Friday, December 16, 2011

F5 அழுத்தி மீண்டும் வருகிறார் இளைய தளபதி விஜய்

கதைகள் தேர்வில் ஏற்பட்ட தவறினால் தொடர்ச்சியாக பல தோல்விகளை சந்தித்து வந்த விஜய் சறுக்கல்களை தடுக்கும் வகையில் தற்போது முன்னணி இயக்குனர்களின் கதைகளில் நடிக்க ஆரம்பித்துள்ளார். 

சங்கருடன் ‘நண்பன்’, முருகதாஸுசுடன் ‘துப்பாக்கி’, கௌதம் மேனனுடன் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ என வரிசையாக வரவுள்ள படங்கள் அனைத்தும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளாராம். ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தில் கௌதமுடன் கைகோர்க்கவிருந்த இசைப்புயல் முந்தைய ஒப்பந்தங்களால் இணைய முடியாமல் போய்விட்டது. 

இதனால் கௌதம் மேனனின் அடுத்த படத்திற்கு இசையமைப்பதாக கூறிய ஏ.ஆர். ரகுமான் தற்போது விஜயின் படத்திற்காக தீம் பாடல் ஒன்றினையும் இசையமைத்து முடித்துவிட்டாராம். முன்னணி இயக்குனர்களுடன் இணைந்ததில் அடுத்தடுத்த படங்களில் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் விஜயின் நம்பிக்கைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ஏ.ஆர். ரகுமான் இணைந்திருக்கிறார்.

No comments:

Post a Comment

my blog recent