Thursday, November 24, 2011

'மயக்கம் என்ன கதை போட்டோகிராபராக தனுஷ்

ரஜினி தனுஷை கட்டிப்பிடித்து பாராட்டினாரா?!
Rajinikanth impressed by Dhanush's Mayakkam Enna Movie
        டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், ரிச்சா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மயக்கம் என்ன'. இப்படம் 25ம் தேதி முதல் உலகெங்கும் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் 'மயக்கம் என்ன' படத்தின் கதை வெளியாகியுள்ளது. படத்தில் போட்டோகிராபராக தனுஷ் வருகிறார். வாழ்வில் ஒரு பெரிய போட்டோகிராபராக வேண்டும் என்பது தனுஷின் ஆசை. அது நிறைவேறியதா...? இல்லையா...? என்பதுதான் படத்தின் கதை! இதோடு ஒரு அழகிய காதல் கதையையும் சேர்த்திருக்கிறார் செல்வா. பொதுவாக செல்வராகவன் படம் என்றாலே ஒரு கனமான காதல் கதை இருக்கும். அதேபோல் இந்தபடத்திலும் ஒரு அழுத்தமான காதல் கதை உள்ளதாம். ஐந்து நண்பர்களுக்குள் நடக்கும் காதல் போராட்டத்தை சொல்லியிருக்கிறாராம் செல்வா. தான் இயக்கிய படங்களிலேயே, இதுவரை சொல்லாத கதையை இந்த படத்தில் சொல்லியிருக்கிறாராம். மேலும் தனுஷ், செல்வா எழுதி, பாடியிருக்கும் பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விஷுவலாகவும் நன்றாக வந்திருக்கிறதாம். இந்நிலையில் புதன்கிழமை (நவம்பர் 23) மாலை ரஜினி குடும்பத்தினருக்கு மட்டும் ரியல் இமேஜ் ப்ரிவியூ தியேட்டரில் 'மயக்கம் என்ன' படம் திரையிடப்பட்டது. அப்படத்தினை ரசித்து பார்த்த ரஜினிகாந்த், படம் முடிந்து வெளியே வந்தவுடன் தனுஷை கட்டிப்பிடித்து பாராட்டினாராம். தனுஷ் நடித்த படங்களின் வரிசையில் 'மயக்கம் என்ன' முக்கியமான படமாக இருக்கும் என்றும் கூறினாராம். இயக்குநர் செல்வராகவன் படத்தின் வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்ததால், அவர் அங்கு வரவில்லை.
ரஜினி செல்வராகவனை போனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் செல்வராகவனிடம் படத்தினைப் பற்றி சிலாகித்து பேசி இருக்கிறார். ரஜினியின் இந்த பாராட்டால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு. ஒரு லிட்டர் பூஸ்ட்ட ஒரே மடக்குல குடிச்ச மாதிரியிருந்திருக்குமே....

No comments:

Post a Comment

my blog recent