இந்த
முறை பொங்கல் பண்டிகைக்கு இரண்டே படங்கள் வெளியாகின்றன. ஆனால் அதற்கு முன்
நாளை மறுநாள் (டிசம்பர் 30-ம் தேதி) 13 படங்கள் வெளியாகின்றன.
இந்த 13 படங்களும் அரசு மான்யத்தை எதிர்பார்த்து, வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த 13 படங்கள்:
1. மதுவும் மைதிலியும்
2. பாவி
3. கருத்த கண்ணன் ரேக்ளா ரேஸ்
4. பதினெட்டான்குடி
5. வினாயகா
6. மகான் கணக்கு
7. வழிவிடு கண்ணே வழிவிடு
8. அபாயம்
9. வேட்டையாடு
10. மகாராஜா
இந்த பத்து படங்களும், நேரடி தமிழ் படங்கள்.
இவை
தவிர, ‘வேட்டை நாயகன்,’ ‘ஸ்பீட்-2,’ ‘புயல் வீரன்’ ஆகிய மூன்று மொழி
மாற்று படங்களும் 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகின்றன.
ஆனால், பொங்கலுக்கு இரண்டே இரண்டு படங்கள் மட்டும் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள்:
நண்பன்
ஷங்கர்
இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் இணைந்து நடித்துள்ள படம்.
இந்தியில் வெளியான ’3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக் இது. பெரிய நட்சத்திரப்
பட்டாளமே படத்தில் இடம்பெற்றுள்ளது.
வேட்டை
ஆர்யா,
மாதவன், சமீராரெட்டி, அமலாபால் ஆகியோர் நடித்த படம் இது. லிங்குசாமி
இயக்கியுள்ளார். அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்துள்ளார்.
தமிழகத்தில்
மிகப் பெரிய விடுமுறை சீஸன் பொங்கல்தான். கிட்டத்தட்ட ஒரு வார காலம்
விடுமுறை. தினசரி 5 காட்சிகள் வரை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திரையரங்கு பற்றாக்குறை மற்றும் போட்டிகளில் சிக்கிக் கொள்ளாமல்
தவிர்ப்பதற்காக பொங்கலுக்கு இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.
No comments:
Post a Comment