Monday, November 21, 2011

நாயகன் டைப் கதை விஜய் - முருகதாஸ்

வேலாயுதம் ஹிட் ஆனதிலிருந்தே முருகன் சென்ட்டிமென்ட் பிடித்தாட்டுகிறது விஜய்யை. படி தாண்டவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவரது சமீபத்திய படங்களில் வேலாயுதத்திற்கு மட்டும் பாரசூட்டே கிடைத்தது. அதன்விளைவாகதான் இந்த வேலாயுதக்கடவுள் சென்ட்டிமென்ட்டோடு, விஜய்யை இணைத்து பேச ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம்.

அதை உறுதி செய்வது போல, தனது அடுத்த படத்தின் ஷெட்யூலை தீர்மானித்தாராம் விஜய். படத்தின் துவக்கவிழா, மற்றும் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு இரண்டுமே திருச்செந்துரில் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம். சூரனை வதம் செய்த முருகன் குடிகொண்டிருக்கும் இடம்தான் திருச்செந்துர்.
எ.ஆர்.முருகதாஸ் (பார்றா… இங்கயும் ஒரு முருகன்) இயக்கவிருக்கும் இந்த படத்தில் மும்பை தாதாவாக நடிக்கிறார் விஜய். நாயகன் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால்
மீண்டும் அதே டைப் கதையை எடுக்கவிருக்கிறார் முருகதாஸ். திருச்செந்துரிலிருந்து மும்பைக்கு போகிற விஜய் அங்கு என்னவாகிறார் என்று முடியுமாம் படம்.
படத்தின் கதாநாயகியாக யார் யார் பெயரையோ சொல்லி உழப்பிக் கொண்டிருக்கிறார்கள். வரப்போவது நிச்சயம் வள்ளியாக இருக்கப் போவதில்லை. வாயில் நுழையாத பெயரோடு ஏதாவது ஒரு ’கள்ளி’ காத்துக் கொண்டிருப்பார்.
கடைசி செய்தி- காஜல் அகர்வாலிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment

my blog recent