> முதலிடத்துக்கு வந்தது வேலாயுதம் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.
5. வாகை சூடவா
சற்குணத்தின்
இந்தப் படத்தின் இனிய நினைவு என்றால் அது ஹீரோயின் இனியா. மெதுவாக நகரும்
திரைக்கதையால் படம் பார்வையாளர்களை அவ்வளவாக கவரவில்லை. இதன் சென்ற வார
சென்னை வசூல் 33. 2 ஆயிரங்கள். இதுவரை 53 லட்சங்களை இப்படம்
வசூலித்துள்ளது.
4. எங்கேயும் எப்போதும்
ஐம்பது
நாட்களை கடந்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 34. 1 ஆயிரங்களை
வசூலித்துள்ளது. இதுவரை இப்படத்தின் சென்னை வசூல் 4.81 கோடிகள்.
3. ரா.ஒன்
சென்னை
பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து இடங்களில் தொடர்ந்து இரண்டாவது வாரமும்
இடம்பெறும் இந்தி டப்பிங் படம் இதுதான். சென்ற வார இறுதியில் 4.39
லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 29 லட்சங்களை வசூலித்துள்ளது.
2. 7ஆம் அறிவு
சென்ற
வாரம் முதலிடத்தில் இருந்த படத்தை வேலாயுதம் கீழிறக்கியிருக்கிறது. இதன்
சென்ற வார இறுதி வசூல் ஒரு கோடியே மூன்று லட்சங்கள். இதுவரை 4.56 கோடிகளை
வசூலித்துள்ளது.
1. வேலாயுதம்
முதல்
வாரம் இரண்டாவது இடத்தைப் பிடித்த படம் இரண்டாவது வாரத்தில்
முதலிடத்துக்கு வந்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் ஒரு கோடியே
பத்துலட்சங்கள். இதுவரை சென்னையில் மட்டும் 4.36 கோடிகளை வசூலித்துள்ளது.
No comments:
Post a Comment