தலைப்பைப் பார்த்து இதுதான் விடயம் என்று இலகுவாக புரிந்துகொண்டவர்களுக்கு பாராட்டுக்கள். புரிந்து கொள்ளாதவர்கள் கூட இது அதுவா இருக்குமோ அல்லது இதுவா இருக்குமோ என்றெல்லாம் அதிகம் ஜோசிக்கத் தேவை இல்லை. இந்த விடயத்தில் இது தான் எனது முதல் பதிவு ஆனால் அதிகமான பதிவர்கள் இந்த விடயத்தை தாராளமாக, பிய் பிய்யென்று பிய்யத்துத் தள்ளிவிட்டனர். அதுவும் இந்த விடயத்தைப் பற்றி பேசாத கொழும்புப் பதிவர்களே இருக்க மாட்டார்கள் என்பது வெளிப்படை உண்மை.
சரி விடயத்திற்கு வருவோம். முதல் அந்த உண்மைக் கதை. பின்னர் அது தொடர்பான எனது பார்வை. அதன் பின் உங்கள் பார்வை பின்னூட்டமாக. ஓகே..??..ஓகே!!
வழமை போலவே காலையில் எழுந்து பற பற என்று ஆடைகளை அயன் செய்து மாட்டி, அக்கா தயாரித்த பால் கோப்பியையும் அரைவாசியில் வைத்துவிட்டு எனது இறுக்கமான காலணிகளை மாட்டிக்கொண்டிருந்தேன் அந்த எனது கட்டிலின் மேல். ‘பஸ்சுக்கு சில்லறை இருக்கா தம்பி..’ என அக்கா கேட்ட போதுதான் அட இன்றும் எனது கார் இல்லை என்பது ஞாபகம் வந்தது. ‘அட ராமா.. இண்டைக்கும் பஸ்சா..??’ என அலுத்துக்கொண்டு சட்டைப் பைக்குள் அக்கா வைத்த அந்த இருபது ரூபா நோட்டை கையிலெடுத்துகொண்டு அந்த பேருந்து தரிப்பிடம் நோக்கி ஓடினேன்.
சில வேளைகளில் காரியாலயத்திற்கு பேருந்தில் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தால் நான் எனது இல்லத்திலிருந்து 154 என்கின்ற பாதையில் செல்லும் பேருந்தில் ஏற வேண்டும். (மிக அரிதான முடிவுதான்.. காரணம் கொஞ்சம் சோம்பேறி.. ஆதலால் காரில் ஏறி மிதிப்பதே இலகு என்பதால் பேருந்தை அதிகம் விரும்புவது இல்லை..) இது கிரிபத்கொடவில் இருந்து அங்குலான வரை போகும் பேருந்து. இன்றும் அதே பேருந்து வழமைபோலவே போதுமான அளவு சன நெரிசல் (இந்த பேருந்துகளில நொங்கு நொங்கு எண்டு நம்ம கால மிதிக்கேக்க வரும் பாருங்க ஒரு கோவம்…ம்ம்..)
கொழும்புவில் பேருந்துகளில் செய்யும் பயணங்களைப் பற்றி அதிகம் சொல்லத்தேவை இல்லை. சில பாதைகளில் ஓடும் பேருந்துகளில் வெறும் இருக்கைகளை பார்ப்பதே அரிது.. அவ்வாறான ஒரு பேருந்து பாதையே இந்த 154 உம். இதற்கு இப் பேருந்து கொழும்புவின் மிக முக்கியமான பகுதிகளாகிய கொழும்பு 7,பொரளை, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை போன்ற பகுதிகளினூடாக பயணிப்பதே முக்கியமான காரணம் எனலாம். சரி விடயத்திற்கு வரலாம். இவ்வாறான ஒரு சன நெரிசல் நிறைந்த, பொது பேருந்தில் இன்று காலை நடந்த ஒரு சம்பவமே இது.
