அஜீத்தின் அட்வைஸ்
தன்னை
சந்திக்க யார் வந்தாலும், அவர்கள் டூ வீலரில் வருபவர்களாக இருந்தால்
'மறக்காமல் ஹெல்மெட் போடுங்க பாஸ்' என்று அட்வைஸ் செய்கிறார் அஜீத். இந்த
பிரச்சாரத்தை ஒரு இயக்கமாகவே நடத்த வேண்டும் என்கிற அளவுக்கு இந்த
விஷயத்தில் அக்கறை காட்டுகிறார் அவர். அதற்கு காரணம், படப்பிடிப்பில் இவரது
உதவியாளர்களும்,
தொழிலாளர்களும் கூறிய சில உண்மை சம்பவங்கள்தானாம்.
ஒரு
சின்ன பாரத்தை ஏற்க தயங்குறோம். ஆனால் விபத்துக்கு பின்பு பெரிய பாரத்தை
மற்றவர்கள் தலையில் நாம் ஏற்றிவிடக் கூடாது. அதற்காகவே ஹெல்மெட் என்ற அந்த
சின்ன பாரத்தை அலட்சியப்படுத்தக் கூடாது என்றெல்லாம் அஜீத் பேசுவதை
கேட்பவர்கள், கடன் வாங்கியாவது ஹெல்மெட் வாங்குகிற அளவுக்கு
உந்தப்படுகிறார்கள் என்பதுதான் சிறப்பு
No comments:
Post a Comment