Thursday, December 1, 2011

தனுஷ் நடிக்கும் ’3′-ல் சூப்பர் ஸ்டாரா?!


ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் ’3′ படத்தில் அவரது தந்தையும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள படம் ’3′. தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் வரும் ‘ஒய் திஸ் கொலைவெறி டி’ பாடல், எங்கு பார்த்தாலும் கொலை வெறி, கொலை வெறிதான். தனுஷ், தமிழையும், ஆங்கிலத்தையும் போட்டுக் குழைத்து உருவாக்கியுள்ள இந்தப் பாடல்தான் எங்கு பார்த்தாலும் கேட்கப்படுகிறது. ஏன் இந்த கொலை வெறி என்று கேட்கும் அளவுக்கு இந்தப் பாடல் மீது இளைஞர்களுக்கு பயங்கர கொலை வெறியாகியுள்ளது.

அந்த அளவுக்கு இந்தப் பாடல் அவர்களிடையே பிரபலமாகியுள்ளது. இதுகுறித்து தனுஷிடம் கேட்டால் பயங்கர குஷியாகி விடுகிறார். அந்தப் பாடலை ஆறே நிமிடத்தில் நான் எழுதினேன். இந்தப் பாடல் வரிகள் மகா எளிமையானவை. அதில் நிறைய இங்கிலீஷ் வார்த்தைகளை நான் பயன்படுத்தியுள்ளேன். அனைவருக்குமே புரியும்படியாக இதை எழுத நினைத்தேன். அதன்படியே அதுவும் வந்தது. இதை ஒரு பாடலாக பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை. இதுதான் இங்கு ஹைலைட். இதை தமிழிங்கிலீஷ் பாடல் என்று கூறி விட முடியாது. நான் ஆங்கிலத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும்கூட அதில் தமிழ் வாசனை வீசும் (அப்டியா..??) அனைத்துத் தமிழர்களும் இதைக் கேட்க வேண்டும் என்பதே அதற்குக் காரணம் (ஓஹோ…) என்கிறார் தனுஷ். தமிழர்கள் அத்தனை பேரும் இதைக் கேட்க வேண்டும் என்பது தனுஷின் விருப்பம்.
ஆனால் பாலிவுட்டில்தான் இதை மாய்ந்து மாய்ந்து கேட்டு வருகிறார்களாம். எப்படி இப்படியெல்லாம் தமிழில் கலக்குகிறார்கள் என்று அவர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கிறதாம். நாமும்தான் இந்தியில் ஆங்கிலத்தைப் போட்டு கிண்டிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் தனுஷ் மாதிரி நம்மால் செய்ய முடியாமல் போனது ஏன் என்ற சிந்தனையில் பாலிவுட் மூழ்கியுள்ளதாம். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கேட்கிறது. யாரைப் பார்த்தாலும் ‘ஒய் திஸ் கொலைவெறி’ப் பாட்டைத்தான் பாடுகிறார்கள்.
அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டது. இந்நிலையில் ’3′ படத்தில் தனது செல்ல மகளுக்காக ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது. உடல் நிலைத் தேறியதும் ஷாருக் கானுக்காக மும்பை சென்று ‘ரா ஒன்’ படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தார் ரஜினி. தனது மகள் இயக்கி, மருமகன் ஹீரோவாகவும், தனது நண்பர் கமல் மகள் ஸ்ருதி ஹீரோயினாகவும் நடிக்கும் படத்தில் கௌரவத் தோற்றத்தில் வரமாட்டாரா என்ன? தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ’3′ படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளது. இந்நிலையில் ரஜினி வேற நடித்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட்தான்.
அப்டிபோடுங்க… ஏன் இந்த கொலவெறி?

No comments:

Post a Comment

my blog recent