Wednesday, October 12, 2011

11-11-11… அரிதான நாளில் மோதும் சிம்பு – தனுஷ்!


11-11-11… அரிதான நாளில் மோதும் சிம்பு – தனுஷ்!

Published on October 12, 2011 by ctech52.blogspot.com
100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் அரிதான தேதி 11-11-11 இந்த ஆண்டு வாய்த்திருக்கிறது.
இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளில் படங்களை வெளியிடுவதை பெருமையாக நினைத்து ஹாலிவுட்டில் படங்கள் தயாராகி வருகின்றன. அதுவும் சினிமா ரிலீசுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை இந்த தேதி வருவது இன்னும் விசேஷமாகிவிட்டது
.
நம்மவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா… தியேட்டர் கிடைக்காததால் தீபாவளியன்று வெளியிட முடியாத சோகத்தை இந்த சிறப்பு நாளில் வெளியிட்டு தீர்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி, தீபாவளிக்கு வெளியாகவிருந்து சிம்புவின் ஒஸ்தியும், தனுஷின் மயக்கம் என்ன படமும் இந்த 11-11-11 தினத்தில் வெளியாகின்றன. இரு நாயகர்களுமே இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
11-11-11 குறித்து தெரிந்து கொண்ட பிறகு வேறு சிலரும்கூட தங்கள் படங்களை அந்த நாளில் வெளியிடலாமா என யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் ரிலீசான நாளை மறக்க முடியாது பாருங்கள்

No comments:

Post a Comment

my blog recent