பொதுவாவே ரீமேக்கும் படங்கள் அதீத எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும்.
பெரும்பாலான ரீமேக்கிய படங்கள் ஒரிஜினல் படங்களின் நல்ல பெயரைக் கெடுத்த
ஹிஸ்டரியே தமிழில் அதிகம். அதையும் மீறி, ஒரு ரீமேக்கிய படம் ஒரிஜினல்
படத்தை விட நல்ல பெயர் வாங்குகிறது என்றால், ஒரே ஒரு காரணம்ஒரிஜினல் படம்
அல்ட்ரா பிளாப் ஆக இருக்க வேண்டும். இந்த விதி எல்லாவற்றையும் மீறும்
வரிசையும் ஒன்று இருக்கிறது. தரமான டைரக்டர் மற்றும் நடிகர் உடன் சிறந்த
ஸ்க்ரீன் ப்ளே கலந்து செய்யும் படங்களுக்கான வரிசை. அதில் சமீபமாக வந்த
அல்லது வர இருக்கின்ற படம், "நண்பன்".
நான் "விஜய்" ரசிகனோ அல்லது ஹால்மார்க் குத்திய விமர்சகனோ கிடையாது. எப்போதாவது மூடு மற்றும் நேரம் இருந்தால் தியேட்டருக்குப் போய் அடித்துப் புடித்தேனும் டிக்கட் வாங்கி வேறு வழியே இல்லாமல் முன் வரிசையில் எழுபது டிகிரி கோணத்தில் தலையை நிமிர்த்தி படம் பார்க்கும் அக்மார்க் அப்பாவி. ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னால் கொஞ்சம் விரிவாக (??! மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கு பந்திக்கு மேல் போகாது என நினைக்கிறேன்) எழுதப்படும் ஒரு விமர்சனம் இது. காரணம், என்னுள் எழும்பி இருந்த ஒரு நெகடிவ் தோட்'ஐ உடைத்தெறிந்த மற்றொரு படம், இந்த நண்பன்.
படத்தின் கதையை பற்றி நான் விளக்கத் தேவையில்லை. ஏற்கனவே நாம் நூறு முறை டி.வி.டி.யில் பார்த்து விட்ட அதே "த்ரீ இடியட்ஸ்" கதைதான். ஏற்கனவே ஹிட் ஆகிவிட்ட கதையை மீண்டும் எடுப்பதால் "ஷங்கர்" சொதப்பிவிடுவாரோ என்ற பயம் ஒரு பக்கம், சிங்கிள் ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் குடுத்து அடுத்தடுத்து படங்கள் விஜய் பண்ணுவதால் அவருக்காக கதையை மாற்றி சொதப்பிவிடுவார்களோ என்ற பயம் மற்றப் பக்கம் இருக்க வந்தே விட்டது, "நண்பன்". வி.ஐ.பி. ப்ரிவியூ என்ற பெயரில் படம் ஆபீசியலாகரிலீஸ் ஆவதற்கு முன்பே ரெண்டு நாளைக்கு முதல் ஒரு ஷோ போட்டு, அதற்கு சாதாரண டிக்கட் விலையை விட ஐந்து மடங்கு விலை வைத்து பணம் பறிப்பார்கள். அதில் ஒரு ஷோ'க்கு இரவு போய்த் தொலைத்தேன். டிக்கட் ஓசி தான்.
ம்ம்ம்... படம் பற்றி சொல்வதென்றால். முதலாவது விஜய். வெளிப்படையாக சொல்லப் போனால் இதுவரை விஜய் நடித்த படங்களில் மெச்சக்கூடியது இதுதான் எனலாம். நீண்ட நாளைக்கப்புறம், பூக்கள் சொரியாமல், தார தப்பட்டைகள் இல்லாமல் ஒரு இன்ட்ரோ. படம் தொடங்கியதில் இருந்து விஜய் வரும் சீன்கள் எல்லாமே அமைதியான, தன்புகழ் பாடாத, பன்ச் டயலாக் பேசாத நடிப்பில் அருமையாக கவர்கிறார். நிச்சயமாக வழக்கமான விஜய் படங்களில் அவரது நடிப்பில் கூடுதலாக இருக்கும் ஏதோ ஒன்று இந்தப் படத்தில் இல்லை. அதுவே அவரை அழகாகக் காட்டுகிறது.
அடுத்தது ஷங்கர். ஹட்ஸ் ஆப் டு ஹிம். ஒரிஜினல் படத்தின் பிரேம் பை பிரேம் காப்பியை எடுத்திட்ட போதிலும் தனது டச்சை வைத்துப் படம் இயக்கி இருப்பது கூடுதல் தைரியம். மதன் கார்க்கியின் உதவியுடன் ஷங்கரின் ஸ்க்ரீன்ப்ளே புகுந்து விளையாடுகிறது. ஜீவா'வும் ஸ்ரீகாந்தும் நடிப்பில் பின்னுகிறார்கள். இலியானா, நோ வேர்ட்ஸ். நிஜமாவே அழகினால் கொள்ளை அடிக்கிறார். சத்யராஜ், சத்யன் என எல்லாருமே அழகாக நடித்திருக்கிறார்கள்.
குறிப்பிடத்தக்க சீன்கள் நிறையவே இருக்கின்றன. ஸ்ரீகாந்த் தன் அப்பாவிடம் மனசு விட்டுப் பேசும் அந்தக் காட்சியில் கண்ணீர் வந்துவிட்டது. அதே போல செம டச்சிங் ஜீவா ஹாஸ்பிட்டலில் இருக்கும் காட்சி. "த்ரீ இடியட்ஸ்"இல் சைலன்சர் பேசும் அந்த புகழ் பெற்ற ஸ்பீச் இதில் இன்னும் சூப்பர்ப். தியேட்டரே வயிறு குலுங்க சிரித்தது. இலியானா விஜய்க்கு லிப் கிஸ் குடுக்கும் காட்சி, விஜய் "வைரஸ்'ஐ வெளியே எடு" என சொல்ல (வைரஸ் எனப் பெயரிடப்பட்ட 'கார் பேட்டரியில் இருந்து ஏ.சி கரண்ட் தயாரிக்கும் இன்வேர்ட்டர்) 'மில்லிமீட்டர்' சத்யராஜை "கெட் அவுட் சார்" எனத் தள்ளிக்கொண்டு போகும் காட்சி என டச்சிங் சீன்ஸ் ஏராளம்.
முடிவு: படம் ஓடும். ஹார்ட்கோர் விஜய் ரசிகர்கள் இல்லாதவர்களும் ரசிப்பார்கள். நீண்ட நாளைக்கப்புறம் விஜய் இடமிருந்து ஒரு அல்டிமேட் பெர்போர்மன்ஸ்.

http://ctech52.blogspot.com/2012/01/blog-post_2108.html
ReplyDeletehttp://ctech52.blogspot.com/2012/01/blog-post_12.html
ReplyDelete