ஒருவாறு வாசலில் ஐந்து நிமிடங்கள் வௌவால் போல் தொங்கிக் கொண்டு பயணித்த எனக்கு ஒரு வயதானவரின் இறக்கம் கொஞ்சம்
நின்மதியைத் தந்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஒருவாறு இடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்று ஒரு இருக்கைக்குப் பக்கத்தில் எனது நிலையை இஸ்திரப்படுத்திக்கொண்டேன். ஒரு கை பேருந்தின் மேல் பிடியில், இன்னொரு கை முன் இருக்கையின் பிடிமானத்தில். எனது ஒரு கால் நிலத்தில் இன்னொரு கால் அருகில் நின்ற ஒரு அக்காவின் கால்களின் மேல் (சாரி அது நிச்சயமா ஆன்டியாத்தான் இருக்கணும்). அவர் அப்போதைய நிலைமையை சரியாக புரிந்து கொண்டவர் என்பதால் எனக்கு அதிகம் துன்பம் கொடுக்கவில்லை எனது கால்களை எடுக்கும் படி.
எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் ஒரு காதல் ஜோடி. (சொல்ல முன்னமே அந்த நிலைமையை கற்பனை செய்ய தொடங்கியிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்..) காலையிலேயே இடுப்பு வலிக்க வலிக்க இடிபட்டு ஆபீஸ் போற எனக்கு இந்த சீன் கலைப் பார்க்க எப்படி கடுப்பாகும் என்று உங்களுக்கே புரிந்திருக்கும். அவள் தோளில் இவன். இவன் கன்னத்தில் அவள் உதடு. இருவரின் கைகளும் ஒரே இடத்தில் (????). அவங்க பண்ணின அட்டகாசம் இருக்கே.. அப்பப்பா.. நான் வேற வயசுப் பையன், பக்கத்தில வேற ஒரு ஆன்டி, வெறுப்பு, அருவருப்பு, (கொஞ்சம் பொறாமை), கடுப்பு இதுகள் எல்லாம் சேர்ந்தால் எனக்கு எப்பிடி இருந்திருக்கும் எண்டு கொஞ்சம் ஜோசித்து பாருங்க மக்கள்ஸ்… இவ்வாறான காலை வேளை பேருந்து, மக்கள் நெரிசல் ஒருபுறம், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சுற்றும் முற்றும், இதற்குள் இவர்களின் இந்த கீழ்த்தரமான நடத்தை எவ்வாறான கோவத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.
படுக்கையறையில் பண்ண வேண்டியவைகளை ஹால் இல் பண்ணினீர்கள் விட்டோம். அதையே பின்னர் பார்க் இல் பண்ண ஆரம்பித்தீர்கள் சரி கண்டுக்கல. அதையும் தாண்டி அதை பீச், ஹோட்டல் எண்டு செய்ய ஆரம்பிச்சீர்கள், சரி பிழைச்சு போகட்டும் எண்டு சய்லேன்ட் டா இருந்திட்டம், இப்ப இந்த பப்ளிக் பஸ் லேயும் அத செய்ய தொடங்கிட்டீர்களே… விடுவோமா..??? ப்ளீஸ் விட்டிடுங்க..
அப்படியே அந்த இரண்டையும் இழுத்து ஒரு துவையல் துவைச்சா என்ன என்று வேற தோணியது எனக்கு. என்னபண்ணுறது.. மற்றவர்கள் போல அத கண்டுக்காதடா அமல்ராஜ் என எனக்கு நானே சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது (எங்க அத கண்டுக்காம இருக்கிறது… நம்ம கண்ணும் அங்கதானே போய் தொலையுது… கோவிக்காதேங்க.. வயசுங்க… இது வாலிப வயசுசுசு….) அந்த சத்தம் ஒரு கலக்கு கலக்கியது அந்த பேருந்தை.
‘யோவ் நீங்க டொரிங்டன் குத்தானே டிக்கெட் எடுத்தனீ.. இன்னும் இறங்கலையா…?’ என அந்த காதல் ஜோடியைப் பார்த்து சகோதர மொழியில் ஒரு விளாசல் விளாசினார் அந்த பேருந்து நடத்துனர். நடத்துனர் ஏற்கனவே அவர்கள் நடத்தைகளைப் பார்த்து கடுப்பாகியிருக்க வேண்டும்.. அவர் குரல் அதை உறுதிப் படுத்தியது. எனக்கு லைட் டா சிரிப்பு வர ஆரம்பித்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட அந்த சாஜஹான் மும்தாஜ் திறு திறு என்று முளிக்கத்தொடன்கினர்.
‘யோவ்.. உங்களத்தான்யா கேக்கிறன், இறங்கு இறங்கு..’ என திரும்பவும் கூச்சலிட அந்த மும்தாஜ் சிம்பிள் ஆ ஒன்னு சொல்லிச்சு பாருங்க.. பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்திச்சு..
‘அப்ப, எங்களுக்கு அங்குலானைக்கு ரெண்டு டிக்கெட் தாங்க..’
அங்குலான என்பது இந்த பேருந்தின் பயண முடிவிடம். இந்த மிருகங்களை ஒருவாறு இங்கயே இறக்கிவிட்டிடலாம் என கொஞ்சம் ஆருதாலை இருந்த அந்த பேருந்து நடத்துனருக்கு இவர்கள் டீலிங் கொஞ்சம் கடுப்பைத்தான் ஏற்படுத்தியது. இருந்தும் அது வியாபாரம் என்பதாலோ என்னவோ அதை ஒத்துக்கொண்ட நடத்துனர் பணத்தை வாங்கிக் கொண்டு இரண்டு சிட்டைகளை கிழித்துக் கொடுத்துவிட்டுப் போனார். நான் அந்த நடத்துனராக இருந்திருந்தால் சிட்டை என்ன அவர்கள் சட்டைகலையே கிளி கிளிஎண்டு கிழித்துக் கொடுத்திருப்பேன். ஆக, இவர்களுக்கு தேவை இந்த சில்மிசங்களே ஒழிய தாங்கள் எங்கு போகிறோம் எங்கு இறங்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. முடிவாக சொல்வதென்றால் ‘இத (காதல்/காமம்) தவிர வேற வேல வெட்டி ஒன்னும் இல்லை..
அரைவாசியில் இறங்க வேண்டிய இவர்கள் அந்த சில்மிச (காதல்/காம) லீலை சந்தோசத்திற்காய் எங்குவரை என்றாலும் போகலாம் என்கிறார்களே… ஐயோ.. யாரு பெத்த பிள்ளைகளோ… நல்ல வேளை அந்த பேருந்து காலி வரைக்கும் போறதாய் இல்லை. இவங்கள என்னதான் பண்றது.. இப்படிப் பட்டவங்களுக்கு கடப்பாறைய எடுத்து கபாலத்தில ஒரே போடா போடனுமுங்க… அப்பத்தான் சரி..
காதல் எவ்வளவு ஒரு புனிதமான விடயம். அதை வைத்திருக்க வேண்டிய இடத்தில் அளவில் வைத்திருக்கு பொழுதுதான் அதன் புனிதம் பாதுகாக்கப் படும். காதல் பகிரங்கமாக பகிரப்படலாம் ஆனால் காதலோடு கலந்திருக்கின்ற சில காம உணர்வுகளை பகிரங்கமாக பகிர்தல் என்பது காதலை ‘சீ’ என்று சொல்ல வைத்துவிடும். காதல் உணர்வுகள பகிரங்கமாக, வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் துணிவு என்னவோ இந்த கொழும்பு காதலர்களுக்கு மிக்க அதிகம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு தொந்தரவு இல்லையா, இது பொது இடமே, நிறைய மனிதர்கள் இருக்கிறார்களே என்கின்ற எந்த உணர்வும் அற்ற ஒரு படைப்புக்கள் இவர்கள். இவ்வாறான இழிவான விடயங்களுக்காகவே பேருந்துகளை விரும்பும் காதலர்கள் ஒருபுறம் இதை அடியோடு வெறுக்கும் பயணிகள் ஒருபுறம் இந்த கொழும்பில். இதில் அதிகமானவர்கள் மாணவர்கள் அல்லது படித்து முடித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் இருப்பவர்கள் என சொல்ல முடியும்.
நண்பர்களே, உங்கள் பாலியல் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதை உங்களுக்கென்று பிரத்தியேகமான ஒரு இடத்தில் வைத்து பரிமாறிக்கொள்ளுங்கள். அதேபோல எங்கள் பொது உணர்வுகளையும் நீங்கள் மதிக்க வேண்டும். இதுவே அவர்களுக்கு நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு விடயம்.
இந்த சிறுவனுக்கு இன்றைய நாள் எப்பிடி ஆரம்பிச்சிருக்கு எண்டு பாத்தீங்களா.. இந்த கறுமங்கள் எல்லாத்துக்கும் ஒரே ஒரு தீர்வு ‘எண்ட கார் வந்திடுச்சு……’
….