எங்கேயும் எப்போதும் : ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்!
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸிடம்
உதவியாளராக பணிபுரிந்த சரவணன் என்பவர் இயக்குநராக அவதரித்து இருக்கும் படம்
எங்கேயும் எப்போதும். இப்படத்தின் நாயகனாக ஜெய், சர்வானந்த்தும்,
நாயகிகளாக அஞ்சலி, அனன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை பற்றிய
ஸ்பெஷல் ஹைலைட்ஸ் இதோ...
* எங்கேயும் எப்போதும் படத்தை, ஹாலிவுட் நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து முதன்முறையாக தயாரிப்பாளராக அவதரித்துள்ளார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். எங்கேயும் எப்போதும் படத்தின் கதையை சரவணன் சொன்னதும், உடனே தானே முன் வந்து தயாரித்துள்ளார் முருகதாஸ்.
* தீனா, ரமணா, கஜினி போன்ற படங்களுக்கு முருகதாஸிடம் உதவியாளராக இருந்த சரவணன், எங்கேயும் எப்போதும் படம் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார்.
* எங்கேயும் எப்போதும் படம், வேகத்தினால் ஏற்படும் விபத்து பற்றிய கதையம்சம் கொண்டது. ஒரு சில நிமிட ஆவசரத்தால் ஏற்படும் விபத்து, சிலரை வாழ்நாள் முழுவதும் பாதிக்கிறது. எனவே நிதானத்தையும், சாலை விதிகளையும் சரியாக கடைபிடித்தால், மனித விதியையும் வெல்லலாம் எனும் கருத்தை சொல்ல வருகிறது இந்தபடம்.
* படத்தில் ஜெய், அஞ்சலி, அனன்யா ஆகியோருடன் தெலுங்கு நடிகர் சர்வானந், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
* படத்தில் இரண்டு ஹீரோ, ஹீரோயின் என்பதால் இருவருக்கும் சமமான ரோல் கொடுத்து நடிக்க வைத்துள்ளார் சரவணன்.
* ஜெய் நகரத்து மார்டன் இளைஞனாக நடித்திருக்கிறார். அஞ்சலி நர்ஸாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கேட்டு கொண்டதற்கு இணங்க அஞ்சலி, தனது உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறார்.
* படத்தில் வில்லன்கள் யாரும் கிடையாது, விபத்தை வில்லனாக அமைத்து, அதனால் ஏற்படும் அடுத்தடுத்த திருப்பங்களை மையப்படுத்தி இரண்டேகால் மணி நேரத்தில் மிக அழகான திரைக்கதை அமைத்து இருக்கிறார் சரவணன்.
* படத்தில் பாடல்கள் அதிகம் தேவைப்படாததால், ஜெய்-அஞ்சலி டூயட் பாடலை தவிர, மற்ற பாடல்கள் அனைத்தையும் படத்தினுடையே தொடர்படுத்தி அழகாக படம்பிடித்து இருக்கிறார் இயக்குநர்.
* நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு அழகாக இசையமைத்துள்ளார் சத்யா.
* சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படத்தின் சூட்டிங் நடத்தியுள்ளனர்.
* படம் பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால், சாலை விதிகளை பின்பற்றுங்கள் என்னும் செய்தியை சொல்லவருகிறது இந்த எங்கேயும் எப்போதும் படம்.

Tags »
Engeyum Eppothum, Special highlights, எங்கேயும் எப்போதும், ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
Viewer's Comments :
No comments found
Post Your Comments for the Article
மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்
ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம் »
No comments:
Post a Comment