Thursday, November 24, 2011

விஜய்‌ நடிக்கும் துப்பாக்கி....65 கோடி?!





ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில், விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு "துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலாயுதம், நண்பன் படங்களைத் தொடர்ந்து விஜய், அடுத்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஆரம்பத்தில் ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த இப்படத்தை, இப்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் பட பாணியில், இந்தபடம் உருவாக இருப்பதாகவும், படத்திற்கு பட்ஜெட் ரூ.65 கோடி என்றும் கூறப்படுகிறது. விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

my blog recent