‘அந்த’ இரண்டு யானை! கவிஞரின் உறையவைத்த விளக்கம்
சந்தோஷ் சிவன் உருமி என்ற மலையாள படத்தை இயக்கி இருக்கிறார். இது
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ப்ரித்விராஜ்,
ஜெனிலியா, பிரபுதேவா, வித்யாபாலன், தபு, ஆர்யா மற்றும் நித்யா மேனன்
ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக்தேவ் இசையமைத்துள்ளார்.
பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார்.
இந்த
படத்தின் இசை விழாவில் பேசிய வைரமுத்து, இந்த படத்தில் பாடல் எழுதியதற்காக
நான் பெருமை படுகிறேன். தீபக் தேவ் அருமையாக இசையமைத்திருக்கிறார். இந்த
படத்தில் சங்க இலக்கிய மொழியை கையாண்டுள்ளேன். இந்த படத்தின் 15ஆம்
நூற்றாண்டு என்ற களம் தான் நான் பாடல் எழுத என்னை ஊக்குவித்தது.
உரை விட்டு வந்த வாளோ...
ஒளிவிட்டு வந்த வேலோ...
திருமகன் அவ்ன் யாரோ...
திருவுளம் புரிவாரோ... என்ற பாட்டு.
இதில் சங்க இலக்கிய மொழியை கையாண்டிருக்கிறேன்.
கமல்ஹாசன்
கூட பேசியிருக்கிறார் சினிமாவில் தமிழ் வளர்ப்பது கடினம் என்று, அவர்
எவ்வளவு நொந்து அதை சொல்லியிருப்பார் என்பது எனக்கு தெரிகிறது. ஆனால்
சினிமாவில் இன்னும் தமிழ் வளர்க்க முடியும் என்பதற்கு உருமி ஒரு எடுத்துக்காட்டு.
அந்த பாடலில் இப்படி ஒரு இடம் வருகிறது...
ஒரு பெண் போர்வீரனை நேருக்கு நேர் நோக்கி,
அதோ அதோ உன் ஒரு கரம் உருக்கி களிரொன்று எரிகின்றாய்...
இதோ இதோ என் இரு களிர் அடக்க என் குடில் வருகின்றாய்... என்று பாடுகிறாள்.
‘உன் ஒரு கையால் ஒரு யானையை அடக்கிவிட்டாய், என் இரண்டு யானையை அடக்க இப்போது நீ முயற்சி செய்கின்றாய்” என்பது அந்த வரிகளின் பொருள்.
அந்த
‘இரு களிரு’ என்ன என்பது அறிந்தோர் அறிவாராக, தெரிந்தோர் தெரிவாராக என்று
கவிஞர் சொல்லிக்கொண்டிருக்க... அரங்கத்தில் ஒருவர் மட்டும் கைதட்டினார்,
உடனே கவிஞர் அந்த ரசிகன் கை தட்டினான் அல்லவா, அவனுக்குத் தான் இந்த வரி.
இந்த வரியின் அர்த்தம் புரியாதவர்கள் அவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்
என்று சொல்ல அரங்கமே கைத்தட்டியது.
இது
நான் எழுதிய வரிகள் அல்ல... இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பு
புறநானூற்றில் வருகிர வரி. இந்த இரண்டாம் நூற்றாண்டில் வருகிற பாட்டை 15ஆம்
நூற்றாண்டு கதைக்கு 21ஆம் நூற்றாண்டில் எழுதியிருக்கிறேன். அதற்காக
சந்தோஷ் சிவனுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.
படத்தைப்
பற்றி பேசிய வைரமுத்து, இதில் ப்ரித்விராஜ் ஒரு வீரமுள்ள ஆண்மகனாக,
சிங்கம் போல வருகிறார். ஜெனிலியாவை படங்களில் பார்த்திருக்கிறோம், ஆனால்
இதில் அந்த பெண் வாள் ஏந்தி சண்டையிடும்போது ஆச்சரியமாக உள்ளது. அந்த
பெண்ணிடம் வாள் கொடுக்க வேண்டும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஏனென்றால் அந்த பெண்ணே வாளின் உயரம் தான் என்று கவிஞர் கிண்டலடிக்க அரங்கம்
அதிர கைத்தட்டு விழுந்தது.
லைலா
அவ்வளவு ஒன்றும் அழகில்லையாம். அவள் கருப்பாம். அவளின் மூக்கு சப்பையாக
இருக்குமாம். ஆனால் மஜ்னு சொல்கிறான்... அவளை என் கண்களைக் கொண்டு பார்க்க
வேண்டும். உங்கள் கண்களால் பார்த்தால் அவள் அழகி இல்லை. என் கண்களால்
பார்த்தால் அவள் பேரழகி என்றான். அது போல நாம் சந்தோஷ் சிவனின் கண்களால்
பார்க்க பழகிக்கொண்டால் உலம்க அழகாக தெரியும் என்று பேசினார் வைரமுத்து.
|
Tuesday, November 15, 2011
அந்த’ இரண்டு யானை-விஜய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment