சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பகலவன்’ படத்தின் பணிகள் எப்போது துவங்கும் என்று தமிழ் திரையுலகில் பரபர பட்டிமன்றமாக அடிபட்டது.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாலை விஜய்யிடம் இருந்து சீமானுக்கு திடீர் அழைப்பு.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் தூக்கு விவகாரத்திற்கு நடைபயணம் மேற்கொள்ளும் வேலைகளில் தீவிரமாக இருந்த சீமான், உடனடியாக விஜய்யை சந்தித்தார். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் உடன் இருக்க, மூன்று மணி நேரம் சந்திப்பு நீண்டது.
“பகவலன் படத்தின் கதையை ஏற்கனவே விஜய் கேட்டு விட்டார். அதன் க்ளைமாக்ஸ் ‘வேலாயுதம்’ படத்தின் காட்சியை போலவே இருந்ததால் அதை மாற்றக் கோரினார். அதன் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக விளம்பரம் வெளியாக, சீமான் அப்செட்.
இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணு, சீமானை சமாதானப்படுத்தி கதையை மாற்றி எழுதுங்கள். தம்பி விஜய் உங்கள் இயக்கத்தில் நடிப்பது உறுதி என நம்பகம் வார்த்தார். இதையடுத்து, அடுத்த ஒரு சில நாட்களிலேயே க்ளைமாக்ஸை அட்டகாசமாக மாற்றி எழுதினார் சீமான்.
இது தாணுவிற்கு மிகவும் பிடித்துவிட, அது குறித்து விஜய்யிடம் சிலாகித்து பேசி இருக்கிறார்.
அதன் பிறகே சீமான் – விஜய் சந்திப்பு நடந்து இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸிற்கு எதிராக பிரச்சார வேலைகளை முடித்த உடனேயே ‘பகலவன்’ படப்பிடிப்பு ஆரம்பமாகும்,” என்கிறார்கள் சீமானின் நெருங்கிய புள்ளிகள்.
No comments:
Post a Comment