Saturday, December 31, 2011

பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)

2011ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை.

ஆனால் ரஜினி படத்தைப் போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் படம் வெளியிட்டு தனது பேட்டி, கெட்டப், டிவிட்டர் பஞ்ச் வசனங்கள் மூலம் தமிழ் திரையுலகினர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.

இவர் நடிப்பில் வெளிவந்த 'லத்திகா' திரைப்படத்தை 200 நாட்களை கடந்து மகாலட்சுமி திரையரங்கில் ஓட்டினார்கள். பேட்டியில் "நான் தான் காசு கொடுத்து ஒட்டினேன்.. அது எனது ரசிகர்களுக்காக " என பேட்டியளித்தார் பவர்.

தன் ரசிகர்களுக்காகவே தன் நடிப்பில் வெளியான 'லத்திகா'வைத் தொடர்ந்து 'ஆனந்த தொல்லை', 'மன்னவன்', 'திருமா', 'தேசிய நெடுஞ்சாலை', 'மூலக்கடை முருகன்' என வரிசையாக படங்களில் மும்முரமோ மும்முரமாக நடித்து தள்ளுகிறார்.

'பவர் ஸ்டார்' சீனிவாசன் என்ற பெயரில் புதிதாக டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ளார். இவரது பஞ்ச்களை எல்லாம் பார்த்து இது ' நிஜ பவர் ஸ்டாரா' என சந்தேகங்கள் முளைத்தபோது, அதை முளையிலேயே கிள்ளி, " அது நானே தான் ! " என்று பேட்டியளித்து, 'ரசிகர்'களை ஆச்சர்யத்திலும் இணையவாசிகளை அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார்.

பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் இணையத்தில் பதிலளித்து வருகிறார் இந்த 'பவர்'.


டிவிட்டர் இணையத்தில் இவர் பண்ணிய மெசேஜுகளைப் பார்த்து திரையுலகமே Freeze ஆகி இருக்கிறது. இவர் யாருக்கு எல்லாம் என்ன மெசேஜ் அனுப்பினார், என்ன விஷயங்களை பகிர்ந்து கொண்டார் என்பது குறித்த சில நட்சத்திரத் தகவல்கள் :

* CHAMMAK CHALLO பாடல் பாடிய AKON விற்கு : உங்களுடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். இது தான் எனது டிவிட்டர் அக்கவுண்ட்.

* ஃபேஸ்புக் இணையத்தில் சிம்புவிற்கு பிறகு எனக்கு தான் அதிக ரசிகர்கள் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

* ரசிகர்களே.. என்னை பிடிக்காத சில பேர் என்னை தவறாக பேசுவதை பார்த்து கோபப்படாதீர்கள். ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான் !

* ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று : எனது அண்ணன் சூப்பர் ஸ்டார் வாழ்க பல்லாண்டு. நீங்க இன்னும் பல படங்க பண்ணனும், அது எனக்கு போட்டியா இருக்கணும்.. ( சூப்பர் ஸ்டார் 'கோச்சடையான்' படத்தை விரைவாக முடிக்க திட்டமிட்டதற்கு பவர் ஸ்டாரின் இந்த மெசேஜ் காரணமில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.)

* மல்லிகா ஷெரவத்திற்கு : ஒஸ்தி படத்தில் நன்றாக ஆடி இருந்தீர்கள். விரைவில் உங்களுடன் ஒரு படத்தில் பணிபுரிய ஆசைப்படுகிறேன்.

* ஜிம்மில் இருந்து வந்து விட்டேன் மிகவும் சோர்வாக இருக்கிறது. ஆனால் எனது வெறித்தனமான ரசிகர்களுக்காக டிவிட்டரில் பேசலாம் என்று வந்தேன்.

* இயக்குனர் ஷங்கர் மற்றும் விஜய் என்னை 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்து இருக்கிறார்கள். ஆனால் என்னால் போக முடியுமா என்று தெரியவில்லை.

