Thursday, October 13, 2011

மெழுகுவர்த்தி' இருட்டில்.. தீபாவளிக்குத் தயாராகும் தமிழகம்!

'மெழுகுவர்த்தி' தீபாவளிக்குத் தயாராகும் தமிழகம்!




தீபாவளி பண்டிகை என்பது உலக அளவில் கொண்டாடும் ஒரு பண்டிகை. இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் மிக சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி என்றாலே வெடிகள் வெடிப்பது என்பது தான் எல்லாரது நினைவிலும் வருகிறது. அதுமட்டுமல்ல நண்பர்கள், உறவினர்களுடன் வீடுகளில் விருது, கொண்டாட்டம் என எண்ணற்ற நிகழ்ச்சிகள் உண்டு.

கொண்டாட்டம் ஒருபுறம் மகிழ்ச்சி தான் என்றாலும், மற்றொரு புறம் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய மின்தடை தான் மக்கள் நினைவில் நின்று பீதியை கிளப்புகிறது.

தமிழக மக்களை பாடாய் படுத்தும் மின்தடையால் வெறுத்து போன மக்கள் தி.மு.க. அரசை எதிர்கட்சியாக கூட அமர முடியாதபடி தோற்கடித்தனர்.

புதிய ஆட்சி வரும் போது இந்த தொடர் மின் தடைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என மக்கள் எண்ணினர். ஆனால் தற்போதைய ஆளுங்கட்சியினாலும், மக்களின் தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் முடியாமல், அதை விநியோகிக்கவும் முடியாமல் தவிக்கிறது.

தீபம் வைத்துக் கொண்டாடும் தீபாவளியை, மெழுகுவர்த்தியை கொண்டு கொண்டாட வேண்டிய நிலை வருமோ என்ற அச்சம் மக்கள் மனதில் இல்லாமல் இல்லை. பண்டிகை நாட்களில் சாதாரண நாட்களை காட்டிலும், மின்சார பயன்பாடு அதிகரிக்கும் என்பது, தமிழக அரசுக்கு மேலும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளது.

மின்சார உற்பத்திக்காக தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்கள் கடுமையாக போராடி தான் வருகின்றன என்பது தமிழக மக்களுக்கு ஆறுதல் செய்தி. பண்டைய காலம் தொட்டே ஆசிய கண்டத்தில் தீபாவளி கொண்டாடியதற்கான பல ஆதாரங்கள் உள்ள நிலையில், இருட்டில்.. தீபாவளி கொண்டாடியதாக வரலாறு இல்லை.

ஒரு வேளை வரலாறு இந்த முறை மாற்றி எழுதப்படுமா...?

No comments:

Post a Comment

my blog recent