Saturday, September 3, 2011

கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Search Queries

கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Search Queries



முதல் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்
இரண்டாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Site Configuration

முதல் இரண்டு பகுதிகளை படித்தவர்களுக்கு ஓரளவு கூகுள் வெப்மாஸ்டர் டூல் பற்றி தெரிந்திருக்கும். இணையத்தில் உங்கள் தளம் எப்படி இருக்கிறது? என்பதை அறிய உதவும் "Your Site on the Web" என்பதை பற்றி காணலாம்.

வெப்மாஸ்டர் Dashboard பக்கத்தில் இடதுபுற Sidebar-ல் Your site on the web என்பதை க்ளிக் செய்தால், Search Queries, Links to Your Site, Keywords, Internal Links, Subscriber Stats என்று ஐந்து தேர்வுகள் இருக்கும். இந்த பதிவில் Search Queries பற்றி பார்ப்போம்.


 Search Queries:

இது கூகிள் தேடுபொறியில் நமது தளத்தின் மதிப்பை காட்டுகிறது. எந்தெந்த வார்த்தைகளை தேடுவதன் மூலம் வாசகர்கள் நமது தளத்திற்கு வருகிறார்கள்? அந்த வார்த்தைகளை தேடும்போது நமது தளம் எத்தனையாவது பக்கத்தில் இருக்கிறது? என்பதனை நாம் இங்கு அறிந்துக் கொள்ளலாம். ஆனால் இதில் கடந்த ஒரு மாத கால விவரங்களை மட்டும் தான் காண முடியும். இந்த விவரங்களில் நமக்கு தேவையானது, Queries, Impressions, Clicks இவைகள் மூன்று மட்டும் தான்.

Queries: தேடுபொறியில் தேடப்படும் வார்த்தைகள். உதாரணத்திற்கு ப்ளாக்கர் டிப்ஸ் என்று நீங்கள் கூகிளில் தேடினால், அந்த வார்த்தைகள் Queries எனப்படும்.சில நேரங்களில் நீளமாக தேடினால், அதில் முக்கியமானதாக கூகிள் கருதும் வார்த்தைகளை மட்டும் Queries ஆக எடுத்துக் கொள்ளும்.

Impressions: கூகிளில் ஒருவர் எதையாவது தேடும்போது, நமது தளத்தின் பக்கங்கள் எத்தனை முறை வருகிறதோ அது Impressions எனப்படும். உதாரணத்திற்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.


ப்ளாக்கர் நண்பன் என்று கூகுளில் தேடும்போது முதல் பக்கத்தில் ப்ளாக்கர் நண்பன் தளத்தின் நான்கு பக்கங்கள் காட்டுகிறது. இது போன்று இரண்டு, மூன்று என அனைத்து பக்கங்களிலும் நமது தளத்தின் பக்கங்கள் எத்தனை முறை வருகிறதோ, அது Impressions எனப்படும்.

Clicks: தேடுபொறியில் நமது தளத்தின் பக்கங்கள் வருகிறதல்லவா?  அதனை எத்தனை நபர்கள் க்ளிக் செய்கிறார்களோ? அது Clicks எனப்படும்.

கடந்த ஒரு மாத காலத்தில் கூகிள் தேடுபொறியில் ப்ளாக்கர் நண்பன் தளத்தின் விவரங்கள்:


இதில் பேஸ்புக் தான் முதல் இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக 16 நபர்கள் பேஸ்புக் என்று தேடி ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு வந்துள்ளார்கள். அந்த தேடல் வார்த்தைகளை க்ளிக் செய்தால், அந்த வார்த்தையை தேடினால் உங்கள் பக்கம் எத்தனையாவது பக்கத்தில் இருக்கும் என்று தெரிந்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு பேஸ்புக் என்ற வார்த்தையை க்ளிக் செய்தால் கீழ் உள்ள விவரங்கள் காட்டும்.




Page என்பதில் இரண்டு முகவரிகள் காட்டுகிறது அல்லவா? அது பேஸ்புக் என்று கூகிளில் தேடினால் ப்ளாக்கர் நண்பன் தளத்திலிருந்து வரும் இரண்டு பதிவுகள். இதில் பேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க.. என்ற பதிவு 900 முறை வந்துள்ளது, அதனை க்ளிக் செய்தவர்கள் 16 நபர்கள். பேஸ்புக் பேன் பேஜ் - சில விளக்கங்கள் என்ற பதிவு  பத்துக்கு குறைவான முறைகள் (எத்தனை என்று காட்டாது) வந்துள்ளது, க்ளிக் செய்தவர்கள் பத்துக்கும் குறைவானவர்கள்.

Position in search results என்பதில் உங்கள் தளம் கூகிள் தேடுபொறியில் எத்தனையாவது பக்கத்தில் வருகிறது என்பதை காட்டும். சில சமயம் No data available என்று காட்டும்.

கவனிக்க: உங்கள் தளத்தினை பற்றி நீங்கள் கூகிளில் தேடினால், Sign-Out செய்து தேடி பாருங்கள். ஏனெனில், கூகிள் கணக்கில் இருக்கும் போது நீங்கள் தேடினால், நமது தளம், நமது நண்பர்களின் தளங்கள், நாம் சமீபத்தில் சென்று வந்த தளங்கள்  இவற்றை தான் முதலில் காட்டும். காரணம், கூகிள் தளம் தேடும் வாசகர்களை கணக்கில் கொண்டு தேடல் முடிவுகளை காட்டும்.


Top Pages:



அதே பக்கத்தின் மேலே, Top Pages என்பதை க்ளிக் செய்தால், உங்கள் தளத்தில் உள்ள எந்த பக்கங்கள் அதிக தடவை கூகிள் தேடுபொறியில் வந்துள்ளது? என்பதை காட்டும். அதிகமான தளங்களுக்கு முகப்பு பக்கம் தான் முதலில் இருக்கும்.

இதனால் நமக்கு என்ன பயன்?

நம்முடைய தளத்தை மேம்படுத்துவதற்கு இது வழி செய்கிறது. எப்படியென்றால், உங்கள் தளம் எதை பற்றியது? அதிகம் எதைப்பற்றி எழுதுகிறீர்கள்? என்று பார்த்து, அது தொடர்பான வார்த்தைகள் மூலம் கூகிளிலிருந்து வந்திருக்கிறார்களா? என்று பார்க்கவும். அப்படி வந்திருந்தால் சரி. வரவில்லையெனில், அந்த வார்த்தைகள் மேல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக நீங்கள் பயன்படுத்தும் குறிச்சொற்களில்(Keywords) கவனம் செலுத்த வேண்டும். இத்தளத்தில் ஃபேஸ்புக், பேஸ்புக் என்று ஒரே வார்த்தையை இரண்டு விதங்களில் எழுதியிருந்தேன். பேஸ்புக் என்று தான் அதிகம் பேர் தேடுகிறார்கள். ஃபேஸ்புக் என்று ஒரு சிலரே தேடுகின்றனர். அதனால் இனி பேஸ்புக் என்று எழுதுவது தான் சிறந்தது. மேலும் ப்ளாக்கர் என்ற வார்த்தை மீதும் நான் கவனம் செலுத்த வேண்டும்.

பேஸ்புக் என்பது எப்படி முதல் இடத்தில் வந்தது? காரணம், இரண்டு, மூன்று பதிவுகளில் பேஸ்புக் என்ற வார்த்தைக்கு, உள்இணைப்புகள் கொடுத்திருக்கிறேன். ஒரு வேளை அதுவாக இருக்கலாம். இந்த விவரங்களை பார்க்கும் போது நீங்களே எதிர்பார்க்காத  தேடல் வார்த்தைகளை  காணலாம்.
_________________________________________________________________________________

இறைவன் நாடினால், அடுத்த பகுதியில் மற்றவைகளை பார்க்கலாம்.

SEO Joke:

 "Hey, my site is now ranking no. 1 in Google!"
Reply: Ok, and what if you turn your personalized search off?

No comments:

Post a Comment

my blog recent