல் வரிகளுக்கு மதன் கார்க்கி என தமிழ்சினிமாவின் தலைசிறந்த தொழில்நுட்பப் பட்டாளம் இவையனைத்தும் மிகச்சரியாக ஒரு புள்ளியில் இணைந்தால் கண்டிப்பாக அலாவூதீன் தான்.. விளக்குதான்… மொத்தத்தில் மிகப்பெரிய அற்புதம்தான்.
nanban movie
விஜய் – நடிப்பு பிரமாதம். நடனம் அட்டகாசம். 37 வயதிலும் ஒரு மாணவனுக்கான உடல்மொழி, குரல்மொழி, இளமை துள்ளி விளையாடுகிறது. தமிழ் சினிமாவில் இன்றைய நிலையில் வேறு எந்த நடிகராலும் இந்தக் கதாப்பாத்திரத்தை இவ்வளவு செம்மையாய்ச் செய்திருக்கவே முடியாது. அப்படியே முக்கி முனகி, எம்பி எம்பிச் செய்திருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு ரீச், ஒரு ஓப்பனிங்க் கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. மிகச் சரியாய் சொல்ல வேண்டுமானால் ஆக்ஷ்னில் மட்டுமல்ல, பஞ்ச் டையலாக்கில் மட்டுமல்ல, இப்படியும் கூட மாஸ் கிளப்பலாம் என்பதை விஜய் அமைதியாய் ஆனால் மிக மிக அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறார். The Vijay Mass is now Redefined.
விஜய், ஜீவா இரண்டு பேருமே செம பெர்மான்ஸ். பாட்டுல்லாம் சூப்பர். அஸ்க லஸ்கா செம ஸ்டைலீஷ். இருக்கானா இல்லையானா டான்ஸ்ல பட்டை. இந்த கதையோட்டத்துக்கு இந்தப்பாட்டு தேவையா என்று யோசித்தால் ஷங்கர் விஜயின் கடைநிலை ரசிகனையும் மனதில் வைத்து அமைத்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. இலியானா குடுத்த கேரக்டரை செய்திருக்கிறார், கொஞ்சலாக. சத்யராஜ், சத்யன் இருவருமே பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். வசனம். வயிறு வலிக்க சிர்க்க வைக்கிறது. நெறைய நல்ல ந்ல வசனங்கள் படம் நெடுக. மற்றபடி நீங்கள் எந்த எந்த சீன் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதை விட பிரமாதமாகவே இருக்கிறது. மிக மிக அதிகமாக நோண்டிப் பார்க்கும் comparison attitude ஓடு இந்தப் படம் பார்த்தால் கண்டிப்பாக ஒரு அருமையான படம் கொடுக்கும் மிகச்சிறந்த உணர்வை இழந்து விடுவீர்கள். தமிழுக்கு இது உண்மையிலேயே வேறு நிறம்.வேறு சுவை. அனுபவித்துப் பாருங்கள்.
என் தளபதி போல யாரு மச்சான்…
ஒரு கள்ளம் இல்லா உள்ளம் வச்சான்…
அவன் முன்னே வானம் குள்ளம் மச்சான்….
மொத்தத்தில் நண்பன் – ஆல் இஸ் வெல் – ஆல்வேஸ் வெல். A very very refreshing feel good movie.

நண்பன் - சினிமா விமர்சனம் - சுடச்சுட



ஏற்கனவே பலமுறை த்ரீ இடியட்ஸ் பார்த்து விட்டதால் நமக்கு ஒவ்வொரு காட்சியும் மனப்பாடமாக தெரியுமென்பதால் அடுத்தடுத்து என்ன வரும் என்பது தெரியுமென்பதால் சுவாரஸ்யம் குறைவது போல் தோன்றுவது நிஜமே. இருந்தாலும் ஷங்கர் படத்துடனே நம்மை கட்டிப் போடுகிறார். பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் போதே படத்தை வெளியிட்டது என்ன காரணமோ தெரியவில்லை. எதிர்பார்ப்பு வேறு கன்னாபின்னாவென்று எகிறியிருப்பதால் திரையரங்கில் கூட்டம் தாங்க முடியவில்லை. பொங்கல் பண்டிகைக்காக இன்று இரவு திருவாரூர் செல்லவிருப்பதால் பொங்கலுக்கு வெளியாகும் மற்றபடங்களின் விமர்சனங்கள் திருவாரூரிலிருந்து.

சரி படத்தின் கதைக்கு வருவோம்.

