கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினி!
நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாஸனின் 57வது பிறந்த நாள். இதனையொட்டி, ஞாயிற்றுக் கிழமை இரவு நண்பர்கள் மற்றும் திரையுலகினருக்கு நட்சத்திர ஓட்டலில் ஒரு விசேஷ விருந்து அளித்தார் கமல்.
இந்த விருந்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, த்ரிஷா, ஆன்ட்ரியா என ஏராளமானோர் பங்கேற்றனர். நள்ளிரவை நெருங்கிய போது, கமல் ஹாஸனின் பாடல்களுக்கு நடனம் ஆடுவது ஆரம்பமானது. காசு மேல… பாடலுக்கு கமலும் விஜய்யும் போட்ட குத்து நடனம் வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது.
சரியாக நள்ளிரவு (அதிகாலை) 12.05 மணிக்கு ரஜினியிடமிருந்து போன் வந்தது கமலுக்கு. உடனே நடனத்தை நிறுத்திய கமல், ரஜினியிடம் பேசினார். மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொன்ன ரஜினி, பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து ஜாலியாக கமெண்ட் அடிக்க, அதற்கு உரக்க சிரித்தபடி நன்றி கொண்டிருந்தார் கமல்.
பின்னர், மீண்டும்…. சக நடிகர்களுடன் உற்சாகத்துடன் பிறந்த நாள் விருந்து நடனத்தைத் தொடர்ந்தார் கமல்!
No comments:
Post a Comment