வேலாயுதம் படத்தை முடக்குகிறாரா உதயநிதி ஸ்டாலின்?
வேலாயுதம் படம், விஜயோட படம். இது ஒன்னே போதும் அந்த படத்துக்கு எப்புடி
ஒரு ஒபெனிங் இருக்கும்னு சொல்றதுக்கு. மங்காத்தா ஓடின ஒட்டத்த பார்த்தா,
நிச்சயமா விஜய் ரசிகர்களது ஒட்டுமொத்த சப்போர்ட்டும் இந்த படத்துக்கு
கிடைக்கும். பாடல்கள் வெளிவந்தபோது இசை விற்பனையில் சாதனை செய்ததா
சொன்னாங்க, ட்ரைலர் பார்க்கும் போது ராஜாவோட கைவண்ணம் தெரியுது. ஆஸாத்
படத்தோட ரீமேக் தான்னாலும், ட்ரைலர் ஒன்ஸ் மோர் கேட்டு ரசிக்க வைக்குது.
தலைவர் சந்தானம் நடிச்சிருக்கற படம். ஓகே ஓகே ட்ரைலரே ஏழாம் அறிவுக்கு
எதிர்பார்ப்ப எகுறவைக்குதுன்னா தலைவர் நடிச்சிருந்தா சொல்லவா வேணும். "இது
வரைக்கும் எந்த ஹீரோவும் இப்புடி பழி வாங்கி பார்ததில்லடாங்குற" தலைவர்
பஞ்ச் ஏற்கனவே பட்டய கெளப்புது. ஹன்சிகா படம்ங்குறதால இந்த படம்
ஜெயிக்கணும்னு ஏற்கனவே பூஜை எல்லாம் வேற நடக்குது. தளபதி மாஸ், ராஜா
கிளாஸ், ஹன்சிகா பீஸ் எல்லாமே படத்துக்கு ஒரு பிளஸ்.
தமிழ் சினிமாவுல இந்த ஹய் வால்டேஜ் மோதல் நடந்து பல வருஷங்கள் ஆகிட்டதால,
இந்த தீபாவெளி ரொம்ப சூடாவே இருக்கு. தமிழ்நாட்டில் மட்டும் இருநூறு
திரையரங்குகள் வேலாயுதத்துக்கு ஒதுக்கப்பட்டதா கொஞ்ச நாள் முன்னாடி ஒரு
நியூஸ் வந்தது, இப்ப ட்விடர்ல உதயநிதி ஸ்டாலின் ஏழாம் அறிவு திரைப்படம்
திரையிடப்படும் தியேட்டர் விபரங்களை ஊர் வாரியாக அறிவிச்சிகிட்டு வர்றாரு.
இது சற்றே வேலாயுதம் கணக்க தாண்டும் போல தெரியுது. அதை பார்த்து கடுப்பான
விஜய் ரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து உதயநிதி என்னமோ விஜய் படத்தை வெளியிட
விடாமல் எல்லா தியேட்டரையும் ப்ளாக்(block) பண்ணறதா குற்றப்பத்திரிகை
தாக்கல் செஞ்சிருக்காங்க.
காவலன் வந்தபோ சன் பிக்சர்ஸ் உண்மையில் எதாவது இடையூறு விளைவித்தார்களா
இல்லை வேறு எதாவது அரசியலான்னு இன்னும் எங்களுக்கு புரியல. ஆனா உதயநிதி
அப்புடி பண்ற ஆள்மாதிரி தெரியல. மேலும் அவரும் விஜயும் பால்ய கால
நண்பர்கள். முதல் தயாரிப்பே விஜய் நடித்த குருவி. இப்பேர் பட்டவர்
விஜய்க்கு எதிரா நடந்துப்பாரான்னும் தெரியல. அவரு என்ன பண்றார்னா எங்க
எங்க படத்தை ரிலீஸ்பண்ணா கலெக்ஷன் பார்க்க முடியுமோ அந்த தியேட்டர்ஸ தன்னோட
படத்துக்காக புக் பண்றார் ஆனா பிளாக் பண்ணல. ஒரு தயாரிப்பாளரா அவரு
செய்வது நியாயமானதே. ஆஸ்கர் ரவிச்சந்திரனும் முந்தி கொள்ளனும். (தியேடர்ஸ்
புக் பண்றது ப்ரோடுசரா, இல்ல டிஸ்ற்றிபியூடரா? எந்த படத்த நம்ம தியட்டர்ல
ரிலீஸ் பண்றதுன்னு முடிவு பண்றது இவங்களா இல்ல தியட்டர் ஓனரா? #டவுட்டு)
உண்மையிலேயே ஒரு படத்தோட வெற்றி நடிகர்லையோ, தயாரிப்பாளர்லையோ
தங்கியிருக்கான்னு தெரியல, படத்தோட கான்டென்ட் அத படமாக்கிய விதம், இதுதான்
முக்கியமானதுன்னு படுது. அதிக தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணப்பட்டால்
குறுகிய காலத்தில் அதிக லாபம் அடைய வாய்ப்பு இருப்பது உண்மை எனினும்
அதற்க்கு விதிவிலக்காக பல படங்கள் உள்ளன. அதிக திரயரங்குகள்ள வெளியான
எத்தனையோ மொக்க படங்கள் ரெண்டு வாரம் கூட ஓட முடியாம அட்டர் பலாப்
ஆகியிருக்கு. குறைந்த திரயரங்குகள்ளேயே வெளியாகி நிறைய படங்கள் மெகா
ஹிட்டாகியிருக்கு. நாம எந்த நடிகரோட ரசிகர்ங்குறது முக்கியமில்ல, எல்லா
நடிகர்களையும் மதிக்கக்கூடியவர்களா இருக்கணும். யாரு படம் எடுத்தாலும்,
யாரு தயாரிச்சாலும், எத்தன தியட்டேர்ல ரிலீஸ் பண்ணினாலும், அந்த படத்தோட
தலை எழுத்த தீர்மானிக்கறது நாமதான். எங்கள பொறுத்தவரை வேலாயுதமும்
ஜெயிக்கணும், ஏழாம் அறிவும் ஜெயிக்கணும். அது ரசிகர்களான நம்ம கையில்தான்
இருக்கு.
