தமிழ் சினிமாவின் அரிதான நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படமாக ‘நண்பன்’
சாத்தியப்பட்டதில் இயக்குநர் ஷங்கருக்கு முக்கியத்துவம் இருந்ததைப் போல
விஜய்யின் ஒத்துழைப்பும் அதில் முதன்மைப்பட்டது. விஜய்யுடன் நடித்த
அனுபவத்தை அவருடன் முக்கியப் பாத்திரங்களை ஏற்ற ஜீவாவும், ஸ்ரீகாந்த்தும்
பகிர்ந்துகொண்டார்கள்.
முதலில் ஜீவா...
‘‘ஒரு
பெரிய ஹீரோவுக்குரிய எந்த ஈகோவும் இல்லாம அவர் எங்ககூட பழகினார். ‘நான்
ஜோக்கடிக்க... அவர் சிரிக்க...’ ன்னு எல்லா நேரமும் இனிமையா கழிஞ்சது. அவரே
கூட ‘முக்கியமான சீன்ல இப்படி சிரிப்புக் காட்டிட்டு நீ மட்டும் சீரியஸா
நடிச்சுடறே... என்னாலதான் சிரிப்பை அடக்க முடியலை...’ன்னு சொல்வார்.
அதோட எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. அது என்னன்னா... ஒரு காட்சியை டைரக்டர்
சொல்லிட்டா, அதை எப்படி இம்ப்ரூவைஸ் பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுடுவேன்.
அந்தப் பழக்கம் ‘நண்பன்’லயும் தொத்திக்க... டைரக்டர்கிட்ட சொல்ல முடியாத
விஷயங்களை எல்லாம் ஃபிரண்ட்லியா விஜய் சார்கிட்ட சொல்லிக்கிட்டிருப்பேன்.
ஆனா விஜய் சார் அதை அப்படியே கேட்டு, ‘நல்ல விஷயமா இருக்கே... இதை
டைரக்டர்கிட்ட சொல்வோம். அவர் நல்லா இருந்தா எடுத்துக்கட்டும்...’னு
அப்படியே ஷங்கர் சார்கிட்ட சொல்வார். நல்லா இருக்குன்னு நினைக்கிற
விஷயங்களை ஷங்கர் சாரும் ஒரு ஆப்ஷனா வச்சுப்பார்.
படத்தைப் போலவே செட்லயும் இது போல நண்பராகவே பழகிய விஜய், நானே எதிர்
பார்க்காம ஒரு நாள் குடும்பத்தோட வீட்டுக்கு வரச் சொன்னார். நாங்களும்
போனோம். ஒரு ஃபார்மாலிட்டிக்குக் கூப்பிட்டதா இல்லாம, எங்களுக்கு விருந்து
கொடுத்து, என் குழந்தையோட கொஞ்சி விளையாடி ஒருநாள் முழுவதும் எங்களோட
ஸ்பெண்ட் பண்ணியதை என் வாழ்க்கையில மறக்கவே முடியாது. அவர் பழகிய விதத்துல
அவர் மேல இருந்த மரியாதை பல மடங்கு கூடியிருக்கு...’’
ஸ்ரீகாந்த்தின் ஸ்டேட்மென்ட் இன்னும் உற்சாகமாக இருந்தது...
‘‘எனக்கு ‘நண்பனு’க்கு முன்னால இருந்தே விஜய் சாரைத் தெரியும்ங்கிறதால, ஒரு
நண்பராவே அவரோட வேலை செய்ய முடிஞ்சது. உள்ளார்ந்து பழகற அவரோட எளிமை நட்பு
‘கம்ஃபர்ட் ஸோன்’லயே இருக்கும். அபாரமான நகைச்சுவை ஆற்றல் உள்ளவர். ஜீவா
செட்ல இருக்கிற வேளைகள்ல, அவர் அடிக்கிற ஜோக்குகள்ல இவர் சவுண்டா
சிரிச்சுக்கிட்டே இருப்பார். அவருக்கு டான்ஸ் மூவ்மென்ட்கள் அத்துப்படி.
மாஸ்டர் ஆடிக்காட்டறதை ரெண்டு மூணு தடவை கவனிச்சுட்டு ரிகர்சல்
பார்க்காமலேயே ஷாட்டுக்குத் தயாராகிடுவார்.
அந்த அளவுக்கு
எனக்கும் ஜீவாவுக்கும் சீக்கிரம் பிக்கப் பண்ண முடியாத வேளைகள்ல, எங்களால
அவருக்கும் ரீடேக் போனாக்கூட கவலைப்படாம கோஆபரேட் பண்ணுவார். அதோட எங்க
மனசு நோகக்கூடாதுன்னு, ‘ஸ்டெப்ஸ் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு இல்ல’ன்னு
எங்களுக்காக ஃபீல் பண்ணுவார். ஆனா எங்களுக்குத் தெரியும், அதெல்லாம்
அவருக்கு ஈஸியான மூவ்மென்ட்கள்னு. ‘நண்பன்’ ஷூட்டிங்லயே எனக்கு பர்த்டே வர,
ஷங்கர் சார் எல்லாம் சேர்ந்து கேக் வர வழைச்சு தடபுடல் பண்ணிட்டாங்க.
அதுக்கும், அதுக்காக நான் கொடுத்த விருந்துக்கும் வந்து அசத்திட்டார்
விஜய்.
எங்க மூணு பேருக்கும் சமமாதான் எல்லாமே இருக்கணும்னு அவர் நினைச்சது
அவரோடபெருந்தன்மை. இதுக்கு ஒரு உதாரணம், சமீபத்துல நடந்த ஆடியோ ஃபங்ஷன்.
அவரோட ரசிகர்கள் புடைசூழ நடந்த விழாவா ஆனதால, மேடையேற்றும்போது வித்தியாசமா
30 அடி உயரத்திலேர்ந்து இறங்கி வர்ற கூண்டுல இருந்து அவரை இறக்கணும்னு
அதுக்காக செட்டெல்லாம் ரெடி பண்ணி வச்சாங்க. ஆனா அவர், ‘நாங்க மூணு பேரும்
ஒண்ணுதான். எனக்குன்னு தனி வழி எல்லாம் வேண்டாம். ஜீவா, ஸ்ரீகாந்த் எந்த
வழியா மேடைக்கு வர்றாங்களோ, அதே வழியாவே நானும் வர்றேன்...’னு அப்படியே
வந்துதான் மேடையேறினார். நட்புக்கு அவர் கொடுத்த மரியாதைக்கு இதைவிட
வேறென்ன சான்று வேணும்..?’
No comments:
Post a Comment