Sunday, October 23, 2011

நம்பிக்கை ஏற்படுத்தும் வேலாயுதம்

நம்பிக்கை ஏற்படுத்தும் வேலாயுதம் இயக்குனர் பேச்சு!







“ரா-10 வந்தால் என்ன, எத்தனை அறிவு வந்தாலென்ன என் படம் ஜெயிக்கும். அவர்கள் படங்களும் ஜெயிக்கட்டும்” இது வேலாயுதம் இயக்குனர் ஜெயம் ராஜாவின் பேச்சு. அகங்காரம் இல்லாத அவரது பேச்சு படத்தின் வெற்றி மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. 



தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கடும் போட்டி ஒன்றுக்கு தயாராகின்றது தமிழ் சினிமா. இது “இலங்கை - இந்திய அணிகள் பங்கு கொண்ட உலகக் கிண்ண இறுதிப்போட்டி 2011” ஏற்படுத்தியிருக்கும் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் நம்மிடையே பரவியிருக்கின்றது.



காரணம் இரண்டு பெரும் படங்கள் நேருக்கு நேர் மோதப்போகின்றன. இந்த மோதல்கள் முன்னர் அடிக்கடி இடம்பெற்று வந்தாலும் அண்மைக்காலங்களில் உருவெடுத்த “சன் பிக்சர்ஸ்” மற்றும் “ரெட் ஜெயன்ட்” ஆகிய இரு தயாரிப்பாளர்களினால் மறைந்து போயிற்று. இவர்கள், தாங்கள் இட்ட முதலை திருப்ப பெறும் நோக்குடன் எந்தப் படத்தின் வசூலையும் எந்தப் படமும் பாதிக்காதவாறு திட்டமிட்டு படங்களை வெளியிட்டு வந்தனர். 








மஞ்சனத்தி மரத்துக்கட்டை

மைய வைச்சு மயக்கிப்புட்டாய் 

நாட்டுக்கட்டை டவுணுக்கட்டை

ரெண்டும் கலந்த செம கட்டை

கையிரண்டும் உருட்டுக்கட்டை





ஆனால் இந்த தீபாவளிக்கு தவிர்க்க முடியாமல் விஜய் - சூர்யா முட்டி மோதவேண்டியதாயிற்று. இரண்டு படங்களுமே ஆரம்பித்து ஒரு வருடங்களைத் தாண்டிய நிலையில் இரு நடிகர்களும் அடுத்த படத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் மற்றும் ரசிகர்களுக்கு தீனி போட வேண்டிய கட்டாயம். இரண்டையும் சரி செய்வதற்காய் களத்தில் குதித்திருக்கிறார்கள். 



தமிழ்நாடு முழுவதும் உதயநிதியின் பவரால் 7ஆம் அறிவு பல தியேட்டர்களை வாரிக்கொண்டது. வேலாயுதத்தை சன் பிக்சர்ஸ் எடுத்திருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். இப்பொழுது ஆஸ்கார் பிலிம்ஸே தனது தமிழ்நாட்டு விநியோகங்களைப் பார்த்துக் கொள்கின்றது. போட்டியை சமாளிப்பதற்காய் வேலாயுதம் ஒரு வாரத்திற்கு முதலே வெளியாகும் என்ற செய்திகள் வெளியாகிய போதும் அது தற்போது இல்லாமல் போயிற்று. ஆனால் தீபாவளிக்கு ஒரு நாள் முந்தையதாக 25ஆம் திகதி வெளியிடப்படும் என்ற பேச்சும் அடிபடுகின்றது. 



விஜய்க்கு வழமையாக கிடைக்கும் ஒரு சில தியேட்டர்களும் இம்முறை கை நழுவிப் போயிற்று. இருந்தும் தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய சரிக்கு சமனான தியேட்டர்களை இரு படங்களும் பெற்று விட்டது. (வேலாயுதம் சற்றுக் குறைவு - இங்கு வேலாயுதத்தின் பொருட்செலவை விட 7ஆம் அறிவின் பொருட்செலவு இரண்டு மடங்கு என்பதையும் கருத்தில் கொள்க. அதனால் போட்ட முதலை எடுக்க 7ஆம் அறிவு நிறையவே கஸ்டப்பட வேண்டியிருக்கும்)








இந்தியாவிற்கு வெளியே வழமைபோல விஜய் படம் அதிகளவில் விற்பனையாகியிருக்கின்றது. காரணம் வேலாயுதத்தினை உலகளவில் வெளியிடுபவர்கள் “ஐங்கரன் இன்டர்நெசனல்” நிறுவனத்தினர்;. உலகளாவிய தமிழ் சினிமா மார்க்கட்டில் ஐங்கரனை முந்துவதற்கு இன்னொரு ஆயிரம் கரனால் மட்டுமே முடியும். ரஜினியின் எந்திரனைக் கூட உலகளாவிய ரீதியில் பெரு வெற்றி பெற செய்தது ஐங்கரன் நிறுவனமே! (முதலில் எந்திரனை தயாரிக்க தொடங்கியதும் அவர்களே)



எந்திரனுக்கு அடுத்த படியாக அதிகளவான தியேட்டர்களை இங்கிலாந்தில் பெற்றிருக்கின்றது வேலாயுதம். நிச்சயம் பல பவுண்ஸ்களை அள்ளிக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக இந்தியாவுக்கு வெளியே விஜயின் எல்லாப் படங்களுமே மெகா ஹிட் தான். சச்சின், வில்லு, வேட்டைக்காரன், சுறா கூட அந்த வரிசையில் இடம்பிடித்தது. இலங்கையில் விஜய் படங்கள் ஒவ்வொன்றும் எப்படியான கலெக்சனை வாரிக்குவிக்கும் என்பதை நான் நேரிடையாகக் கண்டவன். இலங்கையில் ஒரு தமிழ்ப்படம் ஐம்பது நாளைக் கடந்து ஓடுவதென்பது பெரிய விடயம். விஜயின் பல படங்கள் அங்கு ஐம்பது நாளைக் கடந்திருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் சென்று ரிக்கட் எடுக்கும் இடத்திற்கு அருகில் பாருங்கள். (சந்தேகம் உள்ளவர்கள்)



வேலாயுதத்தின் உலகளாவிய மார்க்கட் சூடு பிடித்ததால் “7ஆம் அறிவு ரூபாய்களை அள்ள, வேலாயுதம் டாலர்களை அள்ளட்டும்”. பதிவு தலைப்பில் இருந்து திசைமாறிப் போகின்றது. கன்ரோல் வரோ…








விரலு வெண்டக்காய்

உன் காது அவரக்காய்

மூக்கு மொளகாய்

மூக்குத்திக் கடுகாய்

கனிந்த காய்த்தோட்டம் நீதானா?





வேலாயுதம் படம் தெலுங்கு ஆசாத்தின் ரீமேக் என்ற பேச்சு நேற்றுவரை முழுமையாக இருந்தது. அதற்குரிய விடையை நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இயக்குனர் ஜெயம் ராஜா கூறினார். “மூலக்கதை ஒன்றை எடுத்து அதற்கு நானாக கதை, திரைக்கதை எழுதி முதன் முதலில் தமிழில் நான் தரும் நேரடிப்படம் வேலாயுதம்” என்றார். படத்தின் வெற்றியை முற்று முழுதாக நம்புவதாக தெரிவித்த அவரது முழுமையான பேட்டியை பாருங்கள்.









காணொளி மட்டும் : நன்றி பிகைன்ட்வூட்ஸ் டாட் காம்

No comments:

Post a Comment

my blog recent