Wednesday, October 26, 2011

வேலாயுதம்-விஜய்-தி மாஸ்!!


வேலாயுதம்-விஜய்-தி மாஸ்!!



வேலாயுதம் வேலாயுதம்.
தீபாவளிக்கு ஊரெங்கும் இதே பேச்சு தான்.காவலன் கொடுத்த அவரேஜ் வெற்றியை தக்க வைக்குமா இல்லை மீண்டும் விஜய்யின் பழைய ப்ளாப் படங்களுடன் சேர்ந்துவிடுமா என்று பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம்.அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்திருக்கிறதா?

படத்தின் கதையை பலர் சொல்லி இருப்பார்கள்..கதை சொல்லி உங்கள் ஆர்வத்தை கெடுக்கவில்லை.ஆசாத் தழுவல் தான்.ஆனால் முழுமையான தழுவல் இல்லாமல்,ஜெயம் ராஜா முன்னரே கூறியது போல பல மாற்றங்களை செய்து தான் வேலாயுதத்தை உருவாக்கி இருக்கிறார்..கதைக்கு தேவையானது ஒரு மாஸ் ஹீரோ.அதற்க்கு தமிழ் சினிமாவில் மிகப் பொருத்தமானவர்,இந்த வேடத்துக்கு பொருந்த கூடியவர் விஜய் தான் என்பது வேலாயுதம் படத்தை பார்க்கும் போது தெரியவரும்!இதே கதாபாத்திரத்தில் ரஜனியையோ,அஜித்,கமல்,சூர்யா அல்லது வேறு யாரேனையும் பொருத்தி பார்க்க மனம் மறுக்கிறது.

படம் முழுவதும் அவ்வளவு வேகம்.ஆக்சன்,டான்ஸ் என அனைத்திலுமே!முதல் பாதியில் விஜய்யின் அறிமுகம் பலத்த சிரிப்பொலிகளை அள்ளி வீசியது!ஒரு கதாநாயகனால் இந்தளவுக்கு சிரிக்க வைக்க முடியுமென்பது...அது விஜய்'யால் மட்டுமே முடிந்த விடயம் இந்த காலத்தில்முதல் பாதி முழுவதுமே ஒவ்வொரு காட்சியிலும் கட்டாயம் ஒரு சிரிப்பாவது வரவைக்குமளவுக்கு இயக்குனர் மினக்கிட்டிருக்கிறார்!சந்தானத்துக்கு படம் தொடங்கி ஒரு மணி நேரத்துக்கு பின்னரே அறிமுகமே கிடைக்கிறது!!அவரும் தனக்கு கிடைத்த நேரத்தை காமெடியாக மாற்றி இருக்கிறார்!!சூட்கேஸ் ஒன்றை ஆட்டைய போட போயி வேஷ்டிக்குள் ஒழிக்கும் போது பார்க்கும் பெண் ஒருவர் "காம பிசாசு"என்று பேசிவிட்டு போவது "A " ரகம்! வழமை போலவே,வழமையிலும் விட மிக இளமையாக தெரிகிறார்.அடுத்த படமான நண்பனுக்கான ஆயத்தமோ என்னமோ,செம கியூட்!!

மாஸ் ஹீரோ,சூப்பர் ஹீரோ பாத்திரம் என்று ஜெயம் ராஜா கூறியபோது,குருவி மாதிரி நம்ப முடியாத விசயங்களை செய்து மீண்டும் வாங்கிகட்டப் போகிறாரோ என்று என் மனம் முதலே ஆதங்கப்பட்டாலும்,ஜெயம் ராஜாவுக்கு தெரிந்திருக்கிறது எதனை எப்படி செய்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று!

படத்தில் 95 %நம்பும்படியான விடயங்கள் தான்,சில விடயங்கள் சினிமாக்காக ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்,நாங்கள் பார்க்க போவது சினிமா,நிஜ வாழ்க்கை அல்ல,அந்த வகையில் வேலாயுதம் ஏமாற்றவில்லை..காட்சிகள் ஒவ்வொன்றினதும் கோர்வைகள் அழகு!!எதிலும் ப்ரேக் வரவில்லை!


பாடல் காட்சிகள்...முக்கியமாக "முளைச்சு மூணு'பாடல் படமாக்க பட்ட விதம் எக்சலன்ட்!!superb என்று பாராட்டினால் தகும்!ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வரைட்டி!நடனங்கள் கலக்கல்!!ஆனால் விசேடமாக பேச முடியாது நடனங்கள் சூப்பர் தான் ஆனால் வழமையான விஜய்யின் குத்து ஏனோ மிஸ்ஸிங்!சில்லாக்ஸ் பாடலில் இன்னமும் கொஞ்சம் நடனத்தை மெருகேற்றி இருக்கலாம்!!

