படுத்ததும் தூக்கம் வருவது என்பது அது ஒரு வரம் தான். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியமில்லை.

சிலருக்கு படுத்து நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கெளண்டிங் ஷிலீப் செய்வதுண்டு.

அதாவது எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100…. 200….. 300 வரை எண்ணத்துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை.

இப்படி எண்ணுவதற்கு கெளண்டிங் ஷிலீப் என்று பெயர்.  இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது இது குறித்த ஒரு ஆய்வு.

அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம்.

சுவாரசியமாக இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.