வாட்டசாட்டமான ஜீவா !
அஜீத்
நடிப்பில் வெளிவந்த படங்களில் முக்கியமான படங்களை தேர்ந்தெடுத்தால், அதில்
'காதல் மன்னன்' மற்றும் 'அமர்க்களம்' இரண்டும் இடம்பெறும். அந்த இரண்டு
படங்களையும் இயக்கி அஜீத்திற்கு பெரிய ரசிகர்கள் வட்டத்தினை உருவாக்கியவர்
இயக்குனர் சரண்.சரண் இயக்கிய 'வட்டாரம்', 'அசல்' என இரண்டு படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் சரண்.
'வாட்டசாட்டம்' என படத்திற்கு பெயரிட்டு இருக்கிறார். படத்தின் நாயகனாக ஜீவாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார். படத்தின் நாயகி மற்றும் டெக்னிஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
'கோ' படத்திற்குப் பிறகு ஜீவாவுக்கான ரசிகர் வட்டம் கூடியுள்ளது. எனவே, சரண் ஜீவா கூட்டணி தமிழ் திரையுலகில் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment