சின்னத்திரையில் விஜய்
ஒரு கோடீஸ்வர கும்மாளம |
---|
Last Updated 4:45 Hrs [IST], October 28, 2011
|
மந்திரவாதியை வச்சு மத யானையை மடக்குன மாதிரி, அம்மாம் பெரிய ஸ்டாரான விஜய்யை
சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற வைத்திருக்கிறார்கள் என்றொரு
தகவல் வருகிறது கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான இடத்திலிருந்து. இதற்கு
விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்.... நிகழ்ச்சி என்ன,
அதன் தரம் என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே ஆசுவாசமாகக் கூடும்.
வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி. நிஜமாகவே இந்நிகழ்ச்சி மூலம் துட்டு பார்த்த புத்திசாலிகள் அனேகம் பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும். இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் நடத்தினார் நடிகர் சரத்குமார். அதன்பின் இதே மாதிரி நிகழ்ச்சிகளை வெவேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும் முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம். அவர்களின் சாய்ஸ் விஜய் மட்டுமே. எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இரங்கினாராம் விஜய். இப்போது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம். |
Friday, October 28, 2011
சின்னத்திரையில் விஜய்
Subscribe to:
Post Comments (Atom)
nice da machi
ReplyDelete