Wednesday, November 9, 2011

பிரசன்னா-சினேகா விரைவில் திருமணம்!!

பிரசன்னா-சினேகா விரைவில் திருமணம்!! 

Actor Prasanna to wed sneha soon
  நடிகர் பிரசன்னாவும், புன்னகை இளவரசி நடிகை சினேகாவும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். இதனை நடிகர் பிரசன்னாவே அறிவித்துள்ளார்.  அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் இணைந்து நடித்தனர். அப்போது இருந்தே இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் இவர்களுக்கு இடையே காதல் இருப்பது பற்றி பலமுறை கிசுகிசுக்கள் வந்துள்ளது. ஆனால் இருவருமே இதனை மறுத்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறியதாவது, சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. தேதியை பின்னர் சொல்கிறேன். திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம்," என்றார்.

No comments:

Post a Comment

my blog recent