பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி, தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டு
விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட தமிழகம்
முழுவதும் வழக்கத்தைவிட இந்த ஆண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கொலை செய்ய முயற்சி செய்த
பயங்கர தீவிரவாதிகள் ஆசிப், போலீஸ் பக்ருதீன் நாசவேலையில் ஈடுபடலாம் என்ற
தகவலை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பில்
ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தpல் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களை பலத்த
சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இரயில் நிலையங்களிலும்,
பேருந்து நிலையங்களிலும் விடிய விடிய சோதனை நடந்து வருகிறது.
வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மார்க்கெட்டுகள் போன்ற மக்கள்
நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவு போலீஸ் மோப்ப நாய்களுடன் ஆங்காங்கே வெடிகுண்டு சோதனையும், விடிய, விடிய வாகன சோதனை வேட்டை நடந்தது.
சந்தேக நபர்கள் யாராவது பக்கத்து வீடுகளில் தங்கி இருந்தாலோ, அனாதையாக
வாகனங்கள் மற்றும் பொருட்கள் ஏதாவது சாலைகளில் கிடந்தாலோ உடனடியாக
அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று பொது
மக்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சென்னை சென்ட்டில் இரயில் நிலையத்தில் மணல் மூட்டை
அடுக்கி தடுப்புகளை அமைத்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள்
நிறுத்தப்பட்டுள்ளனர். இரயில் நிலையங்களுக்கு செல்லும்
வழிகள் வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment