Friday, January 6, 2012

இப்படியும் ஒரு மோட்டார் சைக்கிள்! (பட இணைப்பு) _


   



  சீனாவில் ஜிலின் சிட்டி எனும் இடத்தைச் சேர்ந்த ஷாங்யாலி என்பவர் தனது மகனுக்காக வித்தியாசமான இராட்சத மோட்டார் சைக்கிள் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

கார்ட்டூனில் அதீத ஆர்வம் கொண்ட தனது மகனுக்காக கார்ட்டூனில் தோன்றுவது போன்ற விசித்திரமான மோட்டார் சைக்கிள்களின் அமைப்பை ஒத்த மோட்டார் சைக்கிளை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

8 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் 1000 கிலோ கிராம் எடையுடைய 18 அடி நீளமும் 10 அடி உயரமுமான இந்த மோட்டார் சைக்கிளை இலங்கை நாணயப்படி சுமார் 340 ஆயிரம் ரூபா செலவு செய்து இரண்டு மாதங்களில் உருவாக்கியுள்ளார்.

ஜனவரி 12 வெளியிட Nanban

Ilayathalapathy விஜய் நடித்த Nanban தான் பார்க்க ஸ்டில்கள். முன்னணி பாத்திரங்களில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், Ileana, சத்யராஜ், சத்யன் உடன் byShankar இயக்கிய இந்த திரைப்படம் ஜனவரி 12 வெளியிட தயாராக உள்ளது.
























கைபேசிகளில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மொபைல் பிரவுசர்

கைபேசிகளுக்கான மிக வேகமான பிரவுசரை தரவிறக்கம் செய்வதற்கு

கைபேசிகளில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவது தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் ஒபேரா ஆகும்.
இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த UC Browser தற்பொழுது மிகவேகமாக வளர்ந்து வரும் மொபைல் பிரவுசராகும்.
உலகம் முழுவதும் இந்த மென்பொருளை இதுவரை 20 கோடிக்கும் அதிகமான நபர்கள் உபயோகப்படுதுகின்றனர். இதுவரை பத்தாயிரம் கோடி இணைய பக்கங்கள் இந்த பிரவுசர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் இந்த பிரவுசரை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து உள்ளது. அறிமுகமான குறைந்த நாட்களிலேயே வளர்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை தொடர்ந்து வளர்ச்சியில் உள்ளது இந்த browser தான்.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
இணைய பக்கங்களை 85% சுருக்கி வேகமாக திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இதன் சிறந்த தொழில்நுட்பம்.
Multi Tabs வசதி.
மிகச்சிறந்த தேடியந்திரம்.
மிகச்சிறந்த தரவிறக்க மேனஜர் மென்பொருளை கொண்டுள்ளதால் தரவிறக்கம் வேகமாக இருக்கும்.
மெனு பாரில் பயனுள்ள வலைதளங்களின் லிங்க் ஏற்க்கனவே இருப்பதால் ஒரே கிளிக்கில் அந்த தளங்களுக்கு சென்று விடலாம்.
Bookmark செய்து கொள்ளும் வசதி மற்றும் Browsing History பார்க்கும் வசதி.
பிரவுசரில் URL auto-completion வசதி உள்ளதால் URL முழுவதுமாக டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இணைய பக்கங்களை சேமித்து bluetooth மற்றும் SMS வழியாக மற்றவருக்கு அனுப்பலாம் மற்றும் இன்னும் பிற வசதிகள் உள்ளதால் பெரும்பாலானவர்களால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.

my blog recent