அஜீத் விஜய் நட்பு போல சிம்பு தனுஷ் நட்பும்? |
---|
ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த விஜய்யும்
அஜீத்தும் இப்போது அவ்வளவு குளோஸ் ஆகிவிட்டார்கள். வேலாயுதம் படத்தில்
வரும் மங்காத்தா பட பாடலை கூட விஜய்யின் சம்மதத்தோடுதான் வைத்தாராம் ஜெயம்
ராஜா. ஓய்வு நாட்களில் இரு வீட்டு திருமதிகளும் குழந்தை குட்டிகளுடன் சந்தித்து பொழுது போக்கிக் கொள்கிற அளவுக்கு ஆரோக்கியமாக போய் கொண்டிருக்கிறது பிரண்ட்ஷிப்.
இவர்களை அப்படியே பின் பற்றி வருகிறார்கள் தனுஷும் சிம்புவும். ஒருவர் படத்தில் மற்றவரை கேலி செய்த காலங்கள் போயே போச். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் சந்தித்து பேசவும் செய்கிறார்கள். இந்த நிலையில்தான் தனது திடீர் அதிரடியால் மீடியாவையும் மக்களையும் அதிர வைத்திருக்கிறார் சிம்பு. தனுஷின் வொய் திஸ் கொல வெறிடி பாடலும், ஒஸ்தியில் வரும் கலாசலா பாடலும்தான் இன்று இணையத்தை பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டி வைக்கும் பாடல். இதில் வெறுத்துப்போன பல சிம்பு ரசிகர்கள் ஃபேஸ்புக், ஆர்குட் இணையதளங்களில் தனுஷை அநியாயத்திற்கு கேலி பேசி வருகிறார்கள். இச்செயலை சிம்பு வன்மையாக கண்டித்துள்ளார். இது குறித்து சிம்பு தனது ஃபேஸ்புக் இணையத்தில் " எனது ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு ஒர் வேண்டுகோள். தனுஷ் எழுதி பாடியுள்ள பாடலை எனது பாடலுடன் ஒப்பீடு செய்யாதீர்கள். தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மற்றும் எனது நண்பர். இருவருமே ஒரே துறையில் தான் இருக்கிறோம். யாருக்கும் ஒரு பாடலை எழுதி பாட உரிமையுள்ளது. சிறு சிறு வார்த்தைகளை சேர்த்து பாடலாக்கி வருவது தற்போது பேஷனாகி உள்ளது. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆகையால் பாடலை கேட்டு சந்தோஷப்படுங்கள். கேலி செய்த என்னுடைய ரசிகர்கள் மீது கோபமாக இருக்கிறேன். கேலி செய்வதை நிறுத்துங்கள். நான் பாத்துக்குறேன்... ரிலாக்ஸ்! என்று கூறியுள்ளார். |
Sunday, November 27, 2011
அஜீத் விஜய் போல சிம்பு தனுஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment