Saturday, March 3, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.... சின்ன புள்ளை தனமாக இருக்கே


      கோன் பனேகா குரோரிபதி கரகர குரலில் அமிதாபட்சன் ஆரம்பித்து வைத்தார். ஷாருக்கான் தொடர்ந்தார், தமிழில் சரத்குமார் முயன்றார். இப்ப சூர்யா... திரை உலகில் நல்ல நிலையில் போய்கொண்டு இருக்கும் சூர்யா சின்ன திரைக்குள் ஏன் நுழைந்தாரோ...? என கேட்க வைக்கிறது இந்த நிகழ்ச்சி.. பல நாடுகளில் வெற்றிகரமாக போன நிகழ்ச்சி தமிழ்நாட்டில் தோல்வியாகிப்போகும் போல..
சின்ன புள்ளை தனமாக இருக்கே எனும் வடிவேலுவின் கிண்டலை போலவே இருக்கிறது சூர்யாவின் கேள்வியும். என்னதான் புரோகிராம் புரொடியூசர், குவிஸ் புரோகிராமுக்கான கேள்வி தயாரிப்பாளர்கள் கூட்டு முயற்சி, குழு ஒத்துழைப்பு என கேள்விகள் தயாரானாலும் சில மொக்கை கேள்விகளை படிப்பறிவு இல்லாத மக்கள் கூட கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு இருக்கிறது. கொடுத்த கேள்விகளை அப்படியே ஏன் கேட்கிறார் சூர்யா, இவ்வளவுக்கும் லயோலா கல்லூரியில் படித்தவர் அவருக்கே தெரிய வேண்டாமா...? இதெல்லாம் சின்ன புள்ள தனமாக இருக்கிறது என்று...
நிகழ்ச்சி தொகுப்பாளராக புதிய களம் இறங்கி இருக்கிறார் என்பது சில சமயம் சூர்யா தடுமாறுகிற போதே தெரிந்து விடுகிறது. அனுபவம் இல்லாமல் இருக்கிறார். மேலும், கலந்துகொள்பவர்களின் குடும்பத்தை பற்றியெல்லாம் கேள்வி கேட்கிறார். ஏங்க....?

சின்ன பிள்ளை தனமான கேள்விகள் :

1. 2012 இல் வந்த இந்த திரைப்படத்தின் தலைப்பை பூர்த்தி செய்க.-----------சொதப்புவது எப்படி ?
A)நட்பில் B)வாழ்க்கையில் C)காதலில் D)உறவில்
2. திருமணமானவர்கள் கொண்டாடும் முதல் தீபாவளியை எப்படி அழைப்பார்கள்?
A)கை தீபாவளி B)கால் தீபாவளி C)தலை தீபாவளி D) மூக்கு தீபாவளி
3. நீங்கள் செய்வதை அப்படியே இன்னொருவர் செய்தால் அதை எப்படி அழைப்பார்கள்?
A)கொசு அடிச்சான் காப்பி B)ஈ அடிச்சான் காப்பி C)நாய் அடிச்சான் காப்பி D)பேய் அடிச்சான் காப்பி
4. (கோ படத்தின் "என்னமோ ஏதோ" பாடல் ஒலிக்கிறது.) கேள்வி இது தான்.நீங்கள் கேட்ட இந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?
A)போக்கிரி B)மஜா C)கோ D)எந்திரன்
5. டிசம்பர் 2011 இல் தமிழகத்தை மிகவும் பாதித்த புயல் எது ?
A)பிஜ்லி B)தானே C)அக்னி
மக்கள் அனுப்பும் எஸ் எம் எஸ் தான் இதற்கு எல்லாம் காசாக பயன்படுகிறது..
அறிவாளிகளுக்கான புரோகிராமா...? அறிவு ஜீவித்தனமான புரோகிராமா சிந்திச்சு செயல்படுங்கள் மக்களே...

இனியும் எஸ்.எம்.எஸ் அனுப்புவிங்க....?????

No comments:

Post a Comment

my blog recent