Tuesday, November 22, 2011

PCology கம்பியூட்டரை 100 வருடம் வாழவைக்க

கம்பியூட்டரை 100 வருடம் வாழவைக்க...

எல்லோருக்கும் கம்பியூட்டரில வாற எல்லா பிரச்சினைக்கும் சேர்த்து ஒரே தீர்வாக (கம்பியூட்டர வித்துடுறதில்லை.) ஏதாவது கிடைக்காதா என ஏங்குவீர்கள் என்பது கம்பியூட்டர் வாசியான எனக்கு புரிந்ததால் உங்களுக்காக ஒரு PCology தருகிறேன். 
PCology  என்ன பெயரே வித்தியாசமா இருக்கு எண்டு பாக்கிறீங்களா... கீழ வாசித்தா எல்லாம் புரியும்..
இது உங்கள் கம்பியூட்டரை 100 வருடம் வாழ வைக்கும்... சந்தேகம் வேண்டாம்...


கம்பியூட்டர் முன் இருந்து இதை சுருதி, தாள பிசகின்றி ஒழுங்காக சொல்லவும்...(பாடவும்...)

இப்பதான் கந்தசஸ்டி நடந்து முடிந்தது. பக்கத்து கோயில்ல கந்தசஸ்டி கவசம் போட்டு காது கேக்காது ஆகீட்டுது. அந்த பாடலின் ரீமிக்ஸ் வடிவம் உங்களுக்காக...

இயற்றியவர்...கம்பியூட்டர் சாமியார் ஹர்சானந்த சுவாமிகள்

துதி
துதிப்போர்க்கு Good PC யும், நெஞ்சில் பதிப்போர்க்கு ஹர்சானந்த சுவாமி அருளால் Loatop, Apple 4s வாங்க என் PCology துணையிருக்கும்...

பாடல்
காக்க காக்க கம்பியுட்டர் காக்க
நோக்க நோக்க என் NOKIA நோக்க
பாக்க பாக்க POWER SUPPLY காக்க
RAM மும் ROM மும் ரொம்பநாள் வாழ
MONITOR ஐ MONITOR ஆய் காத்து நிற்க
MOTHER BOARD தன்னை மறக்காமல் காக்க
INTEL PROCESSOR இடிவிழாது காக்க
APPLE,ANDROID அழகாய் CONNECT பண்ண அம்சமாக BLUETOOTH காக்க

PASSWORD தன்னை பக்குவமாய் காக்க
USER தன்னை USE பண்ண காக்க
HACKING PROBLEM மும்,
HARDDISK PROBLEM  மும்,
PASSWORD தொலைக்கும் பிரம்மராட்சதரும்
என் பெயர் சொல்ல இடி விழுந்தோடிட

Inter Net தன்னை இடைவிடாது காக்க
INTERNET EXPLORER ல் ERROR வராது காக்க
FIREFOX தன்னை பவிசாய் காக்க
OPERA  வும் , CHROME மும் ஓகோன்ணு காக்க
Woofer, Bluetooth புண்ணியமா போக
பழுதாகாமல் காத்து நிற்க
Processor Fan ம், PowerSupply Fan ம் Power குடுத்ததுமே ஒழுங்கா சுத்த

அழிக அழிக Recycle bin அழிக
ஒழிக ஒழிக எரர்கள் ஒழிக
காக்க காக்க My PC காக்க

Mobitel Connection முக்கியமா காக்க
என் பிளாக்கர் தன்னை பணிவாய் காக்க
FB அக்கவுண்ட், Twitter அக்கவுண்ட்ர் , Hi5 அக்கவுண்ட் பாஸ்வேட் காக்க
வைரஸ் வந்தால் விரட்டி அடிக்க உன் வைரவேல் வந்து காத்து நிற்க
சின்ன பயல்களும் லூசு பயல்களும் எந்தன் பக்கம் வராது காக்க.

File ஐ காக்க Folder காக்க
Firewall தன்னை சீக்கிரம் காக்க
XP, Vista, 7 ஐ காக்க
CD ROM தன்னை சிவனடி காக்க
Keyboard  தன்னை கரிமுகன் காக்க
Mouse ஐ பூனை பிடிக்காது காக்க
UPS தன்னை யுகவேல் காக்க
CPU தன்னை சீக்கிரம் காக்க.
Log off Problem, 
Loading Problem
லோ லோ எனவே நாய் போல் ஓட
ஒழுங்காய் அழகாய் PC பெற்று
அடியேன் வாழ சீக்கிரம் வாழ்த்தாய்...

பயன்
இதை எத்தினமும் துதிப்போர்
Lop Top, Palm Top வாங்கி
சர்வ Virus நீங்கலாக 
நீடுழிவாழ்வார்; என 
PC புகழ் பாடும் பாடும் ஹர்சானந்தசுவாமி (நான்தான்)
இயற்றிய PCology ஐ
ஒருநாள், ஒருமுறையேனும்
ஓதுவார் System
தீங்கின்றி திகழும் என் அருளாலே!!!

No comments:

Post a Comment

my blog recent