Wednesday, September 21, 2011

பொங்கலுக்குதான் நண்பன்!


Latest Tamil Movie Hot News Special

பொங்கலுக்குதான் நண்பன்!

 (

Vijay's Nanban Movie to be released for Pongal 2012

)
Vijay's Nanban Movie to be released for Pongal 2012



















விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் படம் 'நண்பன்'. ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்து வருகிறார்கள். தீபாவளி வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்ட படம் தான் 'நண்பன்'. ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வேலாயுதம்' படத்தின் தாமதத்தால் 'நண்பன்' எப்போது வெளியிடப் போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது. தீபாவளிக்கு 'வேலாயுதம்' உறுதி செய்யப்பட்டு உள்ளதால் 'நண்பன்' படத்தினை பொங்கல் தினத்தன்று வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். 'நண்பன்' படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து 2012 பொங்கலுக்கு வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகும் தேதியும் உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் அநேகமாய் அக்டோபர் 10-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்தி '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக் என்பதால் இந்தியில் நாயகனாக நடித்த அமீர்கானை அழைத்து இப்படத்தின் இசையை வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகிறதாம் படக்குழு. அப்போ ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து பொங்கல் சாப்பிடலாம்......!

No comments:

Post a Comment

my blog recent