Sunday, January 15, 2012

நண்பன் - விஜய் ட்ரெண்ட மாத்தி வச்சான்





  • விஜய் படத்துல பஞ்ச் டயலாக் இல்லை
  • விஜய் படத்துல வில்லன பழிவாங்குற காட்சிகள் இல்லை
  • விஜய் படத்துல அனாமத்தா அடி வாங்குற அடியாளுங்களோட மூணு ஃபைட் இல்லை
  • அட, விஜய் படத்துல பல்லு மொளைக்காத பாப்பால இருந்து, பல்லும் போன பாட்டி வரைக்கும் கட்டி புடிச்சு ஆடுற இண்ட்ரோ பாடல் இல்லை

டேய்… இத டைப் பண்ணும் போது உன் கீபோர்ட்டே சிரிச்சிருக்கும்டான்னு நீங்க நினைக்கலாம்..  இது சிரிக்க வைக்குற படம் தான், ஆனா வேற விதத்தில்... ஆங்கிலத்துல PARADOXன்னு ஒரு வார்த்தை இருக்கு.. அதாவது ஒரு கருத்து அதையே Contradict செய்தாலும்,  அது உண்மையே.. அதுபோல இது விஜய் படம், அனால் விஜய் elements இல்லாத விஜய் படம்.. 



கதை, திரைக்கதை எல்லாம் அப்டியே 3 Idiots இந்தி படத்தோட தழுவல் தான்.. கொச்சையா சொல்லனும்ன்னா Xerox Copy.. வசனம் கூட பல இடங்களில் Translate செய்து சேர்த்திருக்கிறார்கள்... அட இத செய்ய எதுக்குடா சங்கர்ன்னு யோசனகபால்லா இருந்தாலும், 'குரங்கு கைல இருக்குற பூமாலை’க்கும் ‘அழகான மணமகன் கைல இருக்குற பூமாலை’க்கும் வித்தியாசம் இருக்குல்லே... அத சங்கர் கரெக்டா பண்ணிருக்காரு... ஒரு நல்ல படத்தை ரீ-மேக் செய்யும் போது, அந்த Originalஇன் Essence கொஞ்சம் கூட கெடாமல், Improvise பண்றேன்னு சொதப்பாம, 3Idiots தந்த Impact இந்த படத்துல கொண்டு வந்துருக்காரு சங்கர்... ஏற்கனவே படிச்ச நாவல் தான்,  ஆனா நமக்கு புடிச்ச புத்தகத்த திரும்ப படிக்கும் போது அது தர உணர்வு, சுவாரசியம்,  மகிழ்ச்சி, அதோடு சேர்ந்து நாம இன்னொரு முறை செல்லும் பயணம், எப்டி அலுக்காம இருக்குமோ, அதே தான் நண்பன்.. 