ஸ்ரீகாந்த்(வெங்கட்ராம கிருஷ்ணன்) மற்றும் ஜீவா(சேவற்கொடி செந்தில்) நண்பர்கள். மற்றொரு நண்பனான சத்யன் (ஸ்ரீவத்சன் (அ) சைலன்சர்)போன் செய்து அவர்களின் மிக முக்கிய நண்பனா விஜய்(பஞ்சமன் பாரிவேந்தன்) வந்திருப்பதாக அழைத்ததால் அவசரஅவசரமா அவர்கள் படித்த பழைய கல்லூரிக்கு வருகிறார்கள். ஆனால் அங்கு விஜய் வரவில்லை, விஜயின் இருப்பிடம் மட்டுமே தெரியுமென சத்யன் சொன்னதால் அங்கு நோக்கி செல்கிறார்கள். பிளாஷ்பேக் துவங்குகிறது. சென்னையின் நம்பர் ஒன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்க வருகிறார்கள் மேற்சொன்ன நண்பர்கள் எல்லாம்.

அந்த கல்லூரியின் முதல்வர் சத்யராஜ் (விருமாண்டி சந்தனம்). அவரின் சித்தாந்தம் விஜய்க்கு பிடிக்கவில்லை. ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் படிப்பில் பிலோ ஆவரேஜ் மாணவர்கள். விஜய் கல்லூரியிலயே முதலாக வரும் மாணவர். சத்யன் குறுக்குவழியில் முதலிடத்தை கைப்பற் நினைப்பவர். சத்யராஜூக்கும் விஜய்க்கும் ஏற்படும் கருத்து மோதலால் சத்யராஜூக்கு விஜயை பிடிக்கவில்லை. சத்யராஜின் மகள் இலியானா (ரியா)வுடன் முதலில் மோதலில் ஈடுபடும் விஜய் பிறகு காதலிக்கிறார். இலியானாவும் தான். ஸ்ரீகாந்த் விலங்குகளை புகைப்படமெடுப்பதில் ஆர்வமிருக்க பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்க வந்திருப்பதை அறிகிறார் விஜய். ஜீவாவுக்கும் படிப்பில் ஆர்வமில்லாததை அறிகிறார்.

அவர்கள் இருவரையும் அவர்கள் விரும்பும் துறைக்கு பல மோதல்கள், ஜீவாவின் தற்கொலை முயற்சி, இலியானா அக்காவின் பிரசவம், சத்யனின் தில்லுமுல்லுகள் ஆகியவைகளை தாண்டி அனுப்பி வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார். ஸ்ரீகாந்த் ஒரு புகழ் பெற்ற விலங்குகள் புகைப்படக்காரர் ஆகிறார். ஜீவாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலையும் கிடைக்கிறது. சத்யராஜூம் திருந்தி விடுகிறார். இவ்வளவும் செய்யும் விஜய் படிப்புக்காலம் முடிந்ததும் இவர்களை விட்டு விலகி விடுகிறார். பிளாஷ்பேக் ஓவர். சத்யனின் உதவியால் ஸ்ரீகாந்தும் ஜீவாவும் விஜயின் இருப்பிடம் அறிந்து அங்கு செல்கின்றனர்.

ஆனால் அந்த இடத்தில் பஞ்சமன் பாரிவேந்தன் பெயரில் இருப்பவர் S.J.சூர்யா. இவர்கள் அதிர்கின்றனர். பிறகு அவரை மிரட்டி விஜயின் உண்மையான இருப்பிடம அறிந்து அங்கு செல்லும் வழியில் இலியானாவுக்கு அன்று கல்யாணம் என்பதை அறிகின்றனர். அங்கு சென்று திருமணத்தை நிறுத்தி இலியானாவையும் அழைத்துக் கொண்டு விஜயின் இருப்பிடம் நோக்கி செல்கின்றனர். அங்கு விஜயை கண்டுபிடித்ததும் தான் தெரிகிறது, விஜய் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்று. அனைவரும் ஒன்று சேருகின்றனர். படம் நிறைவடைகிறது.


என்னடா படத்தின் முழுகதையும் சொல்லி விட்டேன் என்கிறீர்களா, அதான் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் த்ரீஇடியட்ஸ் படத்தை பார்த்திருப்பார்களே. அதனால் தான் கதையில் சஸ்பென்ஸ் வைக்கவில்லை. படத்தை கொடுக்கும் முறையில் ஷங்கர் வெற்றிபெறுகிறார்.

விஜய் அடக்கி வாசித்திருக்கிறார். பழைய படங்களில் உள்ள படாபடா பில்ட்அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட்அப்புடன் வலம்வருகிறார். கல்யாணத்தில் முதல்முறையாக இலியானாவை சந்தித்து அட்வைஸ்கள் கொடுத்து சத்யராஜிடம் மாட்டிக் கொள்ளும் போதும், ஜீவாவின் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாத போது அவரை ஸ்கூட்டியில் உட்கார வைத்து மருத்துவமனையின் உள் வரை ஓட்டி வரும் போதும், முதல் அறிமுக காட்சியில் காலேஜ் சீனியருக்கு சிறுநீர் போகும் போது கரண்ட் ஷாக் வைக்கும் போதும், இன்னும் பல பல காட்சிகளில் அசத்துகிறார். கண்டிப்பாக விஜய்க்கு இது சூப்பர்ஹிட் படம் தான்.