* ராஜபாட்டை படத்தில் எனது பேரை படத்தின் பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தி இருக்கிறார் விக்ரம்.

* ஆனந்த தொல்லை படத்தில முழுக்க முழுக்க ஆக்ஷன் தான். பயங்கரமான வில்லனா என்னை பாக்க போறீங்க!

* பொங்கல் 2012 அன்று விஜய்யின் 'நண்பன்'. போட்டியாக எனது 'ஆனந்த தொல்லை'.

* பவர் ஸ்டாருக்கு கோபம் வராது தம்பி. பாசத்தால அடிக்கிறவன் தான் இந்த பவர் ஸ்டார்.

டிவிட்டர் இணையத்தில் இவரது ரசிகர்களுக்கு இவரை பற்றி பதிந்து இருக்கும் மிகச் சில 'பஞ்ச்'கள் மட்டும் இங்கே :

* ஆனந்த தொல்லை டிரெய்லரே இப்படின்னா, படம் CHANCELESS... ஆனந்த தொல்லை கண்டிப்பாக நண்பன் மற்றும் பில்லா 2 படத்திற்கு தொல்லையாக இருக்கும்.

* பஸ்ல ஹாரன் அடிச்சா சத்தம் வரும்.. என் தல பவர் ஸ்டார் அடிச்சா ரத்தம் வரும்.

* தலைவா.. உங்களுக்கு கத்ரினா கைஃப் தான் சரியான ஜோடி!

* தலைவா.. ஐஸ்வர்யா ராய் கூட எல்லாம் நடிக்க வேண்டாம். அவங்க பொண்ணு கூட நடிங்க. அது தான் உங்களுக்கு கரெக்ட்.

* தல.. கிறிஸ்துமஸ் தாத்தா எனது பரிசு பொருள் கொடுக்கவில்லை என வருத்தப்பட்டேன். நீங்கள் ஆன்லைன்ல இன்றைக்கு வந்துட்டீங்க. எனககு மிகப்பெரிய பரிசு இதுதான்.

* எல்லாரும் அவங்க குடும்பம் அல்லது காதலி போட்டோ தான் பர்ஸ்ல வச்சுருப்பாங்க.. ஆனால் என்னோட பர்ஸ்ல உங்களோட போட்டோ தான் வச்சுருக்கேன். நான் உங்கள் ரசிகன்.. இல்லை இல்லை.. பக்தன்.

* நான் நீங்க டிவிட்டர் இணையத்திற்கு வரவில்லை என்று தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்தேனா, டக்குனு பார்த்தா ஒரு வாளி ஃபுல்லா கண்ணீர்.!

* உங்களோட அழகை பார்த்து FAIR & LOVELY CREAM-க்கே வெட்கம் வரும்.

* தலைவா.. WORLD PEACE DAY என்றைக்கு கொண்டாடலாம் என்று சொல்லுங்கள்.. அதான் உங்கள் பிறந்த நாள்...

* படங்களில் கயிறு உபயோகித்து சண்டை போடுங்கள்... உங்களுக்கு ஒன்று என்றால் எங்களால் தாங்கவே முடியாது.

* உங்களை 'நடிகர்' என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கமல் மாதிரி ஒரு 'பன்முக கலைஞன்'.

* வணக்கம் தலைவா.. நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.!

* ஆஸ்கர் விருது குழுக்களையும் உங்களது 'லத்திகா' படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

* சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.

* தலைவா... உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4 கமல் சாயல் இருக்கு.. 2016ல் நீங்க தான் தல சி.எம்.!

* நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்.. நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்னை சரியாகும்.

* தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.

* வானத்துல இருக்கு பல ஸ்டார்.. ஆனால் இங்க டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.

* தீபாவளின்னா சரவெடி.. எங்க பவர் ஸ்டார்னா அதிரடி!

No comments:

Post a Comment

my blog recent