இது மாதிரி ஒரு விஜய் பாக்க தானே இத்தன நாள் காத்து கெடந்தோம்?? ஆரம்ப 30 நிமிசங்கள்ல ஆமிர்கான இமிடேட் பண்றதா இல்ல நம்ப ஸ்டைல்லேயே நடிக்கற்தான்னு குழம்பி, கொஞ்சம் Hesitation அங்க இங்க இருந்தாலும், அதுக்கு அப்றோம் மனுஷன் பின்னிருக்காரு... ஜீவா ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆன காட்சியில் தொடங்கும் பாடலில் இருந்து சரி, ஜீவாவுக்கு நினைவு திரும்பிய உடன் ‘ஹ செம ரெஷ்பான்ஸ்டா’ என்று சந்தோஷத்தில் துள்ளும் இடத்திலும் சரி, க்ளைமாக்ஸ் முன், குழந்தை எட்டி உதைத்த உடன் கொடுக்கும் Expression ஆகட்டும், ஆமிரை விட சிறப்பாக பண்ணிருந்தார் என்றே எனக்கு தோன்றியது (அந்த இரண்டு காட்சிகளில் மட்டுமே)... ஹேர்-ஸ்டைல் மட்டும் சில இடங்களில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை... புவி-ஈர்ப்பு விசைக்கு எதிராக அண்ணன் பறந்து பறந்து ‘குருவி குருவி அடிச்சா’ன்னு இல்லாம, ஜீவா, ஸ்ரீகாந்த், அனுயா, சத்யராஜ்ன்னு எல்லார் கிட்டயும் அடிவாங்குறாரு... செய்த தவறுகளுக்கு பாவமன்னிப்போ? இதுவரை விஜய்யின் மொக்க பன்ச்-டயலாக்ஸ்க்கு எல்லாம் சில சமயம் சீரியசாவும், பல சமயங்களில் காமெடிக்காகவும் விசில் அடிச்சு, கை தட்டி ‘ஒத்தா மெர்சல் தலைவாவாவா’ன்னு கதறிய ‘சம்பவாமியுகே யுகே’ ரசிகன்களில் ஒருவனாக இருந்து, நண்பனில் மட்டும் தான் பல காட்சிகளுக்கு மனதாற ரசித்து, சிரித்து கை தட்டினேன்... மொக்க ஃபிகர் இருக்குற காலேஜ்ல, சூப்பர் ஃபிகர் ஒண்ணு இருந்தா, அதுக்கு அந்த மொக்க ஃபிகர்களுக்கு நன்றி செலுத்துற மாதிரி, விஜய் இதில் நன்றாக தெரிய பிரபுதேவா, எஸ்.பி.ராஜ்குமார், பாபுசிவன் போன்றோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்... 



மொக்க கதைக்கு பின்னாடி போகாத, உனக்கு செட் ஆகுற கதய தேர்ந்தெடு...
அதுல உன்னால நல்லா பெர்ஃபார்ம் பண்ண முடியும்... வெற்றி உன் பின்னாடி தானா வரும்



சங்கரின் அடுத்த பெரிய வெற்றி - Casting.. வசந்த் விஜய் (வசந்த்ப்பா) என்கிற அந்த ஒத்தை தலைவலி தவிர (நல்லவேள, சீக்கிரம் கொன்னுட்டாய்ங்க), எல்லாரும் நல்லா/ஓரளவு நல்லா பண்ணிருக்காங்க.செட்டே ஆகமாட்டாருன்னு நினச்ச சத்யன் அதகளம் பண்ணிருக்காரு... மேடை பேச்சாகட்டும், ‘ஹே தோத்தாங்கோலிஸ், மை பிஸ்கட்’ன்னு தங்கலீஷ்ல பேசுறதாகட்டும், விஜய்க்கு அப்றோம் படத்துல இவர் தான் தெரியுறாரு... விஜய் Shine ஆக முக்கிய காரணம், Supporting cast - ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா... வழக்கமான, சைட்-டான்ஸ் ஆடுற, லவ்வுக்கும் ஹெல்ப் பண்ற/ஹெல்ப் கேக்குற, ‘ஹே... அவரு யாருங்க்ற?? அவர் யாரு தெரியுமா??’ன்னு உச்சஸ்தானியில் கதறுகிற நண்பர்களா இல்லாம, படத்துக்கு செம ஒத்துழைப்பு தந்துருக்காங்க... குடித்துவிட்டு உளறும் காட்சியில் இருக்கும் குறும்பிலும், ‘புழுக ஒரு அளவில்லையா?’ என்று கண்ணின் ஓரத்தில் கசியும் நீரிலும், நேர்முகத்தேர்வில் பேசும் முதிர்ச்சியிலும் ஜீவா ஷர்மன் ஜோஷியை விடவே சிறப்பாக செய்திருக்கிறார்... ஸ்ரீகாந்த் சில காட்சிகளில் என்ன ரியாக்ட் செய்வதென தெரியாமல் ங்ங்கே என தத்தி போல காட்சி அளித்தாலும், அப்பாவோடு பேசும் காட்சியில் அள்ளுகிறார் (Professional Camera எவ்ளோ இருக்கும்ன்னு கேக்குற காட்சியில் சிலிர்ப்பு) ரொம்ப எதிர்பார்த்த சத்யராஜ், இலியானா மட்டுமே ஏமாற்றம்... சத்யராஜ் Calibreக்கு இத விட சிறப்பாவே செஞ்சிருக்கலாம்... ஆனா போமன் இரானிய இமிடேட் பண்றதா, இல்ல நம்ப ஸ்டைல்ல லொல்லா லந்து பண்றதா இல்ல ஜேப்பியார் மாதிரி பேசறதா தெரியாமா கன்ஃபியுஸ் ஆகிருக்காரு சில காட்சிகள்ல... இலியானா இடுப்பு மட்டும் நல்லா இருக்கு, முகமெல்லாம் செரமிக் டைல்ஸ் மாதிரி லைட்டா சொறி.... மேக்-அப் மேன் கவுத்திட்டியேப்பா... நடிப்பு அவங்க உடல் மாதிரி சொல்ற அளவு ‘பெருசா’ இல்ல..



ஒளிப்பதிவு ரொம்ப ஃப்ரெஷ்... சில ஷாட்ஸ் ஒரிஜினல்ல இருந்த மாதிரி வச்சாலும், மனோஜ் கலர்ஸ் மூலமா படத்துக்கு பாசிட்டிவ் வைப் சேர்த்துருக்காரு... கண்ணுல ஒத்திக்கலாம், குறிப்பா ஏரியல்-ஷாட்ஸ்... டெக்னிக்கல் வசனங்களி சுஜாதா சாயல் கார்க்கி - ‘Principal பொண்ணு நீங்க தான் Profit' பளிச். எப்டி ஏற்கனவே பாத்த படமா இருந்தாலும் ரசிக்குற மாதிரி இருந்துச்சோ, அதே போல ஹாரிஸ் ஜெயராஜ் இசை.. ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்தாலும் பாடல்கள் எல்லாம் விஷுவல்ஸ் உடன் நல்லா இருக்கு... பிண்ணனி இசையும் கொற சொல்ற மாதிரி இல்ல, ஏழாம் அறிவுல சொதப்புனாலும் இதுல, Comfort zoneல ஸ்லிப் ஆகி Settle ஆயிட்டாரு (ரசூல் பூக்குட்டின்னு நன்றி சொல்லணுமோ Sound Quality) குசேலன், க்ரிடம் படங்களை எடுத்து மாத்துறேன்னு சொதப்பியது போல் இல்லாமல், ரெண்டு வரி திருக்குறள மொழிபெயர்க்கும் போது, அதோட அர்தத்த கெடுக்காம, recreating magicன்னு சொல்ற மாதிரி, ஷங்கர் சூப்பர் டீம வீணாக்காம சக்‌ஷஸ் ஃபார்முலா போட்டுருக்காரு... வேறு இயக்குனரா இருந்தா விஜய்யோட மாஸ் இமேஜ்க்கு சூட் ஆகணும்ன்னு ஸ்க்ரிப்ட மாத்திருக்கலாம், ஆனா அப்டி பண்ணாம, இதான் உண்மையான மாஸ்ன்னு ஷங்கர் விஜய்ய மாத்திருக்குற இடத்துல ஜெயிச்சிருக்காரு... டைட்டில் கார்ட்ல இருந்து (பளப்பள ஜிகின்னா, காதை அடைக்கும் இசை, ‘இளைய தளபதி’ன்னு இல்லாம) கடைசி க்ரெடிட்ஸ் வரைக்கும் ஃப்ரேம்-பை-ஃப்ரேம் ரசிக்க வச்சிருக்காரு... குறிப்பா இருக்கானா இலியானா குத்து டைப் சாங்க்ல கூட விஜய்ய டீசண்டா காட்ட முடியும்ன்னு நிருபிச்சிருக்காரு.. ‘உச்சி மண்ட, சில்லாக்ஸ்’ வகையறா டைரக்டர்ஸ் கவனிக்க.... 



நண்பன் - விஜய்க்கு தகுதியான வெற்றி (பேண்ட்டை இறக்கி) ‘தலைவாவாவா... You ARE GREAT'

No comments:

Post a Comment

my blog recent