தீபாவளி ரேஸ் இப்பவே கள கட்ட ஆரம்பிருச்சு. வேலாயுதம், ஏழாம் அறிவு,
மயக்கம் என்ன, ஒச்தின்னு பல படங்கள் வரிசையில நிக்குது. போதும் போதாததுக்கு
ஷாரூக் கானோட ரா-1, சூப்பர் ஸ்டார் ஒரு சீன்ல நடிச்சிருக்கறதால அதையும்
லேசுல கை கழிவிட முடியாத நிலை. கூட்டமா படங்கள் ரிலீசானா சில படங்களுக்கு
நிச்சயம் டேமேஜ் ஜாஸ்தின்னு சின்ன பையனுக்கு கூட தெரியும். அதனால ஒஸ்தி
கொஞ்சம் முன்னமே போட்டியில் இருந்து ஜகா வாங்கி கிட்டு 11/11/11 என்னும்
ஸ்பெஷல் டேட்டில் ரிலீசாகும்ன்னு அறிவிச்சுட்டாங்க. மயக்கம் என்ன இன்னும்
மயக்கத்தலயே இருக்கு, தீபாவளிக்கு முன்னரா, பின்னரா இல்ல தீபாவளி
போட்டியான்னு இன்னும் குழப்பமாவே இருக்காரு அண்ணன் செல்வராகவன். ஆக தீபாவளி
ஜல்லிக்கட்டு போட்டியில் இருப்பதாக உறுதியளித்துள்ள நேரடி தமிழ் படங்கள்
விஜயின் வேலாயுதமும் சூர்யாவின் ஏழாம் அறிவும் மட்டும்தான். அதிலும்
வேலாயுதம் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் எனவும் ஏழாம்
அறிவு தீபாவளி அன்னிக்கு ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிச்சி இருகாங்க. இந்த
ரெண்டு படமும் செம எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவருபவை.
ஏழாம் அறிவு, மறக்கடிக்கப்பட்ட ஒரு தமிழனின் கதை அப்பிடின்னு முருகதாஸ்
சொல்லியிருக்காரு. கஜினி காம்போ, ஸ்ருதி ஹாசன், வியட்நாம் வில்லன், மார்ஷல்
ஆர்ட்ஸ், ரவி கே சந்திரனோட கேமரா வொர்க், மெடிக்கல் த்ரில்லர் அப்புடி
இப்புடின்னு படத்துக்கு ஏகப்பாட்ட வேலியு. வெளியான பாடல்களும் பாடல்
வியாபாரத்தில் ஒரு சாதனை படைச்சிருக்கு அப்புடின்னு சொல்லி வேற பீதிய
கேளப்புறாங்க. வெளிவந்த ட்ரைலர் வேற படத்துல என்னமோ விஷயம் இருக்குன்னு
சொல்லுது. சூர்யா படம்னாலே, தெலுங்கு மார்கெட் வேற பெருசா இருக்கும், போதா
கொறைக்கு ஹிந்தில வேற எல்லாருமே பாத்திட்டு இருக்காங்க ரிமேக்குறதுக்கு. மேகிங் டிபார்ட்மென்ட்ல நிச்சயமா இது ஒரு டாப் படமா இருக்கும்ன்றது நம்மளோட மட்டுமில்ல, பலபேரோட எதிர்பார்ப்பு. ஏழாம் அறிவு கூட தலைவர் சந்தானத்தின் ஓகே ஓகே பட டீசெர் வேற வர இருக்கு. இப்பிடின்னு ஏகப்பட்ட எக்ச்பெச்டேசன்.
No comments:
Post a Comment