Tuesday, June 19, 2012

ஜூலை 1ல் வெளியாகிறது விஜய்யின் துப்பாக்கி டிரைலர்!


vijays Thuppaki trailer launch on July 1நண்பன் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜய்யின் துப்பாக்கி படத்தின் டிரைலர் ஜூலை 1ம் தேதி வெளியாக இருப்பதாக டைரக்டர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதியபடம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர் மட்டும் சமீபத்தில் வெளியானது. படத்தின் போஸ்டர்களே ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் படத்தின் டிரைலரை சீக்கிரத்தில் வெளியிட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனராம். இதனால் படத்தின் முன்னோட்ட டிரைலரை விஜய் பிறந்தநாளில் வெளியிட ‌சொல்லி அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதனையடுத்து டைரக்டர் முருகதாஸ் துப்பாக்கி படம் டிரைலர் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விஜய் பிறந்தநாளில் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிறது. எனவே அன்றைய தினம் படத்தின் டிரைலரை வெளியிடுவது சாத்தியப்படாது. ஆகையால் ஒரு பத்து நாள் கழித்து, அதாவது ஜூலை 1ம் தேதி டிரைலரை வெளியிடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

my blog recent