Thursday, October 13, 2011

‘7ஆம் அறிவை’ முந்தும் ‘வேலாயுதம்’



‘7ஆம் அறிவை’ முந்தும் ‘வேலாயுதம்’
By ctech52.blogspot.com on oct 13,2011

இந்த தீபாவளி ரிலீஸ் பட்டியலில் அரை டஜன் படங்கள் இருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் பல படங்கள் பின் வாங்க ‘7ஆம் அறிவு’, ‘வேலாயுதம்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டும் களம் இறங்குகின்றன.
தரணி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஒஸ்தி’, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன?’ ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா, விஜய் படங்களே எல்லா தியேட்டரையும் ஆக்கிரமித்துக்கொள்ள, தியேட்டர் கிடைக்காத காரணத்தால் ‘மயக்கம் என்ன?’ வரவில்லை.
ஆனால் செல்வராகவனோ தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ரிலீஸ் வேலையில் இறங்கமுடியவில்லை என்று வேறு காரணம் சொல்லியிருக்கிறார். சிம்புவின் ஒஸ்தி படத்தின் வேலைகள் இன்னும் இருப்பதால் அதனை வெளியிட முடியாத சூழ்நிலை. அப்படியே படத்தின் வேலைகள் முடிவடைந்தாலும் தியேட்டர் கிடைப்பதில் ஒஸ்திக்கும் சிக்கல் என்பதால் நவம்பர் கடைசி வாரம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர்.
ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனை பொறுத்தவரை விழாக்காலங்களில் தனது படத்தை வெளியிட திட்டமிட்டால் தீபாவளி, பொங்கல் தினத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே ரிலீஸ் செய்துவிடுவார். இம்முறையும் அப்படியே செய்யப்போகிறார். 26-ந்தேதி தீபாவளி. அன்றைய தினமே ‘7ஆம் அறிவு’ வெளியாகிறது. ஆனால் ‘வேலாயுதம்’ படத்தை மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அதாவது 23-ந்தேதி (ஞாயிற்று கிழமை) வெளியிட திட்டமிட்டுள்ளார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

No comments:

Post a Comment

my blog recent