Thursday, December 1, 2011

தமிழ் படங்களை தாங்கிப் பிடிக்கும் சந்தானம்

எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் படத்தில் அவரை விட வெயிட்டாக வந்து கலக்குவது கூடவே வரும் காமெடியன்களாகத்தான் இருக்கிறார்கள்.

வடிவேலு நடிப்பில் வெளிவந்த பல படங்களில் ஹீரோ டம்மி பீஸ் என்றாலும் கூட படங்கள் விலை போகவும் ஓரிரு நாட்கள் தாக்குப் பிடிக்கவும் காரணம் வடிவேலுதான். இப்போது அந்த இடத்தை பிடித்திருக்கிறார் சந்தானம். திரையில் சந்தானத்தைப் பார்க்கும் போது முன்னணி ஹீரோக்களுக்கு வரும் விசிலை விட அதிக ஆரவாரத்தை ரசிகர்கள் மத்தியில் காண முடிகிறது.

ரசிகர்கள்தான் சந்தோஷப்படுகிறார்கள் என்றில்லை படங்களை வாங்கும் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கூட படத்தில யாரு காமெடி சந்தானமா…? என்று ஆர்வத்தோடு கேட்கிறார்களாம். இன்றைய தேதியில் பிஸி நடிகராக வலம் வரும் சந்தானம் படத்தில் நடித்துக் கொடுப்பது, டப்பிங் பேசுவதோடு சரி. படம் சம்பந்தப்பட்ட பிரமோஷன்களில் கலந்து கொள்ளவே மாட்டார். அந்த நேரத்தில ஏதாவது படத்தில நடிச்சு காசு தேத்திரலாம் என்பதுதான் அய்யாவோட ஐடியாவாம்.

No comments:

Post a Comment

my blog recent