தமிழ், தெலுங்கில் வெற்றியாகும் திரைப்படங்களை பொழிமாற்றம் செய்வது ஹிந்தி திரையுலகில் தற்போது அதிகரித்துள்ளது. |
பிறமொழியில்
வெளியாகும் படங்களை வேறு மொழியில் மொழிமாற்றம் செய்வது இயல்பான ஒன்றுதான்.
பொதுவாக 90 சதவிகித கன்னடப் படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிமாற்றப்
படங்களாக இருக்கின்றன. இதே சூத்திரம் இந்தி சினிமாவிலும்
கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் வெற்றியாகும் படங்களை மொழிமாற்றம் செய்வதற்கு இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் வெற்றியடைந்ததால், இந்த ஆர்வம் இன்னும் அதிகரித்துள்ளது. தமிழில் நடிகர் சூர்யா, நடிகை அனுஷ்கா நடிப்பில் வெற்றியடைந்த சிங்கம் திரைப்படம் அதே பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான வசூல் வழக்கமான படங்களை விட அதிகரித்துள்ளது. இதே போல காவலன் படம் சல்மான் நடிப்பில் பாடிகார்ட் என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதே போல ஏழு படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது. தெலுங்கிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட உத்தமபுத்திரன் இந்தியில் ரெடி என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளியுள்ளது. அடுத்து தெலுங்கில் கிக் என்றும் தமிழில் தில்லாலங்கடியாகவும் வெளியான படம், சல்மான் கான் நடிப்பில் விரைவில் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது. இதே போல் ஜெயம் ரவி, ஜெனிலியா நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் என்ற படம் ஹிந்தியில் ஜெனிலியா நடிப்பில் இட்ஸ் மை லைஃப் என்ற பெயரில் வெளியாகவுள்ளது. கார்த்தி நடித்த சிறுத்தை படம் இந்தியில் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் உருவாகிறது. இதை பிரபுதேவா இயக்கவுள்ளார். இதே போல சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெற்றியான ‘காக்க காக்க’ படம் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடிப்பில் ஃபோர்ஸ் என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் வெற்றியான காதல் படத்தை இந்தி இயக்குனர் விக்ரமாதித்யா மோத்வான் இயக்க உள்ளார். இதுதவிர ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி மொழிமாற்ற திரைப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். கமர்சியல் விஷயங்களை தென்னிந்திய படங்கள் சரியாக கலந்து கொடுப்பதால் படம் வெற்றியாகும் என்று ஹந்தி தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். கடந்த சில வருடங்களில் வெளியான கஜினி, வான்டட் ஆகிய மொழிமாற்றப்படங்கள் இந்தியில் வசூலில் சாதனை புரிந்துள்ளன. அதனால் தமிழ், தெலுங்கு பட மொழிமாற்றத்திற்கு இந்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்று விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார் |
Saturday, December 31, 2011
ஹி்ட்டாகும் ஹிந்தி மொழி மாற்றுத் திரைப்படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment