Tuesday, November 8, 2011

ஹன்சி ஒரு மோனாலிசா ஓவியம் மாதிரி!

 

ஜெனிலியா!
ஜெனி தனது தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக ஒரு மனநிலை சரியான பாத்திரத்தில் நடிச்சிருக்கு! ஆனா பாருங்க அந்தப் புள்ளைய போட்டு வில்லன்க அடிச்சுடுறானுங்க..ரத்தம்லாம் வருது..
மேலேருந்து தள்ளி விட்டு நான் ஆடிப்போயிட்டேன் அப்பறமா தப்பி வந்ததும்தான் நிம்மதியாச்சு!
மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு! இதுக்கு பேசாம ஜெனி வழக்கம்போல தலைய சொறிஞ்சுகிட்டு, கெக்கே பிக்கேன்னு சிரிச்சுட்டு அலைஞ்சிருக்கலாமோன்னு தோணிச்சு! 

ஆனா ஒண்ணு! இப்ப எல்லாருக்கும் தெளிவாப் புரிஞ்சிருக்கும் ஜெனி நார்மலான பொண்ணுதான்னு!
ஹன்சி
ஹன்சி ஒரு மோனாலிசா ஓவியம் மாதிரி! 
நாம எத நினைச்சுக்கிட்டு பாக்கிறமோ அதான் தெரியும்!(நான் முகத்தைப் பற்றிப் பேசுறேன்!) நாங்க எந்த ஐடியாவும் இல்லாம 'பே...'ன்னு பார்த்தோம்னு வையுங்க எல்லா சீன்லையும் லூசுத்தனமா சிரிக்கிற மாதிரித்தான் தெரியும்!
ஹன்சி கண்களை இடுக்கி உதடுகளை இழுத்து சிரிக்கும்போது, அது சிரிப்பு என்பதில்யாருக்கும் எந்த சந்தேகம் வருவதேயில்லை! 
ஆனா அப்பிடியே முகத்தை வச்சுகிட்டு கண்ணுல கொஞ்சம் தண்ணி தெளிச்சுவிட்டா அதான் அழுகை!


உதடுகளை சிரிக்காமல் இயல்பு நிலைக்கு கொண்டுவந்தா அது வெறுப்பு! உதடுகளைக் குவிச்சா அது ர்ர்ர்ர்...ரொமான்ஸ்!


இப்போ கண்களை கொஞ்சம் திறந்தா அது கோபம்! 
இன்னும் கொஞ்சம் விழிகள் விரிந்தால்...ஆச்சரியம் ...அடடே!


அப்பிடியே கண்களால் மட்டும் மேலே பார்த்தா...சோகம் அடடா!
அப்பிடியே கீழே பார்த்தா...வெட்கமாம்! பார்ரா!
ச்சே சான்சே இல்ல! சமகாலத்தில இப்பிடி ஒரு நடிகையை, நவரசத்தையும் சும்மா டக்கு டக்குனு காட்டக்கூடிய திறமைசாலியை திரையுலகம் சந்தித்ததில்ல! வேலாயுதம் படத்தில ஹன்சி கிராமத்துப் பொண்ணு! - சமீப காலத்துல தீவிர சினிமா ஆர்வலர்களை கலங்கச் செய்த நிகழ்வு இதுதான்!
இது எப்பிடி? யார் செய்த அநியாயம்? இதன் பின்னணி என்ன? - எதுவுமே புரியல! என் நண்பனொருவன் படத்துல ஹன்சிய கிராமப் பொண்ணா பாத்ததுல துக்கம் தாங்கமாட்டாம கோன்னு அழுதுட்டானாம்!
இதே கேள்வி, கோபம், துக்கம், குமுறல் தலைவி ஹன்சிக்கும் இருந்திருக்கணும்! என்னைக் காட்ட விடுங்கடா! என்னைக் காட்ட விடுங்கடா! (தெறமயத்தான்!) என்றொரு வெறி ஒவ்வொரு சீன்லயும் தெரிஞ்சுது! இறுதியில் ஹன்சி ஜெயித்துவிட்டார் என்றே தோன்றுகிறது! 
இதான் தெறமைங்குறது! - யார் சதி செய்தாலும் மறைக்க முடியாது!

No comments:

Post a Comment

my blog recent