Monday, October 10, 2011

அவனுங்க அவதார் எடுத்துட்டே அமைதியா இருக்கும்போது நாம 7 ஆம் அறிவுக்கே இப்படி ஓவரா


posted on 10 sep 2011 ,19:52
7 ஆம் அறிவு படம் வெளி வந்ததும்  700 வருஷ பாரம்பரியம் மட்டுமே இருக்கும் அமெரிக்காகாரன் முன்னேறிய அளவுக்கு பல்லாயிரக்கணக்கான வருட பாரம்பரியம் கொண்ட தமிழன் முன்னேற முடியாமல் போன காரணம் தமிழனுக்கு புரியும்... படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நான் தமிழன் என்னும் கர்வம் பிறக்கும் இப்படி ஏதோ ஏய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி லெவலுக்கு மேலே பேசி இருப்பவர் இயக்குனர் 
ஏ.ஆர்.முருகதாஸ்...

எனக்கு என்னமோ அவனுங்க "அவதார்" எடுத்துட்டே அமைதியா இருக்கும்போது நாம  "7 ஆம் அறிவு"க்கே இப்படி ஓவரா பேசுறதுதான் தமிழன் முன்னேறாம இருக்க காரணம்னு தோணுது
 ... அது சரி இதே படத்தை தெலுங்குளையும் , ஹிந்திளையும் ரீமேக் பண்ணும் போது என்ன வசனம் பேசுவீங்க?

-------------------------------------------------


ரா-ஒன்னில் ரஜினி ... இதுதான் இப்போதைக்கு தமிழ் சினிமா உலகில் ஹாட் டாபிக்... ஷாருக்கான் ரஜினியை தேடி போய் இந்த படத்தில் நடிக்க அழைத்ததால் ரஜினி நடித்து கொடுத்திருக்கிறார்... ஆனால் இது சம்பந்தமாய் பதிவுகளில் ரஜினி ரசிகர்கள் அடிக்கும் கூத்துக்களுக்கு அளவே இல்லை... ஏதோ ரா ஒன் படம் ஒரு குப்பை படம் போலவும் , ஷாருக் நடித்திருப்பதால் அது ஓடவே ஓடாதும் என்றும் இப்பொழுது ரஜினி ஒரு காட்சியில் நடித்து விட்டதால் , இந்தியா முழுவதும்  அந்த படம் வசூலை வாரி குவித்து விடும் என்றும் வழக்கம் போல  றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டார்கள்... ரஜினி நடித்திருப்பது படத்திற்க்கு கூடுதல் மதிப்புதான் இல்லை என்று சொல்லவில்லை , ஆனால் அது மட்டுமே படத்தை மிக பெரிய வெற்றி அடையசெய்து விடும் என்று சொல்லுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது... படம் வந்து பெரிய ஹிட் ஆகிவிட்டால் இவர்கள் ரஜினியால்தான் ஓடியது என்று சொல்லுவார்கள் , மீறி ஓடாவிட்டால் குசேலன் கதைதான்... இந்திய சினிமாவின் ஒரே உச்ச நட்சத்திரம் ரஜினிதான்  , ஆனால் அதற்காக அவர் நடித்தால் மட்டுமே எந்த படமும் ஓடும் , இல்லை என்றாள் ஓடாது என்று சொல்லுவதெல்லாம் முடியல சாமீ .. கண்ண கட்டுது ....  முன்னொரு காலத்தில் ரஜினிக்கு பலமாக இருந்த அவர் ரசிகர்கள் ஏனோ இப்பொழுது அவருக்கு பலவீனமாக மாறிவிட்டார்கள்.... ஆனால் ஒன்று உறுதி ரா-ஒன் மூலம் ஷாருக் தென்னிந்தியாவிலும் , ரஜினி வட இந்தியாவிலும் தங்கள் மார்க்கெட்டை இன்னும் கொஞ்சம் உயர்த்தி கொள்ளுவார்கள்... இது இருவருக்குமே தங்கள் அடுத்தடுத்த ப்ராஜக்ட்டில் பணம் சம்பாதிக்க உதவும்...

No comments:

Post a Comment

my blog recent