Wednesday, September 14, 2011

சிம்பு நண்பரைக் காதலிக்கிறார் டாப்ஸி!

Tapsee
‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. தற்போது இவர் ஜீவாவுடன் ‘வந்தான் வென்றான்’ படத்தில் நடித்துள்ளார். இது மட்டுமின்றி தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். வளர்ந்து வரும் நடிகையான டாப்ஸி அதற்குள் சிம்புவின் நண்பருடன் ஊர் சுற்றி, ஒன்றாக பழகி வருகிறாராம்.
டாப்ஸியுடன் பழகி வருபவர், வேறு யாருமல்ல சிம்புவின் நண்பரான நடிகர் மகத் தான் அந்த நபர். இவர் சிம்புவுடன் ‘வல்லவன்’ படத்தில் சிறு கேரக்டரில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கும் நெருங்கிய நண்பராக உள்ளார். இந்த நட்பினால் சமீபத்தில் ரிலீசான “மங்காத்தா” படத்தில் அஜீத்துடன் நடித்துள்ளார். தாராவியில் பார் நடத்தும் கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.

டாப்ஸியும் மகத்தும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கைகோர்த்தப் படி நடந்து செல்கின்றனராம். டாப்ஸிக்கு தமிழ் தெரியாது என்பதால் அவருக்கு தமிழை கற்று கொடுக்கிறாராம். படப்படிப்பின் போது டாப்ஸியின் சூட்டிங் முடியும் வரை அங்கேயே இருந்து அவரை அழைத்து செல்கிறாராம் மகத்.

No comments:

Post a Comment

my blog recent