|
''பொங்கல் ரிலீஸில் 'நண்பனுக்குப் போட்டி ஆனந்தத் தொல்லை’னு நீங்களே கிளப்பிவிடுறீங்களே... இது உங்களுக்கே ஓவராத் தெரியலையா?''
''அம்மா மேல சத்தியமா என் ரசிகர்களோட அன்புத் தொல்லை காரணமாகத் தான் ஆனந்தத் தொல்லையை ரிலீஸ் செய்றேன். பவர் ஸ்டார் பாசறைப் பசங்களோட பாசத்துக்குக் கட்டுப்பட்டவன் நான். 'விஜய்க்கு சவால் விட்டு ரிலீஸ் பண்ணு தலைவா’னு அவங்க வற்புறுத்துனாங்க. நம்புங்க... இதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு! ஆனா, விஜய் தம்பி என்னை போட்டியா நினைக்க மாட்டாருனு நினைக்குறேன்!''
''என் படத்தோட பேப்பர் விளம்பரங்களை வெச்சு நீங்க என்னைக் கலாய்க்கிறீங்கனு நினைக்கிறேன். ஆனாலும் பரவாயில்லை! இப்போ நான் நடிக்கிற படங்களை நீங்க பார்த்தா மனசை மாத்திக்குவீங்க. 'சீனு எம்.ஏ.பி.எல்.’ படத்துல வக்கீலா வந்து அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறேன். 'ஆனந்தத் தொல்லை’யில் கொடூரமான வில்லனா வர்றேன். (கொடூரமான வில்லனா... வில்லத்தனமான கொடூரனா?) 'மன்னவன்’ படத்துல ரொமான்டிக் ஹீரோ ரோல்ல மிரட்டி இருக்கேன். 'சுரங்கப்பாதை’யில என் ரோல் என்னன்னு கண்டு பிடிக்கிறவங்களுக்கு கால் பவுன் தங்கச் செயின் கொடுக்கலாமானு யோசிச்சுட்டு இருக்கேன்!''
''திட்டம்லாம் ஓ.கே. ஆனா, 'லத்திகா’ பட போஸ்டரை மாடுகூடத் திங்கலை... ஆனா, படத்துக்கு 200-வது நாள் கொண்டாட்டம்னு போஸ்டர் அடிக் கிறீங்க... ஏன் சார் இப்படி?''
''கலாய்க்கிறீங்க... சென்னை மகாலட்சுமி தியேட்டர்ல லத்திகா 150 நாள் ஓடுச்சு. அத்தனை நாளுக்கும் அந்தத் தியேட்டருக்கு வாடகையும் கரன்ட் பில்லும் நான் கொடுத்த ஆதாரம் இருக்கு. சொந்தக் காசு போட்டு டிக்கெட் வாங்கினது எல்லாமே ரசிக செல்லங்கள்தான். நம்புங்க... ப்ளீஸ்! இந்த வருஷம் என் ரசிகர்களைவெச்சு பெரிய மாநாடு நடத்தப்போறேன். அப்போ நிறைய அதிரடி காத்திருக்கு!''
''நானேதான் சார். ரசிகர்களுடன் நெருக்கமா இருக்கணும்னு ஆசை. அதான் கத்துக்கிட்டு களம் இறங்கிட்டேன். ட்விட்டர் அக்கவுன்ட் மூலமா ரசிகர்கள் என்னைப் பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க முடியுது. 'மயக்கம் என்ன’ பார்த்துட்டு நம்ம செல்வராகவன் தம்பிக்கு 'நாம சேர்ந்து யூத்தா ஒரு படம் பண்ணலாம்’னு ட்வீட் பண்ணியிருந்தேன். தம்பிக்கு என்ன வேலையோ? இதுவரை பதில் சொல்லலை! இதை நான் சீரியஸாவே சொல்றேன்னு போட்டுக்கங்க.''
''மிஸ் பண்ணிட்டோமே... நாம நடிச்சிருக்கலாமே’னு நீங்க நினைச்ச படம் எது?''
''எந்திரன்!''
''ஆமா.... ரஜினியோட எந்திரனேதான் சார்... இப்போ தனுஷோட 'மயக்கம் என்ன’ மாதிரி ஒரு ரோலுக்காக வெயிட் பண்றேன். யாராச்சும் அப்படி ஒரு கதையோட வந்தா, காலவரையற்ற கால்ஷீட் தர நான் ரெடி!''
''த்ரிஷா, ஹன்சிகா, ரிச்சா, அனுஷ்கா, அமலா பால் மாதிரியான ஹீரோயின்களோட எப்போ நடிக்கப்போறீங்க?''
''ஒய் திஸ் கொலை வெறி சார்... சங்கவியை ஃபிக்ஸ் பண்றதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு. அனுஷ்கா, ஹன்சிகாவுக்கெல்லாம் எங்கே போவேன்? ஆனா, என் ஒன்பது படங்களும் ரிலீஸ் ஆனதும் நான் மாஸ் ஹீரோ ஆகிடுவேன்... இதே கேள்வியை அவங்ககிட்ட கேட்பீங்க... அப்போ இது நடக்கும்... நடக்க வைப்பேன்!''
No comments:
Post a Comment