Sunday, November 11, 2012

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் துப்பாக்கி என்ன மாதிரியான படம்? வழக்கமான விஜய் தரும் பொழுதுபோக்குப் படமா என்றால்…



தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும்
துப்பாக்கி என்ன மாதிரியான படம்?


 

தற்போது ‘யூ’
சான்றிதழ்
பெற்று தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும்
துப்பாக்கி என்ன மாதிரியான படம்?
வழக்கமான விஜய் தரும்
பொழுதுபோக்குப் படமா என்றால்…
“.நிச்சயமாகஇல்லை! அதையும்
தாண்டி இந்தப் படம்
விஜய்க்கு ஸ்பெஷலான படம்!”
என்கிறார் இயக்குனர்
ஏ.ஆர்.முருகதாஸ்!
துப்பாக்கி படத்தில் விஜய்
ஒரு இளம் ராணுவ அதிகாரி!
வெறும் சொல்ஜர் அல்ல!

 


 நாட்டின்
வடமேற்கு எல்லையில்
இருந்து மும்பை ராணுவமுகாமுக்கு
2000 ராணுவ வீரர்களில் ஒருவராக
அனுப்பிவைக்கப் படுகிறார். அவர்
ஒரு டி.ஐ.ஏ ஸ்பெஷலிஸ்ட்!
பிஸ்டல் வகை துப்பாக்கியில்
ஆரம்பித்து மெஷன்கன்
வரை குறிதவறாமல் சுடுவதில்
கில்லாடி! இதனால்
விஜயை ‘துப்பாக்கி ஜெகதீஷ்’
என்றே அழைக்கிறார்கள்! இந்திய
எல்லையை ஊடறுத்துக்கொண்ட
ு நாட்டுக்குள் நுழைந்து, நாச
வேலைகளில் ஈடுபடும்
தீவிரவாதிகளை எல்லையிலேயே ஆன்
தி ஸ்பாட் போட்டுத்தள்ளும்
ராணுவம்! ஆனால் ராணுவத்தின்
கண்களில் மண்னைத்தூவிட்டு
நாட்டுக்குள் ஊடுருவிவிடும்
தீவிரவாதிகளைகளைய
இருக்கிறது போலீஸ்!

my blog recent