இடைவேளையின் பின்னர் தான் பெரிதும் பேசப்பட்ட ரெயில் சண்டை!!தமிழ்பட வரலாற்றில் இவ்வளவு ஸ்பீடான ரெயில் சண்டையை நீங்கள் பார்த்திருக்க முடியாது!அதில் வில்லன் இறக்கிற மாதிரியான ஸீன்.சரி படம் முடிந்தா என்று பார்த்தால் இல்லை..அப்புறமா தான் தங்கையின் கல்யாணத்துக்கு ஊருக்கு வருகின்றனர்.மீண்டும் காமெடி கலக்கல் என்று படு சுவாரசியம்!!எதிர்பாராத ட்விஸ்ட் க்ளைமாக்சில்!!(ஆசாத் படத்தை பார்த்துவிட்டு ஒப்பிடாதீர்கள்).இரண்டு ஹீரோயின் படத்தில்.ஹன்சிகா ஜெனீலியா என்று இரு கதாநாயகிகளோடு விஜய்யை பார்க்கும் போது வித்தியாசமாய் ஒரு உணர்வு!!

ஜெனீலியாவை கண்டு பொறாமைப்பட்டு மந்திரித்த முட்டை வைக்கும் ஹன்சிகா வழமை போல கோதுமை குழையல் தான்!!அடிக்கடி ஹன்சிகாவின் இடுப்பும் தொப்புளும் தான் திரையை வியாபித்திருந்தது!!இன்னமும் வெளியில் வரவே இல்லை!!:)

அருகில் உள்ள நண்பன் ஒருவன்(விஜய் ரசிகன் அல்ல,படம் வெளியிடமுன்னரே படம் சொதப்பலமே என்று சொந்த காசில் கோல் பண்ணி கேட்டவன்)படம் சொதப்பல் மச்சான் என்றான்.ஏன் என்ன காரணம் என்று கேட்டேன்.இல்ல மச்சான் பிடிக்கல.ஏன்டா பிடிக்கல?என்ன காரணம்?படத்தில் குறைஎன்று கூற ஒரு காரணம் அவனுக்கு பிடிபடவில்லை.


வெறுமனே விஜய் படம் என்றால் சொதப்பல்,ஊத்திக்கும் என்று கதைப்பதால் தாங்கள் எதோ பெரிய பிலிம் டைரக்டேர்ஸ் என்று சிலரின் நினைப்பு!அவ்வாறு சொல்வதால் உங்களுக்கு யாராச்சும் மார்க்ஸ் கூட்டி போடப்போறாங்களா என்ன!தீவிர தல ரசிகன் ஒருவன்,என்ன மச்சான் படத்தில எத்தின பேரை விஜய் அடித்தவன் சொல்லு பார்ப்போம் என்றான்.பில்லா படத்தில் எத்தனை பேர் கோர்ட் சூட் போட்டார்கள் சொல் என்றேன்.பதிலில்லை.அந்தந்த படத்துக்கு தேவையானதை தானே செய்யமுடியும்!பில்லா படத்தில் கோர்ட் சூட் போடாமல் படம் எடுக்க முடியுமா?எடுத்தால் நன்றாக இருக்குமா?அதே போல மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றில் ஒருத்தன் இருவரை மட்டும் அடி வாங்க வைத்தால்....இதை ஒரு சாதாரண மனிதனால் கூட செய்ய முடியுமே!!அப்புறம் எதற்கு மாஸ் ஹீரோ படம்!!

வேலாயுதம் எப்படி என்றால் என்ன சொல்வது?அது பிழை இது பிழை என்று சுட்டி காட்ட பெரிதாக பிழைகள் இல்லை.ஒரு கில்லி மாதிரியோ,அல்லது சிவகாசி மாதிரியோ,போக்கிரி மாதிரியோ இல்லாமல்,அனைத்தையும் சேர்த்துக்கட்டி அடித்தால் எவ்வாறு இருக்கும்??மொத்தத்தில் விஜய்க்கு மீண்டும் ஒரு ஹிட்டு!!நண்பன் படத்துக்கான எதிர்பார்ப்புகளை இன்னமும் எகிறவைத்துள்ளது வேலாயுதம்!!

குறிப்பு:வேலாயுதம் நேற்றே வெளியாகி இருந்தாலும்,இப்போது தான் விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன.பலர் பார்த்துவிட்டு மற்றவர்களின் விமர்சனங்களை பார்த்து அதன் சார்பாக வெளியிடலாமா என்று வெயிட்டிங் போல!வழமை போல ஒருத்தன் கேவலமாக எழுதினால் மற்றவர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து எழுதுவது பதிவுலகில் சொல்லி தெரிய தேவை இல்லை.அதுவும் விஜய் படம் என்றால்...ஹிஹி!

No comments:

Post a Comment

my blog recent