ஜீவா அவரது இன்னொசன்ட் நடிப்பில் அசத்துகிறார். படத்தில் விஜய்க்கு அடுத்த இடம் அவருக்கு தான். சரக்கடித்து விட்டு சத்யராஜ் வீட்டில் ஒன்னுக்கு அடித்து விட்டு மறுநாள் வகுப்பில் சத்யராஜிடம் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள மாடியில் இருந்து குதிக்கும் போது நெகிழ வைக்கிறார்.

ஸ்ரீகாந்துக்கு இத்தனை நாளாக இறங்கிக் கொண்டிருந்த கிராப்பை ஏற்ற வந்திருக்கும் படம் இது. சத்யன் படம் முழுக்க வருகிறார். படமே அவரைச்சுற்றி தான் இயங்குகிறது. இனிமேல் கண்டிப்பாக அவருக்கு தமிழ்படங்களில் காமெடிக்கு முக்கய இடம் கிடைக்கும்.

படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் படத்தின் பாடல்கள் ஏற்கனவே பலமுறை கேட்டு விட்டு பார்க்கும் போது ரம்மியமாக இருக்கிறது.

இவ்வளவு சொல்லிவிட்டு ஹீரோயினை பற்றி சொல்லாமல் இருந்தால் எப்படி என்கிறீர்களா, என்ன செய்ய நானோ தமிழ்நாட்டுகாரனாகி விட்டேனே. நமக்கு கொழுகொழுவென்று இருந்தால் தான் பிடிக்கிறது. இவரைப் பார்த்தால் வத்தலும் தொத்தலுமாக பிடிக்கமாட்டேன் என்கிறது. எனவே என் விமர்சனத்தில் இலியானா கட்.

வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜூக்கு மிக முக்கியமான கேரக்டர். எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது அழகு. விளையாட்டுக்காக வேலையாளிடம் ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் வேலை கிடைத்தால் என் மீசையை எடுத்து விடு என்று விளையாட்டுக்கு சொல்ல அவர்களுக்கு வேலை கிடைத்ததும் அவர் மீசையை எடுத்து விட இவர் குதிப்பது சூப்பர் காமெடி.

படம் பார்த்து விட்டு அவரச அவசரமாக எழுதுவதால் இப்போதைக்கு போதும் என்று நினைக்கிறேன். திருத்தங்கள் இருந்தால் குறிப்பிடவும் பிறகு திருத்திக் கொள்கிறேன். அடப்பாவிங்களா ஹிட்டுக்காக எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. காலங்கார்த்தால பல்லுகூட விளக்காமல் சினிமாவுக்கு போய் பசியோடு எழுதினால் தான் ஹிட்டு கிடைக்கிறது, என்ன செய்ய, வரவர முதல்நாள் படம் பார்த்து விமர்சனம் எழுத பதிவுலகில் பெரும் கூட்டமே உள்ளது. அதில் தனித்து தெரிய தான் இவ்வளவும்.

Wednesday, January 11, 2012

3 idiots comedy introduction



posted by ctech52.blogspot.com

நண்பன் திரைப்படத்தின் உண்மைக் கதை இணையத்தில் முதன் முதலாக!


    இந்த படத்தில் கீரோவாக விஜய் நடித்துள்ளார் விஜய் ரொம்ப நல்லா படிக்க கூடியவர் ஆனால் அவரிடம் படிக்க வசதி இல்லை அதனால் ஒரு பணக்கார நண்பனுக்கு பதிலாக இவர் படிக்க வருகின்றார்.

அவர் தான் படிக்க வரனும் ஆனால் விஜய் அவருக்காக படித்து விட்டு டிகிரி வாங்கி கொடுப்பார்.விஜய் படிக்க வரும் அந்த இஞ்சினியரிங் கல்லூரியில் பிரின்சிப்பலாக வரும் சத்தியராஜ் கொடுமையும் ராகிங் கொடுமையும் தலை விரித்து ஆடும் அதனை விஜய் தனது புத்திசாலி தனத்தால் முறியடிப்பார் விஜய்.

 பிரின்சிப்பல் பொண்ணாண இலியானாவை காதலிப்பார் விஜய் பிரன்ஸ் இரண்டு பேரும் தான் கடைசில பிரின்சிபல் பொண்ணுக்கு பிரசவம் பார்ப்பார்கள் முடிவில விஜயும் இலியானாவும் இணைவாங்க படம் முடியும்.

ஆனால் நேயர்களே படம் பார்த்து பாருங்கள் இது ஒரு வெற்றி படமாக நீண்ட நாட்கள் ஒடும் விஜய் செம கலக்கு கலக்கியுள்ளார்

உலகமெங்கும் மாபெரும் பொங்கல் விருந்து

நண்பன் பொங்கல் விருந்து

my blog recent