Saturday, December 3, 2011

அதிமுகவில் நடிகர் வடிவேலு?




நடிகர் வடிவேலு அதிமுகவில் சேர உள்ளதாக வெளியான தகவலால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். 
அப்போது விஜயகாந்த் எனது எதிரி என்று அவரை கடுமையாக தாக்கிப் பேசினார். எனினும் தனது பேச்சின்போது அதிமுகவையோ, அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதாவையோ அவர் விமர்சிக்கவில்லை.
இந்த நிலையில் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததால் வடிவேலு அதிர்ச்சி அடைந்தார். படங்களில் எதுவும் நடிக்காமல் விலகியே இருந்து வந்தார். உள்ளாட்சித் தேர்தலின்போது யாருக்கும் அவர் ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
இந்தநிலையில் வடிவேலு அதிமுகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன் திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தரும், அதிமுகவில் சேரப்போவதாக கூறப்படுகிறது.
இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்தும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விஜயகாந்தை வைத்து ராவுத்தர் நிறைய படங்கள் தயாரித்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இப்ராகிம் ராவுத்தர் காங்கிரசில் இணைந்து செயல்பட்டார். 
மூப்பனாருக்கு நெருக்கமானவராகவும், இருந்தார். இப்போது அவர் அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வடிவேலுவும், இப்ராகிம் ராவுத்தரும் நேரில் சந்தித்து அதிமுகவில் சேருவது குறித்து ஆலோசித்ததாகவும் திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

No comments:

Post a Comment

my blog recent