Wednesday, September 14, 2011

ajith simbu again venkatprabhu

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்

September 14, 2011
 மங்காத்தா படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் டைரக்டர் வெங்கட் பிரபு, அடுத்தும் அஜித்தை வைத்து ஒரு படம் பண்ணப்போகிறார். கூடவே இந்த படத்தில் அஜித்துடன் சிம்புவும் நடிக்க போகிறாராம். தொடர்ந்து தோல்வி படங்களாக இருந்த வந்த அஜித்திற்கு, தனது 50வது படமான மங்காத்தா அவருக்கு ஒரு பெரிய மாஸ் ஹிட் என்றே சொல்லலாம். அஜித்தின் இந்த வெற்றியால் அவரது மார்க்கெட் பழையபடி உயரத்தொடங்கியுள்ளது. மேலும் பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அஜித்தை வைத்து இயக்க போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அஜித்தின் இப்போதைய சாய்ஸ் விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு, விஜய் ஆகி‌ய மூவரும் தான்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும், இந்தபடத்தை வெங்கட்பிரபுவே இயக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அதுஎன்னவென்றால், தான் ஒரு அஜித் ரசிகன் என்று வெளிப்படையாகவே கூறிவரும் சிம்புவும், இந்தபடத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்க இருக்கிறாராம். மு‌ம்பை கார்ப்பொரேட் நிறுவனத்துடன் இணைந்து ஏ.எம்.ரத்னம் இந்தபடத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதுபற்றிய உறுதியான அறிவிப்பு வெளியாகும் என்று ‌கூறப்படுகிறது


News Source: http://cinema.dinamalar.com/tamil-news/5145/cinema/Kollywood/.htm

No comments:

Post a Comment

my blog recent