Saturday, October 15, 2011

கதிர் வீச்சு அளவினைக் கண்டறியும் கையடக்கத் தொலைபேசி: அடுத்தமாதம் ஜப்பானில் அறிமுகம்

கதிர் வீச்சு அளவினைக் கண்டறியும் கையடக்கத் தொலைபேசி: அடுத்தமாதம் ஜப்பானில் அறிமுகம்

POSTED BY CTECH52.BLOGSPOT.COM ON OCT 15 2011
ஜப்பானிய கையடக்கத்தொலைபேசி ஜாம்பவானான என்.டி.டி. டொகோமோ கதிர்வீச்சு அளவினைக் கண்டறியக்கூடிய கையடக்கத் தொலைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.  அண்மையில் அந்நாட்டின் புகுஷிமா அணு உலையிலிருந்து அணுக்கசிவு ஏற்பட்டதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களிடையே தமது ஆரோக்கியம் தொடர்பில் நிலவும் அக்கறையை கருத்தில் கொண்டே இக் கையடக்கத்தொலைபேசியினை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்தமாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள தொழில்நுட்பக் கண்காட்சியில் இதனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.  இக்கையடக்கத்தொலைபேசியின் வெளிப்பகுதிக் கவசத்தில் சமிக்ஞைகள் பொருத்தப்பட்டிருக்கும். இதுவே கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியுமென இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஜப்பானில் அணுக்கசிவு ஏற்பட ஆரம்பித்த நாட்களில் இருந்து கதிர்வீச்சை அளவிடும் உபகரணங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீனஸ் கோளில் ஓசோன் கண்டுபிடிப்பு

வீனஸ் கோளில் ஓசோன் கண்டுபிடிப்பு


லண்டன் : பூமியைப் பொன்று வீனஸ் கோளிலும் ஓசோன் அடுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை பூமியிலும், செவ்வாயிலும் மட்டுமே ஓசோன் அடுக்கு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வீனசில் நடத்திய ஆய்வில் அங்கு ஓசோன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீனசில் உள்ள ஓசோன் அடுக்கு பூமியில் உள்ளதைப் போன்று 3 மடங்கு உயரத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம்

ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம்

POSTE BY CTECH52.BLOGSPOT.COM ON 15 OCT 2011

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.

மனிதர்களை அடிமையாக்கிய உப்பு: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

மனிதர்களை அடிமையாக்கிய உப்பு: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

POSTED BY CTECH52.BLOGSPOT.COM ON OCT 15 2011
         எப்படி புகையிலையும், சிலவகை போதை மருந்துகளும் மனித மூளையின் செல்களை தூண்டிவிட்டு தற்காலிகமாக துடிப்புடன் செயல்பட வைக்கின்றனவோ, அதையேதான் உப்பும் செய்கிறதாம்.
இப்படித்தான் கூறுகிறார்கள் இது குறித்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள். என்ன? இந்த செய்தியே ஒரு சிட்டிகை உப்பு சாப்பிட்டதைப் போல் இருக்கிறதா?
உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயக் கோளாறுகளுக்கு இலக்காகலாம். எனவே உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்ற டாக்டர்களின் அறிவுரைக்கும் செவி சாய்க்காது.
உப்பின் மீதுள்ள காதலைக் குறைக்காமல் இருப்பவர்கள் ஏராளம். மீன், எண்ணையில் பொரிக்கப்படுகிற நொறுக்குத்தீனி இவையெல்லாம் உப்பில்லாமல் போனால் எப்படி இருக்கும்? யாருமே விரும்பமாட்டார்கள்.
உப்பு தொடர்பான இருவேறு விதமான ஆராய்ச்சிகளை அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு மேற்கொண்டது.

micro skype



இன்டர்நெட் தொலைத் தொடர்பு நிறுவனமான ஸ்கைப் நிறுவனத்தை முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது.

