அவளும்... மழையும் ..
posted on 11 oct 2011 by ctech52.blogspot.com
இருக்கின்றன -உன் மேல்
மழை பொழிய வேண்டும் என்பதற்காக வெளியே வா அன்பே!
மழை பொழியட்டும்
மழை பொழியட்டும்
ஏன் இத்தனை
கூப்பாடு கலவியின் போது
மேகங்களே ? -உடனே
மழை பிள்ளை
பெறுவதாலா!
உன் மீது விழுவதை
தடுக்கும் குடையின் மீது
அதிக கோபத்தில் உள்ளதோ
மழை!
காற்றுடன் கைகோர்த்து
குடையை புரட்டி போடுகிறதே !
காரிருள் மேகங்கள்
உன் கூந்தலின்
கரிய நிறத்தை
கண்டு வெட்கப்பட்டு தான்
மழையாய் பொழிகிறதா
இப் பூமியில் ..
மழைக்கான காரணம்
நீ தானா!மழை மீது
தீராத காதல் ஏற்பட்டது
நீ வாய்
கொப்பளிப்பதை
பார்த்த பின் ...
No comments:
Post a Comment