இன்டர்நெட் மூலமான தொலைபேசி சேவையில் முன்னணியில் இருப்பது ஸ்கைப். வீடியோ சேட், இன்டர்நெட்டிலிருந்து தொலைபேசியில் பேசுவது, இன்டர்நெட் மூலமான வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
உலகில் பல மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த சேவைகள்.

VIJAY NEWS: VELAYUDHAM INTRODUCTION SCENE

VIJAY NEWS: VELAYUDHAM INTRODUCTION SCENE: When nothing is revealed about Vijay’s ‘Velayudham’, we take a front leap bringing sensational news about his introduction shot in this mov...

VIJAY NEWS: The V quotient

VIJAY NEWS: The V quotient: Velayudham, director Raja's first film with Vijay, is much-awaited this Deepavali. It will live up to the hype, Raja tells Malathi Rangaraj...

 click here to view vijay makal iyakam



Friday, October 14, 2011

வேலாயுதம் யுஎஸ்ஏ ரைட்ஸ்

வேலாயுதம் யுஎஸ்ஏ ரைட்ஸ் - சில தகவல்கள்
வெள்ளி, 14 அக்டோபர் 2011( 14:11 IST )
பெ‌ரிய நடிகர்களின் படங்களின் வெளிநாட்டு உ‌ரிமைக்கு மிகப்பெ‌ரிய அளவில் போட்டி உள்ளது. இளம் நடிகர்களில் விஜய் படத்துக்கு டிமாண்ட் அதிகம்.
வேலாயுதம் படத்தின் யுஎஸ் உ‌ரிமையை பெ‌ரிய போட்டிக்குப் பின் ‌ஜிகே மீடியா வாங்கியுள்ளது. இவர்கள் பல சலுகைகளையும் அறிவித்ததுள்ளனர். முதலில் டிக்கெட் கட்டணம். பத்து டாலர்தான் ஒரு டிக்கெட்டின் விலை. அடுத்து 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு டிக்கெட் எடுக்கத் தேவையில்லை.
இதுவரை வெளியான விஜய் படங்களைவிட அதிக வசூலை அமெ‌ரிக்காவில் வேலாயுதம் பெறும் என்கிறார்கள்.

விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு "U" சர்டிபிகேட்!!



விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு "U" சர்டிபிகேட்!!


ஆஸ்கர் ரவி சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து திபாவளியன்று திரைக்கு வெளிவர இருக்கும் படம் வேலாயுதம். இப்படத்தில் ஜெனிலியா மற்றும் ஹன்சிகா இருவரும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் ஆன்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் நேற்று தணிக்கை குழுவினர் (சென்ஸார்) முன்பு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த சென்ஸார் குழுவினர், படத்தில் சிறு திருத்த்ங்களுக்கு பிறகு  கிளின் "U" சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். மேலும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டள்ளனர். பொதுவாக விஜய் படங்கள் "U" ச்ர்டிபிகேட் பெறுவது வழக்கம் என்பது குறிப்பிடதக்கது. சென்ஸாருக்கு பிறகே திபாவளியன்று வெளியாகும் திரையரங்கு பட்டியல் உறுதிபடுத்தப்படும் என்று ஜெயம் ராஜா குறிப்பிட்டிருந்தார். ஆகையால் நாளை முதல் திரையரங்கு பட்டியல் முழுமையாக வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பெருங்கடலை 'தோண்டும்' சீனா: வேடிக்&

15 Icon இந்திய பெருங்கடலை 'தோண்டும்' சீனா: வேடிக்&

posted by ctech52.blogspot.com on 14 oct 2011
இந்திய பெருங்கடலை 'தோண்டும்' சீனா: கவலையோடு வேடிக்கை பார்க்கும் இந்தியா!




இந்தியப் பெருங்கடலில் சுமார் 10,000 சதுர கி.மீ. பரப்பளவில் பாலிமெடாலிக் சல்பைட் கனிமங்களை (polymetallic sulphide deposits) தோண்டியெடுக்க உள்ளது சீனா. இதனால், இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது.

இந்தியாவை ஒட்டி தென் மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்த கனிமங்களைத் தேடவும், அதை தோண்டியெடுக்கவும் சீனாவுக்கு சர்வதேச கடல் படுகை ஆணையம் (International Seabed Authority-ISA) அனுமதியளித்துள்ளது. இத் தகவலை சீனாவின் கடல் தாதுக்கள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

1979ம் ஆண்டு கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் விஞ்ஞானிகள் கடல் படுகையை ஆராய்ந்து கொண்டிருந்தபோது மெக்சிகோ அருகே கடலுக்குள் பெரும் மலைகளையும் அதன் மீது சிம்னி போன்ற அமைப்புகளையும் கண்டனர். அந்த சிம்னிகளில் இருந்து சுடுநீர் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பகுதிகளைச் சுற்றி ஏராளமான உலோகத் தாதுக்கள் இருப்பதும் தெரியவந்தது.

அந்தத் தாதுக்களில் தாமிரம் (copper), துத்தநாகம் (zinc), ஈயம் (lead), தங்கம், வெள்ளி ஆகியவை அடங்கும். இவை கடல் நீரில் உள்ள சல்பைடுடன் கலந்து பாலிமெட்டாலிக் சல்பைட்களாக உள்ளன.

Thursday, October 13, 2011

தங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி?

தங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி?



தங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி? தாங்கள் அழித்த பைல் Recycle Binயில் இருந்தால் சரி....அதை Restore தந்து மீண்டும் பெறலாம், ஆனால் Recycle Bin இருந்து அழிந்த பைல்களை எப்படி மீட்பது என்பதை பற்றி தான் கூற இருக்கிறேன்.


  
  நாம் சில சமயங்களில் ஏன்..பல சமயங்களில் சில பைல்களை தெரியாமல் அழித்துவிடுவோம்...பிறகு தான் தெரியும் ஆகா! ஆகா! அந்த பைல் மீண்டும் வேண்டுமே என்று...அப்படிபட்ட

‘7ஆம் அறிவை’ முந்தும் ‘வேலாயுதம்’



‘7ஆம் அறிவை’ முந்தும் ‘வேலாயுதம்’
By ctech52.blogspot.com on oct 13,2011

இந்த தீபாவளி ரிலீஸ் பட்டியலில் அரை டஜன் படங்கள் இருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் பல படங்கள் பின் வாங்க ‘7ஆம் அறிவு’, ‘வேலாயுதம்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டும் களம் இறங்குகின்றன.
தரணி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஒஸ்தி’, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன?’ ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா, விஜய் படங்களே எல்லா தியேட்டரையும் ஆக்கிரமித்துக்கொள்ள, தியேட்டர் கிடைக்காத காரணத்தால் ‘மயக்கம் என்ன?’ வரவில்லை.

மெழுகுவர்த்தி' இருட்டில்.. தீபாவளிக்குத் தயாராகும் தமிழகம்!

'மெழுகுவர்த்தி' தீபாவளிக்குத் தயாராகும் தமிழகம்!




தீபாவளி பண்டிகை என்பது உலக அளவில் கொண்டாடும் ஒரு பண்டிகை. இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் மிக சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி என்றாலே வெடிகள் வெடிப்பது என்பது தான் எல்லாரது நினைவிலும் வருகிறது. அதுமட்டுமல்ல நண்பர்கள், உறவினர்களுடன் வீடுகளில் விருது, கொண்டாட்டம் என எண்ணற்ற நிகழ்ச்சிகள் உண்டு.

கொண்டாட்டம் ஒருபுறம் மகிழ்ச்சி தான் என்றாலும், மற்றொரு புறம் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய மின்தடை தான் மக்கள் நினைவில் நின்று பீதியை கிளப்புகிறது.

Wednesday, October 12, 2011

நான் பொய் வாக்குறுதி கொடுப்பதில்லை! – சூர்யா

நான் பொய் வாக்குறுதி கொடுப்பதில்லை! – சூர்யா

Published on October 12, 2011 by ctech52.blogspot.com
நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கிறார் சூர்யா. பேச்சிலும், தோற்றத்திலும் அதை உணர முடிகிறது. தொடர் வெற்றிகள் அதிர்வு ஏற்படுத்தாத சிம்பிள் சூர்யாவாகவே நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார்.
’7ஆம் அறிவு’ எந்த மாதிரியான படமாக இருக்கும்?
’7ஆம் அறிவு’ ஒரு படம் என்பதைவிட ஒரு அனுபவம் என்று சொல்வதே சரியாக இருக்கும். டைம் மிஷினை அடிப்படையாகக் கொண்ட கதை அல்ல இது. ஆனால் வரலாற்று காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையே இருக்கிற இடைவெளியை நிரப்புவது ஸ்ருதி ஹாசன்.
ஸ்ருதி ஹாசன் அறிமுகம் எப்படி?
நமக்கெல்லாம் சினிமாவைக் கற்றுக் கொடுக்கிற கமல்ஹாசன் சாரின் மகள். அருமையாக நடிக்கிறார். தமிழில் அறிமுகமாகும் முதல்படத்திலேயே ஆக்ஷனும் பண்ணுகிறார்.

11-11-11… அரிதான நாளில் மோதும் சிம்பு – தனுஷ்!


11-11-11… அரிதான நாளில் மோதும் சிம்பு – தனுஷ்!

Published on October 12, 2011 by ctech52.blogspot.com
100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் அரிதான தேதி 11-11-11 இந்த ஆண்டு வாய்த்திருக்கிறது.
இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளில் படங்களை வெளியிடுவதை பெருமையாக நினைத்து ஹாலிவுட்டில் படங்கள் தயாராகி வருகின்றன. அதுவும் சினிமா ரிலீசுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை இந்த தேதி வருவது இன்னும் விசேஷமாகிவிட்டது

ஜெனிலியாவின் கடைசி படம் வேலாயுதம்?



ஜெனிலியாவின் கடைசி படம் வேலாயுதம்?

Published on October 12, 2011 by ctech52.blogspot.com

விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதால் ஜெனிலியாவின் கடைசி படம் வேலாயுதம்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகரும் மத்திய அமைச்சர் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இது காதல் திருமணமாகும்.

தீபாவளிக்கு தனுஷின் மயக்கம் என்ன படம்



Published by: oct 12 2011


சென்னை, அக்.12: தீபாவளிக்கு தனுஷின் மயக்கம் என்ன படம் வெளியிடப்பட மாட்டாது என அப்படத்தின் இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.இதையடுத்து விஜயின் வேலாயுதம், சூர்யாவின் 7-ம் அறிவு படங்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன.டைபாய்டு காய்ச்சல் காரணமாக ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதால்

Tuesday, October 11, 2011

அவளும்... மழையும் ..

அவளும்... மழையும் ..

posted on 11 oct 2011 by ctech52.blogspot.com




                                                                            மேகங்கள் கூடாமல்
          இருக்கின்றன -உன் மேல்
               மழை பொழிய வேண்டும் என்பதற்காக வெளியே வா அன்பே!
      மழை பொழியட்டும்

ஏன் இத்தனை
கூப்பாடு கலவியின் போது
மேகங்களே ? -உடனே
மழை பிள்ளை
பெறுவதாலா!


அன்பே !
உன் மீது விழுவதை
தடுக்கும் குடையின் மீது
அதிக கோபத்தில் உள்ளதோ
மழை!
காற்றுடன் கைகோர்த்து
குடையை புரட்டி போடுகிறதே !




அன்பே !
காரிருள் மேகங்கள்
உன் கூந்தலின்
கரிய நிறத்தை
கண்டு வெட்கப்பட்டு தான்
மழையாய் பொழிகிறதா
இப் பூமியில் ..
மழைக்கான காரணம்
நீ தானா!


மழை மீது
தீராத காதல் ஏற்பட்டது
நீ வாய்
கொப்பளிப்பதை
பார்த்த பின் ...


my blog recent